Skip to main content

பூவுக்கும் பெயருண்டு 10


91 வானிப் பூ - Euonymus dichotomus


வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. இளஞ்சேரல் இரும்பொறை ‘சாந்துவரு வானி நீரினும் தண் சாயலன்’ எனப் போற்றப்படுகிறான்.  வானியாறு இக்காலத்தில் சிறுவானியாறு என வழங்கப்படுகிறது. இது கோயமுத்தூருக்கு நீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றுப்படுகையில் வானி மலர் மிகுந்திருந்தது பற்றி இவ்வாற்றுக்கு இப் பெயர் தோன்றியது.

http://ta.wikipedia..../wiki/வானி_மலர்

0000000000000000000000000000

92 வெட்சிப் பூ - Ixora coccinea.L


வெட்சி (இட்லிப் பூ அல்லது இட்லி பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன. 
உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.

இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.

http://ta.wikipedia....org/wiki/வெட்சி

வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.

http://ta.wikipedia....org/wiki/வெட்சி

0000000000000000000000000000

 93 வேங்கைப் பூ- Pterocarpus marsupium


வேங்கை (Pterocarpus marsupium) எனப்படுவது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இது 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்து பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் . கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.

http://ta.wikipedia....ki/வேங்கை_(மரம்)

ஐங்குறுநூறு 208, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு
அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

http://treesinsangam...ங்கை-kino-tree/

ஐங்குறு நூறு 276, கபிலர், தோழி தலைவனிடம் சொன்னது .

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல் அறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.

http://treesinsangam...ங்கை-kino-tree/

00000000000000000000000000000

94 வேரல்ப் பூ (மூங்கில் , உந்தூள், கழை ) - Bambusa arundinaca


வேரல் தற்பொழுது மூங்கில் என்று அழைக்கப்படுகின்றது . இதைக் கழை என்றும் உந்தூள் என்றும் அழைப்பார்கள் .

குறுந்தொகை 18, இயற்றியவர் கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவனிடம் சொன்னது .

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

கருத்துரை : 

மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை ஆக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தவாறு , தலைவியின் உயிரோ மிகச்சிறியது. அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

http://treesinsangam...ூங்கில்-bamboo/

குறுந்தொகை , 201 பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சி திணை – தலைவி சொன்னது .

அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி
பால் கலப்பு அன்ன தேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்திஅயலது
முள் இல் அம்பணை மூங்கில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வருமென் றாளே.

http://treesinsangam...ூங்கில்-bamboo/

அகநானூறு 12, கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவனிடம் சொன்னது .

யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

http://treesinsangam...ூங்கில்-bamboo/

January 30, 2013   


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம