பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை.
குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்;
குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்;
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்;
சட்டப்படி பாக்கப் போனா எட்டடிதான் சொந்தம்...
என்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று எட்டு அடிகூட சொந்தமில்லை.இறந்தவுடன் மின்மயானத்தில் இட்டு சாம்பலாக்கிவிடுகிறார்கள். இருந்தாலும் மனிதன் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடுகிறான்.
புலால் மறுத்தல் என்னும் அதிகாரமே வகுத்துள்ளார் வள்ளுவர். அவர் சொன்னகுறளில்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
எல்லா உயிருந் தொழும்
ஆகியன சிந்திக்கத்தக்கன .
"வீட்டுக்கு விருந்தினர் வருகை.....
எதிர்வீட்டுக்கோழி தப்பி ஓட்டம் " .
என்றொரு துளிப்பா உண்டு .சிலர் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு.பறக்குறதுல விமானம், மிதக்குறதுல கப்பலத் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவேன் என்று.
தாவர உண்ணிகளுக்கு பற்கள் தட்டையாக இருக்கின்றன , புலால் உண்ணிகளுக்கு பற்கள் கூர்மையாக இருக்கின்றன , ஆனால் மனிதனுக்கு ஏன் பற்கள் தட்டையாகவும் கூர்மையாகவும் தெரியுமா? மனிதன் இரண்டையும் சாப்பிடுபவன் என்பதால் தான் என்று சொல்லும் மனிதர்கள் பலரையும் காணமுடிகிறது.
ஒருபக்கம் கொன்றால் பாவம் என்போர் இன்னொருபக்கம் தின்றால் போச்சு என்போர் .இவ்விருசாராருக்கும் இடையே உயிரிரக்கம் போராடிக்கொண்டிருக்கிறது.
அறிவியல் சொல்கிறது "வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும் அல்லன செத்துமடியும் " என்று.
நன்றி : http://blogintamil.b...log-post_7.html
அறிவியல் சொல்கிறது "வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும் அல்லன செத்துமடியும் " என்று.
நன்றி : http://blogintamil.b...log-post_7.html
Comments
Post a Comment