Skip to main content

Posts

Showing posts with the label நடுதல் வாசிப்பனுபவம்

தோழர்களும் பெண்மையவாதிகளும், 'தராசில்' ஒரு நிறுப்பு- கோமகன்

ப தெய்வீகன் எழுதி தமிழினியில் வெளியாகிய 'தராசு' என்ற சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. சிறுகதை ஆரம்பத்தில் தெளிந்த நீரோடை போலப்பாய்ந்து பின்னர் வேகமெடுத்து தோழர்களையும் பெண்மையவாதிகளையும் புரட்டிப் புரட்டி அடித்து செல்கின்ற கதை, சில இடங்களில் எல்லோரும் பாவிக்கின்ற பொழுது இண்டர்நெட் எப்படி மெதுவாக சுழலுமோ அப்படி சுழலுகின்றது. லண்டனில் சத்தியராணியின் பெண்விடுதலை ஆர்வத்தை மேலும் மெருகேற்றி அங்கதத்தை இன்னும் தெளித்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. அதே போல் வேழினிக்கும் பூட்டிக்குமான நெருக்கம் இரவில் ஓடுகின்ற நெட் போல் செல்கின்றது. பிரதான கதை சொல்லியான ஆறுமுகச்சாமிக்கு மெல்பேர்னில் வழக்கு போட்டு அவரை மெல்பேர்னுக்கு வழக்கு நடக்கும் இடத்துக்கு அழைக்கின்ற அளவுக்கு ஆறுமுகச்சாமி பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றாலும், முன்பொருமுறை அவர் தனது சாமானை காட்டியதால் ஒரு குடும்பமே தொலைந்தது என்ற லொஜிக்கில் பெண்மையவாதம் கதையை தூக்கி நிமிர்த்துகின்றது. அதே போல் கதையின் முடிவாக, 'போகும்போது பனம்பாத்திய ஒருக்கா பாத்திட்டுப்போவமே?' என்ற முனை, ஆறுமுகச்சாமியை தூக்கி சாப்பிடுகின்றது. ஆக மொத்தத்தில

கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்

புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொக

தீரனின் பார்வையில் 'முரண்'

‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்... பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்-- //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்...பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்...// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்...? ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் ந

முரண் சிறுகதைத்தொகுப்பு பற்றிய நொயல் நடேசனின் வாசிப்பனுபவம்

மூன்று மாதங்கள் முன்பாக வெளிவந்த இந்த சிறுகதைத் தொகுப்பை உங்களுக்கு புலம்பெயர்ந்த இலக்கியத்தின் வடிவமாக நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் . அதற்கு முன்பாக ஒரு சிறிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும் . ஒரு விவசாயி ஒரு குரங்கை வளர்த்து வந்தான். அந்தக் குரங்கு அவனது விவசாய வேலைகளில் அனுமாராக பல உதவிகள் செய்தது .புராதன இலங்கையில் வாரத்தில் ஒரு நாள் இராஜகாரியம் செய்யவேண்டும். அதற்காக ஒரு வாரம் வெளியூர் சென்றபோது சமீபத்தில் ஏற்கனவே நட்ட மிளகாய் கன்றுகளுக்கு வேர் விடும்வரை ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றச் சொன்னான் . ஏற்கனவே குரங்கை இந்த வேலையில் பழக்கியிருந்ததால் நம்பிக்கையுடன் சென்றான். மீண்டும் ஒரு கிழமை கழிந்து வீடு திரும்பியபோது அந்த மிளகாய்ச் செடிகள் கருகியிருந்தன . குரங்கிடம் கேட்டான் “என்ன நடந்தது? ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றவில்லையா”? “ஊற்றினேன்” “அப்ப உன்ன நடந்தது?” “ குரங்கு மனிதர்கள்போல் பொய் சொல்லாது கன்றுகளின் அடியில் மண் குழம்பியிருந்து. “ஏன் இப்படியிருக்கு? என மண்ணைக்காட்டிக் கேட்டான் அந்த விவசாயி. “வேர் வருகிறதா என ஒவ்வொரு நாளும் பிடுங்கிப் பார்த்து விட்டு மீண்டும் நட்டு தண்ணீர்

