Skip to main content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03




31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் - The bicolor parrot fish - Cetoscarus bicolor





இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் .  மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia....iki/Parrot_fish

0000000000000000000000000

32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK-
Sphyrène



இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என்று வகைப்படுத்தலாம் . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .


http://en.wikipedia....ammerhead_shark 

0000000000000000000000

33 செம்மீன்- red sqirrel fish-
Sargocentron hastatum


படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செம்மீன் " ஆகும் . இந்த மீனைப் பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்.


http://en.wikipedia....ne_squirrelfish 

00000000000000000000000




34 கோழி மீன்- Surgeon Fish-Paracanthurus hepatus 


இந்தப்படத்திற்கான தூயதமிழ் " கோழி மீன் " ஆகும் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .


http://en.wikipedia....ki/Surgeon_Fish

00000000000000000000000

35 புள்ளி நண்டு- blue swimming crab- Portunus pelagicus 


படத்தில் இருக்கும் மீனுக்கான தூயதமிழ் " புள்ளி நண்டு " ஆகும் . இதனை " நீலக்கால் நண்டு " அல்லது " நாச்சிக்குடா நண்டு "என்றும் இலங்கையில் அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளில் நுளையுங்கள் .


http://ta.wikipedia....நீலக்கால்_நண்டு

http://en.wikipedia....tunus_pelagicus

00000000000000000000000000

36 நெத்தலி மீன்-Stolephorus indicus 


படத்தில் இருக்கும் மீனின் தூயதமிழ் " நெத்தலி மீன் " ஆகும் . இந்தமீனை " நெய்த்தோலி மீன் " என்றும் அழைப்பார்கள் . இந்த மீனைப்பிடிக்கப் பலத்த போட்டி இருந்தாலும் , வழைமைபோல இசைக்கலைஞனே அதிஉயர்விருதான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .


http://en.wikipedia....ephorus_indicus

00000000000000000000000000

37 வாளை மீன்- Belt fish- Ribbon fish- Trichiurus haumela





இந்தப்படத்தில் இருக்கும் மீனினுடைய தூய தமிழ் " வாளை மீன் "ஆகும் . இதை " வாலை மீன் " என்றும் சொல்வார்கள் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .


http://en.wikipedia....iki/Ribbon_fish

00000000000000000000000000

38 சள்ளை மீன் -spotted etroplus - orange chromide. 


படத்திலுள்ள மீனுக்கான சரியான தூயதமிழ் " சள்ளை மீன் " ஆகும் இந்த மீன் பரத்தி மீன் , பரடி மீன் . புரடி மீன் , செல்லேல் மீன் என்று தமிழகத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்


http://en.wikipedia....Orange_chromide



March 23, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...