இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41
இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர் , மனைவி , மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.
எனது பார்வையில்:
வெளி நாட்டுக்குப் போனதன் பின்பு வெள்ளைக்காறியிடம் மயங்கி வீடுவாசலை மறந்து அவளோடை அடுகிடைபடுகிடையாகக் கிடையாக் கிடக்காமல், பெத்த தாய் தேப்பனையும் கட்டின மனுசி பிள்ளைகளையும் நினைச்சு கடுமையாய் உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாற்றி, தானும் ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தோட சந்தோசமாய் வாழுபவன்தான் சரியான குடும்பஸ்த்தன் என்பது என்ரை இவ்வளவு கால அனுபவமும், இந்தக் குறள் வரிகளிலை இருந்து நான் எடுத்துக் கொண்டதும்......
The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.
Le chef de famille le ferme soutien des (hommes des) trois autres clases qui ont renoncé au monde (étudiant, anachorète et ascète) en ce qu’il les aide à persister dans leur bonne voie.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. 42
துறவிகளுக்கும் , வறுமையாளர்களுக்கும் , தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும் ,( யாசித்தவர்களுக்கும் ) இல்லறம் நடத்துகின்றவன் துணையாக இருக்க வேண்டும்.
எனது பார்வையில்:
5 யூறோவுக்கு வாங்கின ஊறுகாய் போத்தில் முடிஞ்சுபோகுமெண்டு ஊறுகாயைய் போத்திலைக் கட்டித்தூக்கிப் போட்டு, பிள்ளைகுட்டியளைப் பார்த்துச் சாப்பிடச் சொன்ன கஞ்சப் பயல் மாதிரி இருக்காமல் நல்லாய் எலாருக்கும் இருக்கிறதைப் பகிர்ந்து குடுத்து தானும் சந்தோசமாய் வாழவேணும்...
To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay.
Celui qui vit de la vie de famille est le soutien de ceux qui ont renoncé au monde, des miséreux et de ceux qui sollicitent la charité.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன்குடும்பத்தார், என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும் .
எனது பார்வையில்:
அப்ப இந்த ஐஞ்சு விசயத்திலை மட்டும் அறத்தின் படி வாழ்ந்து விட்டு மிச்சம் எல்லாத்திலையும் மொள்ளமாரியாயும் முடிச்சவிக்கியாயும் இருக்கலாமோ எண்டு வில்லங்கமாய்க் கேட்காமல் உயிர்கள் எல்லாத்திடமும் அறத்தின் வழியில் வாழவேண்டும்...
The manes, God, guests kindred, self, in due degree,These five to cherish well is chiefest charity.
S’acquitter sans jamais y manquer des cinq devoirs suivants: offrir des oblations aux mânes des ancêtres, faire des sacrifices aux dieux, soigner les hôtes, obliger ses parents et s’occuper de soi-même: telle est la vertu glorieuse du chef de famille.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல்
எஞ்ஞான்றும் இல். 44
பழி பாவங்களுக்கு அஞ்சி தேடிய பொருளை அனைவரோடும் கூடிப் பகுத்து உண்ணும் இல்லறத்தானுடைய வாழ்க்கை களங்கமற்றதாகும்.
எனது பார்வையில்:
களவெடுத்த பொருளையும் இப்பிடிப் பகிர்ந்து உண்டால் பாவம் போய்விடும் எண்டிட்டு முழுநேரமாய்க் களவிலை இறங்கிறதில்லை...........இது வந்து நேர்மையாய் உழைச்சுத்தேடின பொருளுக்குத்தான் வள்ளுவர் சொன்னது கண்டியளோ........
Who shares his meal with other, while all guilt he shuns,His virtuous line unbroken though the ages runs.
Si le chef de famille mène sa vie, en redoutant la malhonnêteté dans l’acquisition de la richesse et en prenant ses repas, après avoir distribué la richesse ainsi acquise, (aux personnes pré désignées), sa descendance ne déclinera jamais.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
எனது பார்வையில்:
சடங்கு முடிச்சவையின்ரை பண்பும் அதின்ர பயனும் எப்படியிருக்கவேணும் எண்டால், தன்னை நம்பி கழுத்தை நீட்டின மனுசிக்காரியோடையும் பிள்ளையளோடையும் கூடின பட்ச்சமாயும் தேடின தேட்டங்களை கூட்டாளியள் சொந்தம் பந்தம் எண்டு சுத்துப்பட்டியளோடை குடுத்து சாப்பிடவேணும் கண்டியளோ.
