ப தெய்வீகன் எழுதி தமிழினியில் வெளியாகிய 'தராசு' என்ற சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. சிறுகதை ஆரம்பத்தில் தெளிந்த நீரோடை போலப்பாய்ந்து பின்னர் வேகமெடுத்து தோழர்களையும் பெண்மையவாதிகளையும் புரட்டிப் புரட்டி அடித்து செல்கின்ற கதை, சில இடங்களில் எல்லோரும் பாவிக்கின்ற பொழுது இண்டர்நெட் எப்படி மெதுவாக சுழலுமோ அப்படி சுழலுகின்றது. லண்டனில் சத்தியராணியின் பெண்விடுதலை ஆர்வத்தை மேலும் மெருகேற்றி அங்கதத்தை இன்னும் தெளித்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. அதே போல் வேழினிக்கும் பூட்டிக்குமான நெருக்கம் இரவில் ஓடுகின்ற நெட் போல் செல்கின்றது. பிரதான கதை சொல்லியான ஆறுமுகச்சாமிக்கு மெல்பேர்னில் வழக்கு போட்டு அவரை மெல்பேர்னுக்கு வழக்கு நடக்கும் இடத்துக்கு அழைக்கின்ற அளவுக்கு ஆறுமுகச்சாமி பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றாலும், முன்பொருமுறை அவர் தனது சாமானை காட்டியதால் ஒரு குடும்பமே தொலைந்தது என்ற லொஜிக்கில் பெண்மையவாதம் கதையை தூக்கி நிமிர்த்துகின்றது. அதே போல் கதையின் முடிவாக, 'போகும்போது பனம்பாத்திய ஒருக்கா பாத்திட்டுப்போவமே?' என்ற முனை, ஆறுமுகச்சாமியை தூக்கி சாப்பிடுகின்றது. ஆக மொத்தத்தில் இன்னும் சிறிது கவனமெடுத்தால் 'தராசு' சமநிலை தளும்பாது சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணுகின்றேன். வாழ்த்துகள் தெய்வீகன்.
பிற்குறிப்பு :
இந்தக்கதையினுடன் பெண்மையவாத நண்பிகள் அனைவரும் தெய்வீகனுடன் ஒரு போர்க்கால அடிப்படையில் மோதுவதற்குரிய சாத்தியப்பாடுகளே அதிகம் உண்டு.
கதையை வாசிக்க :
http://tamizhini.co.in/2020/04/14/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/?fbclid=IwAR3X8c8qlw8S0YWIkXgxZEpcPLUgINPPM4zrZ6k4NrS066XYxHzGfVz8upY
Comments
Post a Comment