51 எட்டி மரம் அல்லது காஞ்சிரை மரம் -The strychnine tree , nux vomica, poison nut, semen strychnos and quaker buttons – Strychnos nux-vomica எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. எட்டி மரத்தின் பட்டை, காய், இலை முதலான அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. ‘எட்டிக் கசப்பு’ என்னும் வழக்கு இதன் சுவையை விளக்கப் போதுமானதாகும். எட்டிக்காயைக் ‘காஞ்சிரங்காய்’ என்று ஔவையார் குறிப்பிடுகிறார். வேண்டியனவற்றையெல்லாம் தரும் கற்பக மரம் உண்டாரைச் சாகச்செய்யும் காஞ்சிரங்காயை (எட்டுக்காயை)த் தந்தால் என்செய்வோம் எனக் குறிப்பிடுகிறார். வெள்ளாடு இந்தத் தழையை ஓரிரு வாய் கடிக்கும். அன்று அதன் பால் சற்றே கசக்கும். என்றாலும் அந்தப் பாலில் நச்சுத்தன்மை இல்லை. எட்டி மரத்தின் பாகங்களை நாட்டு மருந்துகளில் சேர்த்துகொள்வர். எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்