Skip to main content

Posts

Showing posts from April, 2020

அறத்துப்பால்- இல்லறவியல்- புறம்கூறாமை- Not Backbiting-Ne pas calomnier-181-190

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது. 181 அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச்செயல்களை செய்யாதவனாகவும் இருந்தாலும்புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது. எனது கருத்து: நீங்கள் ஒருத்ரிலை உண்மையான அன்பு வைச்சிருக்கிறியள் எண்டால், அவருக்கு ஒரு கஸ்ரம் எண்டால் உங்களை அறியாமல் கண்ணில தண்ணி வரவேணும். அவைதான் உண்மையான மனுசர். Though virtuous words his lips speak not, and all his deeds are ill. If neighbour he defame not, there's good within him still. Il est doux à celui qui ne pratique pas la vertu et qui commet même des péchés; de s’entendre dire: “ce n’est pas un calomniateur ”  அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழீஇப் பொய்த்து நகை. 182 ஒருவனைக்க காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக், கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது. எனது கருத்து: இதை இப்பிடியும் சொல்லலாம் " கண்டால் கட்டாடி காணாட்டில் வண்ணான்". ஆனால் இப்பிடிப்பட்ட கோஸ்ரியள் தான் இப்ப

அறத்துப்பால்-இல்லறவியல்-வெஃகாமை-The Not Speaking Profitless Words - Ne pas convoiter-171-180

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்  குற்றமும் ஆங்கே தரும். 171 நடுவு நிலமை இல்லாமல் பிறர் பொருளை அபகரிக்க விரும்பினால் , அவ்விருப்பம் , அவனது குடியைக் கெடுத்து , பல தீமைகளையும் அப்போதே கொடுக்கும் . எனது கருத்து: இதுக்கு நல்ல உதாரணம் எங்கடை அரசியல்லையே இருக்குது. பண்டாரநாயக்கா குடும்பம் , நாங்கள் இண்டைக்கு நடுறோட்டிலை நிக்கிறதுக்கே அவையின்ர குடும்பம்தான் முழுக்காரணம் . ஆனால் இண்டைக்கு அந்தக் குடும்பத்தின்ரை நிலமை சொல்லி வேலையில்லை . இதைத்தான் ஐயனும் தன்ரை மொழியிலை சொல்லுறார். With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door. convoiter le bien d’autrui, sans penser que l’on abandonne la voie de la vertu, ruine la famille et fait commettre bien des péchés.  படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவுஅண்மை நாணு பவர். 172 நடவு நிலமை தவறினால் வரும் இழிவுக்கு அஞ்சுபவர் , பிறர் பொருளை அபகரித்துக் கொள்வதாகிய இழிசெயலச் செய்யமாட்டார். எனது கருத்து: இப்பிடிப்பட்ட ஆக்களை இந்தக் காலத்தில பாக்கிறது முய

அறத்துப்பால்-இல்லறவியல்-அழுக்காறாமை-Not Envying-Ne pas envier -161-170

ஒழுக்காறாக் கொள்க ; ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. 161 ஒருவன் தனது நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாதிருத்தலைத் தனக்குச் சொல்லப்பட்ட ஒழுக்க நெறியாகக் கொள்ளக் கடவன். எனது கருத்து : எனக்கு உது சரிப்பட்டுவரும்போலை தெரியேலை ஏனென்றால் இப்பிடி எரிச்சல் பொறாமை இல்லாத இனமாய் எங்டை சனம் இருந்திதுஎண்டால் நாங்கள் எப்பவோ எங்கேயோ போயிருப்பம் As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind. Que l’on considère l’absence de l’envie eomme le chemin de la moralité.  விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். 162 ஒருவன் எவருடத்திலும் பொறாமை கொள்ளாத பெருந்தன்மை பெறுவானாயின் , அவனுக்கு அதைவிடச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை. எனது கருத்து : உங்களிட்டை எரிச்சல் பொறாமை மட்டும் இல்லையெண்டு வையுங்கோ அதுதான் உலகத்தில பெரிய சிறப்பு அப்பிடியும் ஆக்கள் இருக்கத்தான் செய்யினம் If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth. L’absence de l’envie