முரண் – கோமகனின் புதிய சிறுகதைத்தொகுதி குறித்து. – கே.எஸ்.சுதாகர்

இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின் ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத் தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல், சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின. முதலாவது கதை ‘அகதி’ ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும் எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள் பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து கொண்டிருந்தாள்’ என்ற பத்தி வந்தபோதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. புறா ஒரு நேரத்தில் ஆகக்கூடியது எத்தனை முட்டைகள் இடும்? கதையில் நான்கு முட்டைகள் எனக்குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆமை புகுந்த வீடு (கல்லாமை, பொறாமை, இயலாமை, முடியாமை) உருப்படாது என்று சொல்வார்கள். இந்தக்கதையில் புறாக்கள். கதையில் ‘ஒர்லியன்’ என்ற பிரான்ஸ் தேசத்து நகரம் பற்றியதொரு குறிப்பு வருகின்றது. ‘வன்னிப்பெரு

சமகாலத்து விமர்சனப்போக்கில் எனது பார்வை-கட்டுரை

மாசி மாதத்து ‘தமிழினி’ இணைய சிற்றிதழ் படிக்க கூடியதாக இருந்தது. அதில் ஏக காலத்தில் 03 ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. நொயல் நடேசனின் “கானல் தேசம்” குறித்து ப தெய்வீகனும், தீபச்செல்வனின் “நடுகல்” குறித்து தருமு பிரசாத்தும், இறுதியாக உமாஜியின்” காக்கா கொத்திய காயம்” அனோஜனாலும் விமர்சனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்தன. கானல் தேசத்திற்கான தெய்வீகனது பார்வையில் தர்க்க ரீதியிலான போக்கையும் குறைந்த மொழியாடலில் செறிவான விமர்சன பண்பையும் அவதானிக்க முடிந்தது. கானல் தேசத்தின் ஊடாக ஒரு வரலாற்று செய்தி ‘புனைவு’ என்ற ஜன்னலின் ஊடாக எவ்வளவு தூரத்திற்கு திரிபு படுத்தப்படுவதுடன் அதுவே ‘வரலாறு’ என்று இளையவர்களை நம்பச் செய்யும் வல்லபங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது. குறிப்பாக ‘புலிகள் பெண் போராளிகளை கர்ப்பணிகளாக்கி தற்கொலை போராளிகளாக அனுப்பினார்கள்’ என்ற வரலாற்று அபத்தத்தை தரவுகளுடன் உடைத்தெறிந்த பாணி குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனத்தை படிக்கும்பொழுது “வரலாற்றில் மலங்களிப்பது தடை செய்யப்பட வேண்டும்” என்ற உணர்வை எனக்கு ஏற்பத்தியது. ஒன்றாக இருந்து கு

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற

மிருகமொழி – மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்

முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘ காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார். இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன. 01 ஏறுதழுவல்-கோமகன் 02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி. 03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ். கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’

வாசிப்பு அனுபவம் “கேரளா டயரீஸ்” ஐ முன்வைத்து

மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்த

ரகசியத்தின் அரூப நிழல்கள் – டிலீப் டிடியே – ப தெய்வீகனின் இரு சிறுகதைகள் பற்றிய வாசிப்பு அனுபவம்

‘மலைகள்’ இணைய இதழில் தோழர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ என்ற சிறுகதை கலாச்சார அதிர்வுகளுக்கு பின்னால் அளவுகோல்களுடன் ஓடித்திரிகின்ற “பொறுப்புமிக்க சமூக காவலர்கள்” என்று சுயபிரகடனம் செய்துகொண்டவர்கள் அனைவரினது முகத்திலும் ஓங்கி அறைந்ததுபோல வெளிவந்திருக்கும் தரமான படைப்பு. ஆணின் உடல்வேட்கையை மாத்திரம் கலவியின் ஆதிக்கப்புள்ளியாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்திவருகின்ற தமிழ் சமூகத்தில் பெண்களின் இரகசியமான வேட்கைகளையும் அவற்றின் நம்பமுடியாத அந்தரங்க கொதிப்புக்களையும் தனது மொழி வழியாக விளையாடித்தீர்த்திருக்கிறார் லக்ஷ்மி. சமூகத்தில் வெளிப்படையாக பேசப்படவேண்டிய இதுபோன்ற விடயங்களும் – ஆபாசம், சபலம், கலாச்சர கலவரம் என்றெல்லாம் வெங்காயத்தனமாக தொடர்ந்தும் இரகசியம் பேணுவதன் அத்தனை மொண்ணைத்தனங்களும் – இந்த கதையில் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதே ‘மலைகள்’ இணையத்தில் கடந்த வருடம் ‘இவளதிகாரம்” என்ற எனது சிறுகதைக்கு வெளிவந்த படுபாதகமான எதிர்வினைகளை இப்போது எண்ணி இன்புற்றிருக்க விரும்புகிறேன். பெண்ணின் உடல்வேட்கைக்காக வாடகை ஆண்களை அழைத்து இன்புற்றுக்

