Skip to main content

Posts

Showing posts with the label நடுதல் - பறவைகள்

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் - பாகம் 04

31 கடல்ப் புறா - Seagull மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துக http://en.wikipedia.org/wiki/Gull 00000000000000000000000000000 32 பாம்புத் தாரா - Darter - Anhinga- Anhinga anhinga பாம்புத் தாரா  நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே. மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத...