Skip to main content

Posts

Showing posts with the label நடுதல் - மீன்கள்

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்- இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே  !!! வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன். உண்மையில் இந்ததொடர்  மிகவும் கடினமானது . ஏனெனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும். அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும். ஆனாலும், பொறுமையுடன் வாசித்த வாசகர்களுக்கு  மிக்க நன்றி . நேர காலங்கள் கூடி வரும் வேளையில் இன்னுமொரு தொடரில் உங்களைச் சந்திக்கின்றேன். நன்றி. கோமகன் 0000000000000000000000000000 40 கொள்ளுக் கலவாய் -comet grouper-Epinephelus morrhua படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொள்ளுக் கலவாய் மீன் "ஆகும் .இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள் . http://en.wikipedia....i/Comet_grouper 0000000000000000000000000000 41 சேவல் மீன் -lion fish-Pterois படத்திலுள்ள ...

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03

31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் - The bicolor parrot fish - Cetoscarus bicolor இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் .  மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் . http://en.wikipedia....iki/Parrot_fish 0000000000000000000000000 32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK- Sphyrène இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என...

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

11 ஊசிப்பாரை - big eye trevally  இந்த மீனுக்குரிய தூயதமிழ் " ஊசிப்பாரை மீனாகும் ".எல்லோருமே பாரை மீன் என்று சொல்லியிருக்கின்றீர்கள் ஆனால் ஊசிப்பாரை (dusky trevally, big eye trevally,) ,கட்டாப் பாரை ( leather skin fish, leather jacket fish, queenfish ) , கூனிப்பாரை ( cleftbelly trevally ) , தோல் பாரை (Malabar trevally ) , மஞ்சள் கிள்ளுப் பாரை ( giant trevally, yellowfin trevally) , வெங்கடைப் பாரை ( horse mackerel ) என்று பாரைமீனில் பலவகை உள்ளன. நான் போட்ட படம் ஊசிப்பாரை மீனாகும். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள். http://en.wikipedia.org/wiki/Trevally 000000000000000000000000000000 12 எலிச்சூரை மீன் - frigate tuna- Auxis thazard thazard  இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny), நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ), எலிச்சூரை மீன் (frigate tuna) என்று பலவகைப்படும் . இந்த மீன்பற்றிய மே...

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

01 வஞ்சிரம்-king mackerel or kingfish-Scomberomorus cavalla இந்த மீனின் தூயதமிழ் " வஞ்சிரம் " ஆகும் . எங்களிடையே " அறக்குளா " என்றே பெயர் பெற்றது. இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள். http://en.wikipedia....c_king_mackerel 00000000000000000000000000000000 02 அகலை அல்லது கானாங்கெளுத்தி -indian mackerel- Rastrelliger kanagurta இந்த மீனின் தூய தமிழ் " அகலை " ஆகும் . இது தமிழ் நாட்டில் " கானாங்கெளுத்தி " என்றே அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள். http://en.wikipedia....liger_kanagurta 000000000000000000000000000000 03 அயிரை அல்லது நொய்- LOACH- Cypriniformes இந்த மீனுக்குரிய தூயதமிழ் " அயிரை மீன் " ஆகும் இதனை " நொய் மீன் " என்றும் சில இடங்களில் அழைக்கின்றார்கள் . மேலதிக தகவலுக்கு பின்வரும் இணைப்பினுள் செல்லுங்கள் . http://en.wikipedia....i/Cypriniformes 00000000000000000000000000000000 04 அதல் மீன்- halibut -Hippoglossus hippoglossus  இந்...