Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-சமையல் குறிப்பு.

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் -பாகம் 14

உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு .  பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் :  நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 13

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி தேவையானவை: வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5 ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப் த‌‌யி‌ர் - 1 கப் ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4 ‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப் எலு‌மி‌ச்சை - 1 பக்குவம்: மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம். கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம். த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌ ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்த

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 12

தேவையானவை: ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி – பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால் பனங்கட்டி (கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு பக்குவம்: முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச் சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச் சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது கலவை: இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்துகொள்ளவும்.பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும். எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும் அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்… படிமானம்: பூவரசம் இலை அல்லது பிலா இலையிலை தொன்னை செய்து எல்லாரும் சுத்திஇரு

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 11

என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன். செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் . தேவையான பொருட்கள் : கிக்கினி காய் 6 .  உள்ளி 7 - 8 பல்லு . கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl . உப்பு தேவையான அளவு . முட்டை 3 . போர்மாஸ் துருவல் ( fromage rapé ) ( grated cheese ) 100 கிறாம் . கறுவாப் பட்டை தூள் தேவையான அளவு . வெங்காயம் 1 - 2 .ஓலிவ் எண்ணை 3 - 4 மேசைக்கறண்டி. பக்குவம் : கிக்கினிக் காயைக் கழுவி வட்ட வடிவில் வெட்டவும் .உங்கள் வெதுப்பியை 200 c யில் விட்டு சூடேற்றவும் . உள்ளியை உடைத்து நசிக்கவும் . முட்டையை உடைத்து கிறாம் லிக்கியுட் உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும் . நசித்த உள்ளி , உப்பு , கறுவாத் தூள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அடியுங்கள் . வெங்காயத்தை துப்பரவு செய்து வெட்டவும் . ஒலிவ் எண்ணையை ஒரு தாச்சியில் விட்டு சூடாக்கவும் . சூடான எண்ணையில் வெங்காயத

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 10

இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக்கறண்டி  பக்குவம் : வெதுப்பியை 250 யில் சூடாக விடுங்கள் . கத்தரிக்காய் , வாழைக்கய் ஆகியவற்றின் மேல்ப் பக்கத்தையும் , கீழ் பக்கத்தையும் கத்தியால் வெட்டுங்கள் . இரண்டையும் ஈயப்பேப்பறால் சுற்றி , கத்தியால் ஈயப்பேப்பறை சிறு ஓட்டைகள் போடுங்கள் . வெதுப்பி சூடாகியதும் ஈயப்பேப்பறால் சுற்றிய கத்தரிக்காயையும் ,வாழைக்காயையும் 30 - 40 நிமிடங்கள் வரை கிறில் செய்யுங்கள் . பச்சைமிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் துப்பரவாக்கி குறுணியாக வெட்டி எ

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 09

இது மிகவும் இலகுவான கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு பக்குவம் . நான் அடிக்கடி வீட்டில் செயவதும் இதைத்தான் . நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன ? தேவையானவை :  பசுமதி அரிசி 500 கிறாம் . கட்டித் தயிர் ( NATURE YOGURT ) 2 - 3 பெட்டி ( ஒவ்வொன்றும் 125 கிறாம் கொள்ளளவு கொண்டது). சின்னவெங்காயம் 10 . கடுகு அரை தேக்கறண்டி . வெள்ளை உளுந்து அரை தேக்கறண்டி பச்சை மிளகாய் 7 - 8 . இஞ்சி ஒரு துண்டு ( குறுணியாக வெட்டியது ) . உப்பு தேவையான அளவு . எண்ணை 3 மேசைக்கறண்டி . கருவேப்பமிலை 4 -5 இலை . கொத்தமல்லி இலை தேவையான அளவு . பக்குவம் : பசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி சோறு வடியுங்கள் . சோறு முக்கால் பதத்தில் இருக்கவேண்டும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு தாச்சியை சூடேற்றுங்கள் . எண்ணை கொதித்தவுடன் கடுகையும் , வெள்ளை உளுந்தையும் , கறிவேப்பமிலையையும் போட்டு வெடிக்க விடுங்கள் . தயிரையும் , உப்பையும் இஞ்சியையும் , தாச்சியில் போட்டவுடன் தாச்சியை இறக்குங்கள் .அதனுள் வெட்டிய பச்சைமிளகாய் , சின்னவெங்காயம் , சோறு என்பவற்றைப் போட்டு நன்றாகக் கி

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 08

இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் . சின்னவெங்காயம் 200 கிறாம் . பச்சைமிளகாய் 200 கிறாம் . வெந்தயம் 2 மேசைக்கறண்டி . பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு . தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு . உப்பு மஞ்சள் தேவையான அளவு . பக்குவம் : கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை பரவவும் . வெதுப்பியில் 300 பாகை c யில் பொன்நிறமாகும்வரை கிறில் பண்ணவும் ( *********** ) . தாச்சியில் சிறியளவு எண்ணையை விட்டு வெந்தயத்தை பொன்னிறமாகும்வரை பொரிக்கவும் . பின்பு பச்சைமிகாய் சின்னவெங்காயத்தை போட்டு வதக்கவும் . பழப்புளியை சிறிய அளவு தண்ணீரில் தடிப்பாகக் கரைக்கவும் . பச்சைமிளகாய் வெங்காயம் வதங்கியவுடன் , பொர