குரலற்றவரின் குரல் ஒரு பார்வை – தனிமரம் நேசன்

புலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிகபங்களிப்பை வழங்கியிருக்கின்றது! தொடர்ந்தும்வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விடயம். அந்த வகையில் இவ்வாரம் பாரிசில் இன்னொரு இலக்கியமலரினை கைகளில் பெறும் வாய்ப்பு கிடைத்ததுமகிழ்ச்சி எனலாம். நேர்காணல்கள் இன்று ஊடகங்கள் எங்கும் இடம்பெறுகின்ற ஒரு விடயமாகிவிட்டது .என்றாலும்இலக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யும்போது பல சொல்லப்படாத மூன்றாவது கோணத்தில்இருந்து சமூகத்திக்கு கருத்தாளம் மிக்க செய்திகள்வந்தடைகிறது. பாரிசில் வாழும் கோமகன் என்றுஇலக்கியவட்டத்தில் அறியப்படும் மூத்த படைப்பாளிதியாகராஜா ராஜ ராஜன் அவர்கள் பல்வேறுசஞ்சிகைகளுக்காக தான் நேர்கொண்டஈழத்துப்படைப்பாளிகள் /புலம்பெயர்படைப்பாளிகள் என 14 பேரிடம் தொடர்பைஏற்படுத்தி அவர்களிடம் பெற்ற பதில்களைதொகுத்து அச்சில் கொண்டுவந்து இருக்கின்றார்குரலற்றவன் குரலாக! இந்த நூல் இப்போது தாயகத்தில் பல இடங்களில்வெளியீட்டு விழாவைக்கண்டு கொண்டேவருக்கின்றது சிறப்பாக . இனி வரும் நாட்களில் பாரிசிலும் வெளியீட்டுவிழாநிகழும் என்ற நம்பிக்கையோடு! தனிமரமும் காத்துஇருக்கின்றேன் நேரம் ,காலம் கூடிவந்தால்வாச

குரலற்றவரின் குரல்-வாசகர் குரல்

இன்றைய நாள் மிக அற்புதமானது. கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த காரணத்தால் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அவர் மீண்டுமொரு முறை அழைத்ததும் கட்டாயம் சென்று விடுவது என முடிவு செய்தேன். எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் அறிவும்,பண்பாடும் நிரம்பி வழியும் மனிதர்களிடையே நான் அமர்ந்த முதலாவது நூல் வெளியீட்டு விழா. கோமகனின் அன்புடன் துவக்கப்பட்டது. விழாவை பூரணப்படுத்தாமல் நோன்பு திறக்க வேண்டி இருந்ததால் இடையில் வந்தது மிக வருத்தமடையச் செய்தது. என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னைக் கவர்ந்த முறையில் பேசினார் அந்த மனிதர். அவர் யார்,இலக்கியத்தில் அவர் பங்கு என்பதை இன்னும் அறியவில்லை. ஆனால் பெயரை மாத்திரம் பாய்வா என அறிந்து கொண்டேன். இலக்கியத்தில் அடுத்த படைப்பிற்கான இடைவெளி எடுக்கும்போது படைப்பாளியின் சரக்கு தீர்ந்து விடுவதாக நினைப்பவர்கள் பற்றிய அவர் கூற்றும், மூத்த இலக்கியவாதிகள் பலர் புதியவர்களுக்கு வழிவிட்டு தங்கள் மகுடங்களை இறக்கி வைக்கும் மனநிலைக்கு பெரும்பாலும் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்… அதே போல நவீன

