வணக்கம் பிள்ளையள் நான் சுருக்கு சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் இண்டைக்கு மயிர் வெட்டப் போனனான் . அங்கை ரெண்டு பெடியள் இருந்தாங்கள் . நான் கிளீன் ஷேவ்இல போனதாலை , என்னை ஒருத்தருக்கும் அடையாளம் காணேலாமல் போச்சுது . நான் மயிர் வெட்டிறவரிட்டை தலையை குடுத்துப் போட்டு இருந்தன் . அப்ப பாருங்கோ அதிலை ரெண்டு பேர் அரசியல் கதைச்சது என்ரை காதிலை எத்துப்பட்டுது . அதிலை ஒரு பெடி மற்றவனுக்கு தன்ரை அரசியலை எடுத்து விட்டான் . அது என்னண்டால் , நடைமுறைப் போராட்டம் எண்டால் என்ன நடைமுறைக்கு பணிஞ்ச போராட்டம் எண்டால் என்ன எண்டு ரெண்டாவது பெடிக்கு விளங்கப் படுத்தினான் . எனக்கு மண்டை கலங்கிப் போய் ஒரு கோதாரியும் விழங்கேலை . உங்களுக்கு ஏதாவது விளங்கீச்சுதோ பிள்ளையள் ??? விளங்கினால் இந்த சுருக்கு சுறுகருக்கும் சொல்லுங்கோ என்ன . அப்ப நான் வரட்டோ பிள்ளையள் ???
February 25, 2013
Comments
Post a Comment