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 07

இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ .***** உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலவுங்கோ. பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலவுங்கோ. ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழையுங்கோ. அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கோ. பூவரசம் இலையின்******** மேல் துளி எண்ணை பூசி , உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாக வட்டமாகத் தட்டுங்கோ. நீங்கள் தட்டையாகத் தட்டுகின்ற வேளை வி

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 06

இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ? தேவையான பொருட்கள் : உள்ளி 10 - 12 பல்லு .  செத்தல் மிளகாய் 6 - 7 . **** தக்காளிப்பழம் 2 . கறிவேப்பமிலை 4 - 5 இலை. கல்லு உப்பு ( தேவையான அளவு ) . எண்ணை 5 தேக்கறண்டி . கடுகு கால் தேக்கறண்டி . பக்குவம் : தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு , சூடாக எண்ணை மெதுவாக மேலே வரும்பொழுது இறக்கி விடவும் . படிமானம் : தோசை , இட்டலி , றொட்டி , பாணுக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கோ பேந்து விடமாட்டியள் . ***** நல்ல உறைப்பாக வேண்டுமானால் செத்தல் மிளகாயின் அளவைச் சிறிது கூட்டுங்கள் . January 27, 2013

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 05

பூரி நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது . தேவையான சாமான்கள் : கோதுமை மா 2 சுண்டு ************* .ஆட்டா மா 1 சுண்டு .ரவை கால் சுண்டு .உப்பு ( தேவையான அளவு ) .வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் . எண்ணை 1 லீற்ரர் . பக்குவம் : கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக எண்ணை கொதித்ததும் , உருட்டிய பூரியை இரண்டு பக்கமும் பொரியுங்கள் . ( அப்பளம் பொரிப்பது போல ) அப்பொழுது பூரி பொங்கி வந்ததும் பூரியை இறக்குங்கள் . படிமானம் : உருளைக்கிழங்குப் பிரட்டல் , பருப்பு , சம்பல் , இதில் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடுங்கோ . சொல்லி வேலையில்லை . ******** சுண்டு = ரின்பால்பேணி . January 27, 201

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம்-பாகம் 04.

Crème brûlée - எரியூட்டிய கறமல் புடிங். நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் . 4 பேருக்குச் செய்ய, தேவையானவை:  மஞ்சள் முட்டைக் கரு 5. சீனி 100 கிறாம் .  100 வீதம் கிறீம் பால் 50 cl.  வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி .  பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு .  பக்குவம் :  ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் . பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங்கள் . வனிலா பிஃளேவர்ரையும் சேர்த்து நன்றாக அடியுங்கள் . வெதுப்பியில் (oven ) வைக்கக் கூடிய கிண்ணங்களில் அடித்த கறமல் புடிங் கலவையை ஊற்ருங்கள் . வெதுப்பியில் 100 பாகை சென்ரி கிறேட்டில் சிறிது நிமிடங்கள் வெதுப்பி சூடாக விடுங்கள் . பின்னர் கறமல் புடிங் கலவை ஊற்ரிய கிண்ணங்களை வெதுப்பியில் வைத்து ஒரு மணித்தியிலாம் வ

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் - பாகம் 03.

தேவையான பொருட்கள் : கோதுமை மா 1 கிலோ . தேங்காய் 1 . பச்சை மிளகாய் 7 அல்லது 8 . சின்னவெங்கயம் 250 கிறாம் . உப்பு தேவையான அளவு பக்குவம் : கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எடுக்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வை

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் - பாகம் 02.

இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன் பேர்வழி என்று சுட்டது. தேவையான சாமான்கள் : கரட் கால் கிலோ . செத்தல் மிளகாய் 6 . பழப் புளி (தேவையான அளவு ). கறிவேப்பமிலை 1 நெட்டு . வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி . கொத்த மல்லி 2 கரண்டி . தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) . கடுகு , உளுந்து அரைக் கரண்டி . எண்ணை கால் ரம்ளர் . ** கரண்டி = தேக்கரண்டி . பக்குவம்: ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் . கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை விட்டு 5 நிமிடங்கள்வரை வதக்குங்கள் . பின்பு தட்டில் வைத்திருந்தவற்ரைக் கரட்டுடன் சேர்த்து உப்பு , புளியும் சேர்த்து சிறிது வேக விடுங்கள் . பின்பு ஓரளவு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டுத் தேவயான அளவு தண்ணியும் விட்டு பசுந்தாக அரையுங்கள் . பிறகு தாச்சியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு

கோமகன் செப் Chéf இன் பக்குவம் - பாகம் 01.

தேவையான பொருட்கள்: பொன்னி அரிசி 3 கப் . மைசூர் பருப்பு 1 கப் . தக்காளிப் பழம் 3 அல்லது 4 . செத்தல் மிளகாய் 8 அல்லது 9 . உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு . கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு . மிளகாய்தூள் 1 1/2 கறண்டி . மஞ்சள் சிறிதளவு . பக்குவம்: பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 1/2 கறண்டி தூள் ஐயும் , மஞ்சளையும் போட்டு மூடியால் மூடி 2 விசில் விடுங்கள் . பிறசர் (Presher ) இறங்கியதும் திறந்து கொத்தமல்லிக் கீரையைப் போட்டு மூடி விடுங்கள் . கிச்சடி தயார் . இதுக்கு சேர்மதியாக பச்சடி செய்ய வேண்டும் . பச்சடி தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் 6 . யோகூர்ட் ( தயிர் ) 3 அல்லது 4 (125 g) பெட்டி . பச்சை மிளகாய் 4 அல்