Skip to main content

Posts

Showing posts with the label திருக்குறள் இலக்கியம்

பொருட்பால்-அரசியல்-வலி அறிதல்-The Knowledge of Power-Discernement de la force-471-480

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்  துணைவலியும் தூக்கிச் செயல். 471 செயலின் வலிமையையும் , தன் வலிமையையும் , பகைவனின் வலிமையையும் , துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்யவேண்டும் . என்கருத்து: "எதுக்கும் நாலுவளத்தாலையும் யோசிச்சு செய்யுங்கோடாப்பா எண்டு இந்த பெரிசுகள் எப்பவும் சொல்லுவினம் ". அது இப்பத்தான் எனக்கு விழங்குது. The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.  Considérer d'abord les difficultés de l'entreprise, peser ses propres forces, celles de, l'ennemi et celles des alliés ; agir ensuite. ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்  செல்வார்க்குச் செல்லாதது இல். 472 தன் சக்தியால் என்ன செய்யமுடியும் என்பதையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத பொருள் எதுவும் இல்லை. என்கருத்து: எண்ணிய காரியம் சிதறாது எண்டு சொல்லுவினம். ஆனால் ஒருத்தன் என்னதான் ஆள்ளணியள் துணையோடை பக்காவாய் ஒரு பிளா...

பொருட்பால்-அரசியல்-தெரிந்துசெயல்வகை-Acting after due Consideration-Manière d'agir en connaissance de cause. 460- 470

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்  ஊதியமும் சூழ்ந்து செயல். 461 ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.  எனது கருத்து: சிலபேரை பாத்தியள் எண்டால் எடுத்தன் கவுட்டன் எண்டு வேலையளை செய்யிறது. பேந்து அதிலை பிரச்சனையள் வரேக்கை கிடந்து முழிக்கிறது. முதலே பிளான் பண்ணி செய்தால் எடுத்த காரியம் வெற்றிதான். எப்பிடி அமெரிக்கா ஒரு அனியாயமான விசையத்திக்கு மற்றவையை தன்ரை பக்கம் கொண்டுவந்து ஈராக்கை அடிச்சுதோ , அப்பிடி செய்யவேணும் பாருங்கோ. Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed. Peser d'abord les conséquences désastreuses d'une entreprise, puis les avantages, enfin le profit qui peut résulter de ceux-ci et agir. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு  அரும்பொருள் யாதுஒன்றும் இல். 462  ஒருசெயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுவதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.  எனது கருத்து: ஐயா எல்...

பொருட்பால்-அரசியல்-சிற்றினம் சேராமை-Avoiding mean Associations-La non-fréquentation des gens Vils-Fréquentation des gens-45-460

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்  சுற்றமாச் சூழ்ந்து விடும் 451 பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்: சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர் . எனது கருத்து : இந்தக் குறளைப் பாக்க எனக்கு சிரிப்பாய் வருகுது . எப்பிடியெண்டால் படிச்சவன் பண்பானவன் செத்தாலும் குள்ளப் புத்தி உள்ள ஆக்களோடை சேரமாட்டான் அவையை எட்டத்திலைதான் வச்சிருப்பான் . ஆனால் இவை என்ன செய்வினம் அவன்தான் ராசா எண்ட கணக்காய் அவனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பினம் .  The great of soul will mean association fear The mean of soul regard mean men as kinsmen dear.  La Grandeur redoute la Vileté. La Bassesse s'apparente à la Vileté. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு  இனத்தியல்ப தாகும் அறிவு. 452  நீர் , தான் நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தன் இயல்பு திரிந்து அந்நிலத்தின் தன்மையுடையதாகும் . அதுபோல மக்களுக்கு அறிவு ,அவர்கள் சேர்ந்த இனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும்  எனது கருத்து : இடம் அறிந்து சேர் எண்ட ஒரு சொலவடை இருக்கு. ஒரு தண்ணி நிலத்திலை சேரேக்கை தன்ரை குணத்தை...