அறத்துப்பால்- இல்லறவியல் பொறைஉடைமை-The Possession of Patience, Forbearance -Supporter les injures 151 - 160

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151 தன்னைத் தோண்டுகின்றவர்களையும் விழாமல் தாங்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்து ஆதரித்தலே முதன்மையான அறமாகும். எனது கருத்து : குற்றம் பார்க்கில் சுற்ரம் இல்லை எண்டு சொல்லுவினம் . தோட்டக்காறர் தோட்டம் செய்ய மண்ணைக் கிண்டி சாறுவினம். ஆனால், மண் அவையளை தடுக்கி விழாமல் தாங்கி அவைக்கு நல்ல பயிர் விளைச்சலையும் குடுக்குது .அதே மாதிரி ஆராவது உங்களை கதையால காயப்படுத்தினால் தாங்கித் தரியுங்கோ பேந்து உங்களைத் தான் சனம் தூக்கிப் பிடிக்கும். இது என்ரை அனுபவம் . As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best. Ainsi que la terre supporte ceux qui la fouillent, supporter ceux qui vous offensent est la première des vertus. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 152 பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர்செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க . அதனை அப்போதே மறந்து விடல் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேல

அறத்துப்பால்-இல்லறவியல் பிறன்இல் விழையாமை- Not coveting another's Wife- Ne pas convoiter la femme d’autrui-141 -150

பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 141 அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை , உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது. எனது கருத்து : எல்லா அறத்தையும் பொருளையும் கரைத்துக் குடிச்சாக்களிட்டை பிறன் மனைவியை விருப்பம் கொள்ளுற குணம் இல்லை எண்டு ஐயன் சொன்னாலும் ,இந்த இந்திரன் ஏனப்பா அகலிகையிட்டை அதுவும் மாறுவேசத்திலை போனவர்? Who laws of virtue and possession's rights have known, Indulge no foolish love of her by right another's own. L’homme qui a étudié les traités de la vertu et de la richesse ne commet pas la sottise de convoiter le femme, qui est le Bien du prochain. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். 142 அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும் , பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை . எனது கருத்து: மற்றவையின்ரை மனுசியை அடையவேணும் எண்டு நினைச்சுக் கொடுக்குக் கட்டிறவை கடைநிலை மனிசரை விடக் கேவலமானவையாம். ஆன

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131 ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது . எனது கருத்து: ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும். இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share. Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132 வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் . எனது கருத்து: எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது. ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை. அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க வேண்டிவரும் எண்டு இந்தக்குறள் சொன்னாலும

அறத்துப்பால்- இல்லறவியல் அடக்கமுடைமை- The Possession of Self-restraint-La modestie-121-130

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். 121 அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும்.அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும் . எனது கருத்து: இந்த அதிகாரம் உண்மையிலேயே இன்றைய காலத்தில் சர்ச்சைக்குரிய விடையமாகும். இந்தக் குறளைப் பாத்தால் பண்பாட்டு ரீதியா பாத்தால் சரியே . இன்னுமொரு வழியால் பாத்தால் , சமரசம் செய்வதால் ஏற்படுகின்ற அடக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?? இந்தவழியால பாத்தால் , உலகம் அமைதிப் பூங்காவாக அல்லவா இருக்கவண்டும் ? Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there. La modestie conduit à l’habitation des dêvas. La fatuité précipite dans le lieu inhabitable des ténèbres. காக்க பொருளா அடக்கத்தை ; ஆக்கம் அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. 122 அடக்கத்தை உறுதிப்பொருளாக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம்தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை . எனது கருத்து: ஆறாவது அறிவு மனிதனாகப் பிறந்தவனுக்கு