பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை. குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்; குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பாக்கப் போனா எட்டடிதான் சொந்தம்... என்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று எட்டு அடிகூட சொந்தமில்லை.இறந்தவுடன் மின்மயானத்தில் இட்டு சாம்பலாக்கிவிடுகிறார்கள். இருந்தாலும் மனிதன் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடுகிறான். புலால் மறுத்தல் என்னும் அதிகாரமே வகுத்து...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்