அகதி-சிறுகதை விமர்சனம் - நெற்கொழுதாசன்

கோமகன் எழுதியிருக்கிறார். புறா தன் பார்வையில் கதையை சொல்கிறது. சிபிச் சக்கரவர்த்தி காலத்திருந்து புறா மனிதர்களுடன் வாழ்ந்திருந்தாலும் யாரவது புறாவின் பார்வையில் கதையை எழுதி இருக்கிறார்களா ? (நான் வாசிக்கவில்லை ) இந்த ஒன்றே இந்தக் கதையை கொண்டாடப் போதுமானது. ஏற்கனவே ஏறுதழுவுதல் என்றொரு கதை எழுதியதாகவும் கிழக்கிலங்கை மூத்த எழுத்தாளர் அதனை "விலங்குப் பண்ணை" க்கு பிறகு வந்த மனிதரல்லாதவர்களின் மிக சிறந்த கதை என்று பாராட்டியிருந்தார். ஒரு புறநகரில் எல்லா இனத்தவர்களும் வசிக்கும் இடத்தில் நிகழும் கதை. அந்த அக்கிராமத்தின் அழகியலை எடுத்து சொல்வதின் ஊடாக ஒவ்வொரு நிகழ்வினையும் துல்லியமாக வரைகிறார். அந்த வரைவுகள் அந்த இடத்தில் வசிக்கும் மக்களை மற்றும் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஒரு ஓவியரிடம் கொடுத்தால் அப்படியே அந்த நகரை ஓவியமாக வரைந்துவிடுவார். கட்டிடங்களை பனை மரங்களுடன் ஒப்பீடு செய்வது, தமிழர்களின் பொருட்கள் குவிக்கும் பழக்கங்களை, சடங்குகளை, நம்பிக்கைகளை கிண்டலும் கேலியுமாக புறாவின் பார்வையிலேயே முன் வைக்கிறார். இடையிடையே வரலாற்று தகவல்கள் வேறு. கதையின் இறுதியில் &quo

குதிரை இல்லாத ராஜகுமாரன் -ஒரு நோக்கு -கோமகன்

ஓர் சிறுகதைத்தொகுதியை வாசிக்கும் பொழுது அதன் ஊடாக வருகின்ற புரிதல்கள் /கிரகிப்புகள் வாசகனுக்கு வாசகன் வேறுபடும் அந்தவகையில் அண்மையில் கனடாவில் வதியும் ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத ராஜகுமாரன் ” சிறுகதைத்தொகுதி என்னுள் ஏற்படுத்திய அலைகளை பதியலாம் என எண்ணுகின்றேன்.ராஜகுமாரன் என்றாலே வெண்புரவி அல்லது கரும்புரவியில் ஓர் கம்ரபீமான தோற்றத்துடன் ராஜபாட்டையில் குளம்பொலியுடன் கடுகி விரைவார். அனால் இங்கு குதிரையே இல்லை.இந்த ராஜகுமாரன் எப்படி இருக்கப்போகின்றாரோ என்ற ஐயப்பாட்டுடன் சிறுகதைத்தொகுதியில் உலா வந்தேன்.இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் பல்வகை ரசங்களுடன் வெளியாகி இருக்கின்றன. நிகழ்காலத்தில் தொலைந்ததை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் எமது வாழ்க்கையின் அனுபவங்களைச் தொலைக்கச்செய்கின்றோம் ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது அந்தத் தொலைந்த அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றங்களினால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்க

உயிரணை – நூல் விமர்சனம்

ஈழத்தில் போர்க்காலப் படைப்புகள் பல வந்தன / வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் பல சுயவிமர்சனங்களையும் சுய பரிசோதனைகளையும் மேற்கொண்டன . இந்தப்படைப்புகளை படைத்தவர்கள் எல்லோருமே மிக முக்கியமாக “உண்மைகளை எடுத்து சொல்கின்றோம்” என்று போரியலைத்தளமாகக் கொண்ட படைப்பாளிகளால் முன்நிலைப்படுத்தப்பட்டன.போரியல் படைப்பாளிகளை மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர். இதற்கு மிக முக்கிய காரணியாக அவர்களில் பலர் இறுதி போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வாழ்வு பெற்று வெளியே வந்தவர்கள். இந்தப் போரியற்படைப்பாளிகள் கூறிய சங்கதிகளை தமிழ்த்தீவிர தேசிய உபாசகர்களும் அவர்சார் படைப்பாளிகளும் மறுதலித்து, இல்லையில்லை அவைகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இவைதான் உண்மை என்று தங்கள் தரப்புப் படைப்புகளின் ஊடாக வாசகர் முன்னே வைத்தனர். ஆக இங்கு “உண்மை” என்பது இரண்டு பக்கமும் அல்லாடியது எனலாம் . அந்தவகையில் நேசக்கரம் சாந்தியின் “உயிரணையும் ” உண்மைநிலையை எடுத்து சொல்வதாக சொல்லி நிற்கின்றது . இலக்கியத்தில் உண்மை நிலை பற்றி தத்துவமேதை ஹெகல் பின்வருமாறு வரையறை செய்கின்றார் “உண்மை” என்பது அகம் சார்ந்தது .மனிதனின

குப்பியும் ப தெய்வீகனும்

சற்று முன்னர்தான் ப தெய்வீகன் எழுதிய "சயனைடு" சிறுகதை வாசித்திருந்தேன். முதலில் அங்கு இங்கு என்று அலைய விடாத தெளிவான கதை நடைக்கு வாழ்த்துகள். சாதாரண வாழ்வில் தற்கொலைகளைப் பொலிடோல் குடித்தல், தூங்கி சாதல், என்ற குறியீடுகளிலேயே ஈழத்துச் சமுதாயம் இதுவரைக்கும் பார்த்து வந்துள்ளது. ஆனால் சயனைடு மூலமும் ஒரு சாதாரண வாழ்வில் இருப்பவர் தற்கொலை செய்யலாம் என்பதை சொல்லிநிற்கின்றது இந்த சிறுகதை. தற்கொலைகளுக்கான உத்திகளில் இதுவும் ஒன்று, இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று மேம்போக்காக யோசிக்கலாம். நாங்கள் கடந்துவந்த விடுதலைப் போராட்டத்தில் இந்த "சயனைடு"-வின் பார்வையும் அர்த்தப்படுத்தலும் வேறுவிதமாகவே ஒரு தற்கொலையை நியாயப்படுத்தி இருந்தன. ஏன் அந்த வேளையில் அது சரியாகவும் கூட இருந்தது. இந்த கலாச்சாரம் பொன் சிவகுமாரன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை சனங்களிடம் கொடுத்தது. ஆனால் அதே குறியீடு சாதாரண வாழ்வில் பிரயோகிக்கும் பொழுது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கொண்டு வருகின்றது. சிறுகதையின் இயல்பே தனிய ஒரு தளத்தில் சுழராது பல்வேறு தளத்தில் சென்று

மற(றை)க்கப்பட்ட லெனின் சின்னத்தம்பி

தாயகத்தில் குடும்பம் சுற்றம் சூழல் என்று உன்னதமான வாழ்வைக் கொண்ட ஓர் இனக்குழுமம் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் கோரப்பிடியால் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள விருப்பமின்றிப் புலம்பெயர்கின்றது. அதன் இறுதி இலக்கானது, எதிலி என்ற முத்திரையும், தங்கள் வாழ்நாளில் எண்ணியே பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட வாழ்வியல் கோலங்களையும்  இந்த எதிலிகளை எதிர்கொண்டன. வாழ்வியலிலும் சரி சொல்லாடலிலும் சரி மிகவும் கொடுமையான உளவியல் தாக்கத்தைக் கொண்டு வருவது இந்த எதிலி என்ற இருப்பு ஆகும். ஈழத்தவர்களது புலப்பெயர்வையும் அவர்களது வாழ்வியில் விழுமியங்களையிட்டுப் பல படைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு  கோணத்தில் கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் கொண்டுள்ளன. அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் ஜீவமுரளியின் "லெனின் சின்னத்தம்பி " நாவல் உயிர்மை வெளியீடாக கடந்த ஆண்டு வெளியாகியது. ஆனாலும் இந்த நாவல் புலம்பெயர் இலக்கிய உலகில் மறக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம். பனியும் அதன் வீரியமும் ஐரோப்பா கண்டத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுபவன. அப்பொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற மனஅ