பொருட்பால்-அரசியல்-பெரியாரைத்துணைக்கோடல்-Seeking the Aid of Great Men-Soutien des Grands-441-450

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை  திறன்அறிந்து தேர்ந்து கொளல். 441 அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த ( சிறந்த ) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் . எனது கருத்து : அப்பிடி போடுங்கோ ஐயன் .  As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care.  Que (le Roi) recherche l'amitié des hommes intelligents plus âgés que lui et qui connaissent le prix de la vertu, en connaissance de la valeur de cette amitié et des moyens de l'obtennir. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்  பெற்றியார்ப் பேணிக் கொளல். 442  வந்த துன்பத்தை நீக்கி , இனித் தன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் .  எனது கருத்து :  ஓ..... அப்ப இதைத்தான் டிப்பளொமெசி எண்டு சொல்லுறதோ ஐயன்?  Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends.  Qu'il accorde toute satisfaction, à ceux qui sont...

பொருட்பால்-அரசியல்-குற்றம் கடிதல்-The Correction of Faults-De la repression des défauts-431 -440

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்  பெருக்கம் பெருமித நீர்த்து. 431  ஆணவமும் ( மதமும் ) , வெகுளியும் , அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது . எனது கருத்து: ஒருத்தர் எப்பிடியும் செல்வாக்காய் இருக்கலாம். ஆனால் அவருக்கு மண்டைக்கனம் , தொட்டதுக்கெல்லாம் சுடுதண்ணி ஊத்தின நாய் மாதிரி கோபப்படுகிறது , பொம்பிளை விசயங்களிலை அப்பிடி இப்பிடி இருக்கிறது , இவ்வளவும் இருந்தால் அவற்றை செல்வாக்கு செல்லாக்காசாய் போடும் பாருங்கோ. Who arrogance, and wrath, and littleness of low desire restrain,  To sure increase of lofty dignity attain.  la prospérité (du Roi) qui n'a pas d'arrogance, de colère et de luxure, va en florissant. இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா  உவகையும் ஏதம் இறைக்கு. 432 ஈயாத லோபமும் , மாட்சியில்லாத மானவுணர்வும் , தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும் .  எனது கருத்து:  நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் , தனக்கு சகுனப்பிழையெண்டாலும் எதிரிக்கு மூக்குடைஞ்சால் சரி எண்டு இருப்பினம் . அதோடை தன்ரைவயசிலையு...

பொருட்பால் - அரசியல் - அறிவுடைமை-The Possession of Knowledge -De l'entendement- 421 -430

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்  உள்ளழிக்க லாகா அரண். 421 அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும் , மற்றும் பகைவரால் அழிக்கமுடியாத உள் அரணும் ( கோட்டை ) ஆகும். எனது கருத்து : இதிலை வாழ்க்கைப் படிப்பும் ஏட்டுப்படிப்பும் ஒருத்தனுக்கு சேந்து இருந்தால் தான் , தன்னை சுத்தி இருக்கிற நல்லது கெட்டதுகளை அறியேலும் . தனிய ஏட்டுப் படிப்பு இருந்தால் அவன் படிச்ச கோமாளி. அவனுக்கு வலு சிம்பிளாய் ஆப்பு அடிக்கலாம். True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy.  L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ  நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422  மனத்தை அதுபோன போக்கில் போகவிடாமல் தடுத்து , தீமைகளிலிருந்து விலக்கி , நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும் .  எனது கருத்து :  இதை எங்கடை பெரிசுகள் "மதி இழந்தாலும் மந்தி கொப்பிழக்காது" எண்டு சொல்லுவினம். ஆனால் பெரிய ஹைரெக் குற்றவாளியளை பாத்தமெண்டால் நல்லாய் படிச்சிருப்பங்...

பொருட்பால் - அரசியல் - கேள்வி-Hearing-De l'audition-411-420

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. 411 கேள்விச் செல்வமே மற்றையெல்லாச் செல்வங்களிலும் உயர்வானது. ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்களில் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும். எனது கருத்து: இண்டையான் நிலமையிலை இந்தசெல்வத்தை பாக்கிறது கஸ்ரம். எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்கிற காலம் இப்ப. என்னைப் பொறுத்தவரையில ஒரு செய்தியை அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கவேணும். ஆனால் நானா நீயா அறிவிலை பெரிசு எண்ட ஈகோவால இந்த செல்வம் அல்லாடி, பெரிசாய் எடுபடுறேலை பாருங்கோ. Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. La richesse des richesses est celle de l'oreille. Elle est la première de toutes les richesses. செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412 காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில் , வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும். எனது கருத்து: இதை அவசியம் அத்தியாவசியம் எண்ட கோணத்திலை பாக்கவேணும். உலகத்திலை உள்ள மனிசருக்கு பசி எண்ட உணர்வுதான் அத்தியவசியம். அதுக்க...