If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain.
La vie domestique remplie d’amour et de charité est parfaite et utile.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன். 46
ஒருவன் அறநெறிப்படி இல்வாழ்க்கையை நடத்தினால் அதைவிட அவன் வேறு நெறியில் போய்ப் பெறத்தக்கது ஒன்றுமே இல்லை.
எனது பார்வையில்:
இது எனக்கு கொஞம் இடிக்குது. அப்பிடியெண்டால் ஏன் கன மன்மதக்குஞ்சுகள் கட்டினவள் வீட்டை இருக்க இரண்டாவதுக்குப் பாயினம்? ஏதோ ஒண்டு அங்கை கிடக்கிறபடியாலை தானே....?
If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain?
Si la vertu est pratiquée dans la vie familiale, quel avantage y a-t-il d’efforcent de vaincre les sens.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 47
அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன் , பிற வழிகளில் வாழ்பவர்களை விடவும் தலை சிறந்தவனாகின்றான் .
எனது பார்வையில்:
கடவுளை அடையவும் தெரியவும் வேணுமெண்டால் கட்டின மனிசியோட அதற்கேற்ற இலக்கணத்தோடை வாழுறவையளாலை தான் முடியும் எண்டு ஐயன் ஒரு தேற்றத்தை இந்த இடத்திலை போடுறார். சரி அப்ப அர்சுனனுக்கு எப்படி கண்ணன் விசுபரூபதரிசனத்தைக் காட்டினார்........? லொஜிக் இடிக்குதே ஐயன்.
In nature's way who spends his calm domestic days,'Mid all that strive for virtue's crown hath foremost place.
Celui qui remplit les devoirs de la vie familiale est le plus grand de tous ceux qui s’efforcent de vaincre les sens.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48
பிறரை அறவழியில் செலுத்தி தானும் அவ்வழியல் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும் .
எனது பார்வையில்:
தன்னனைச் சுத்தி இருக்கிறவையை அவையின்ரை வழியில விட்டுத் தானும் அறத்தில இருந்து விலத்தாமல் கட்டினவளோடை வாழுற சீவியம் துறவியளின்ர பொறுமையை விட மேலாம். ம்........... என்னத்தைச் சொல்ல இதைத்தானே நாங்களும் இங்கை செய்யுறம் விலத்தவே முடியுது?
Others it sets upon their way, itself from virtue ne'er declines;Than stern ascetics' pains such life domestic brighter shines.
Il y a plus de mérite au sein de la famille si l’on aide les religieux et si on pratique soi-même la vertu, que dans la vie ascétique.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை
அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்லற வாழ்கையே அதுவே பிறரால் பழிக்கப்படாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும் .
எனது பார்வையில்:
ஒருத்தன் சடங்கு முடிச்சு நாலைஞ்சு மாசத்தில கோடேறி மற்றவன் காறித்துப்பாமல் நம்பிவந்த கட்டின மனிசியோடை சந்தோசமாய் சீவிக்கிற சீவியம்தான் எழுப்பமாயும் கியாதியாயும் இருக்கும்.
The life domestic rightly bears true virtue's name;That other too, if blameless found, due praise may claim.
Qu’appelle-t-on vertu? La vie familiale. La vie ascétique n’est bonne que si elle n’est pas blâmée par autrui.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். 50
உலகில் வாழவேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவனனாக வைத்து மதிக்கப்படுவான் .
எனது பார்வையில்:
கட்டின மனிசியோடை ஒற்றுமையா சந்தோசமாய் ஒருத்தன் பூமியில சீவிச்சாலும் வானத்தில வாழுகின்ற தேவர்களில ஒருத்தரா கவனிக்கப்படுவார் என்று சொன்னாலும் தேவர்கள் வில்லங்கம் பிடிச்ச ஆக்கள் கண்டியளோ. கண்ட இடத்தில நனைச்சு கண்ட இடத்தில கழுவிற ஆக்கள். ஐயனின்ரை லொஜிக் இடிக்குதே....
Who shares domestic life, by household virtues graced,Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
celui qui mène la vie familiale, bien qu’il vive sur terre, est considéré comme un des dieux qui habitent le ciel.
Comments
Post a Comment