பொருட்பால் - அரசியல் - கல்லாமை-Ignorance-Du Défaut d'Instruction-401-410

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய  நூல்இன்றிக் கோட்டி கொளல். 401 நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும். எனது கருத்து: இதைத்தான் ஆழம் அறிஞ்சு காலை விடவேணும் எண்டு சொல்லுவினம். ஒரு இடத்திலை ஒருவிசையத்தை பத்திக் கதைக்கவேணுமெண்டால் அதுசம்பந்தமய் சரியா தெரியவேணும். ஆனால் இந்த குப்பையில கிடக்கிற குண்டுமணி போலை இருக்கிற அறிவாளியளை எந்தவகையிலை சேர்க்கிறது? அவை எந்தப் புத்தகத்தை படிச்சவை ? Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share. Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière, c'est jouer aux dés sans damier. கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றுஅற்று. 402 கல்லாதவன் தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல் , இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும் எனது கருத்து: படிக்காதவன் படிச்ச இடத்திலை பேச ஆசைப்படுகிறது , மார்பகம் இல்லாத ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்ப...

பொருட்பால்-அரசியல்-கல்வி -Learning - De l’Instruction-391-400

  கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391 ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்கவேண்டும் அங்கனம் கற்றபிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும் எனது கருத்து : ஐயா ஒருத்தன் எல்லா காலத்திலையும் படிக்கிறான். ஒரு காலத்திலை பூமி தட்டை எண்டு அவன் படிச்ச கல்வி சொல்லீச்சுது. கொஞ்சக்காலம் போக இல்லை பூமி உறுண்டை எண்டு அதே கல்வி சொல்லீச்சுது. அப்பிடி பாத்தால் கல்வி கற்றல் எண்டதே மாறுகின்ற விசையம்தானே? இந்த கல்வியில் " ஏன் " " எப்பிடி" எண்ட கேள்வியள் வந்ததாலைதானே இண்டைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறினம். So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain. Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392 எண் என்று சொல்லப்படுவனவும் , எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர்...

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி- The Greatness of a King-Des qualités du Roi-381-390

படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. 381 படையும், செல்வமும், கூழும்,( குடிமக்கள் )அமைச்சும் , நட்பும் , அரணும் ,(கோட்டை) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண்சிங்கம் போன்றவன். என்கருத்து: வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் இந்த ஆறு விசையதிலையும் ஒரு அரசு முழுமையாய் இருந்தால் தான் அது ஒழுங்கான அரசு எண்டு ஐயன் சொன்னாலும் , இந்த அரசுகளுக்கு கோமாளியள் அல்லோ ஐயா அரசர்மாராய் வாறாங்கள் . அரசரும் மண்டையுக்கை சரக்கு இருக்கிற அரசர் வந்தால்தானே அரசும் ஒழுங்காய் இருக்கும் . An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. C’est un lion parmi les Rois, que celui qui est doté des six choses suivantes : armée, territoire peuplé, richesse, ministre, alliance et fortresse. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்குஇயல்பு. 382 மனவுறுதி , கொடை , அறிவு , ஊக...

அறத்துப்பால் ஊழியல் ஊழ் -Fate ,De la destinée-371-380

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. 371 செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்பொழுது, முயற்ச்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வரும். எனது கருத்து: ஒருத்தன் எப்பிடித்தான் தலைகீழாய் நிண்டாலும் விதியாலை வாற முயற்சி வந்து காசுபணம் கையுக்கு வந்து சேரும். இதுக்கு நேர்மாறாய் சோம்பல் வரும் இருக்கிற காசையும் துலைக்கிறதுக்கு . Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs. La Destinée, productrice de la fortune fait naitre l’effort; la Destinée destructrice de la fortune fait naitre la paresse. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. 372 செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயங்கம் ஏற்படும் . செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும் . எனது கருத்து: சிலபேரை பாத்தியள் எண்டால் நல்ல படிச்ச அறிவாளியளாய் இருப்பினம். ஆனால் காலம் ஆரைத்தான் விட்டுது பாருங்கோ , சிலநேரத்திலை லூசுவேலையளைப் பாத்து தங்கடை சொத்துபத்துகளை அழிச்சுப்போட்டுத்தான் இ...