Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்- செய்நன்றி அறிதல்-The Knowledge of Benefits Conferred: Gratitude- Reconnaissance des bienfaits-101-110



செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது 101

தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது .


எனது கருத்து :


முன்பின் தெரியாத ஒரு ஆள் எங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் , அந்த இடத்தில் அது எங்களுக்கு பெரிசாய் தெரியும் . அதின்ரை பெறுமதிக்கு இந்த மண்ணையும் விண்ணையும் கூட ஒப்பிட ஏலாது எண்டு ஐயன் இந்த முதல் குறளிலேயே தெளிவாச் சொல்லுறார் .

Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid.

Le Ciel et la terre ne peuvent être la juste récompense du bienfait (provenant) de celui qui n’en a pas reçu.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் , அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும்.


எனது கருத்து:


எங்கேயோ பிறந்து வளர்ந்து இலட்சியத்தாலை ஒன்றிணைஞ்சு தேவைப்பட்ட காலத்தில எங்களை பாதுகாத்த ( உதவி ) எங்கள் மண்ணின் மைந்தர்களின் செயல் இந்தப்பூமியைவிடப் பெரிசுதான் !

A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth.

Un service rendu à propos, quelque minime qu’il soit, est plus grand que l’univers (si on en considère l’opportunité).


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103

பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலிலும் பெரிதாகும்.

எனது கருத்து:


நாங்கள் ஒருத்தருக்கு செய்யிற உதவியால எங்களுக்கு என்ன லாபம் எண்டு யோசிக்காமல் செய்யற சின்ன உதவியோ பெரிய உதவியோ அதை செய்யற எங்கடை அன்பை அதிலை பாத்தால் அந்த உதவின்ரை நன்மை கடலை விடப் பெரிசு எண்டு ஐயன் சொல்லுறார். 

Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea.

L’exellence d’un service rendu sans que le prix en ait été pesé, est si on la pèse, plus vaste que l’océan.


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104

ஒருவன் தினையளவு சிறிய உதவியை தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.

எனது கருத்து:


ஒருத்தர் ஒரு சின்ன உதிவி செய்திருந்தாலும் அந்த உதவியின்ர பயனை ஆராய்கிறவர் அதை பனை அளவுக்கு மிகப்பெரிய உதவியாய் நினைப்பர் . இதிலையும் அதே இடத்துக்கு வாறன் . எங்களுக்கு ஒரு 50 யூறோ மாதத்தில சின்னக்காசு .அது நேசக்கரத்தால ஒரு குடும்பத்துக்கு தாயகத்துக்கு போனால் ,அது அவைக்கு பனையளவு உதவிதானே.

Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem.

Le bienfait reçu ne serait-il gros que comme un grain de mil, le considèrent comme aussi gros que le fruit du palmier, ceux qui en connaissent la valeur.


உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

எனது கருத்து:


நாங்கள் ஒருத்தருக்குச் செய்யிற உதவி எண்டது , எங்கடை உதவீன்ர அளவை வைச்சு மதிக்கிறேல . எங்களிட்டை உதவியைப் பெற்றவரின்ரை பண்பாட்டிலதான் அதின் பெறுமதி தெரியும் .

The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you do.

La reconnaissance ne doit pas être à la mesure du bienfait reçu mais doit être proportionnée à la dignité de l’obligé.


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

குற்றமற்ற நல்லவரின் நட்பை மறத்தல் கூடாது .துன்பம் நேரந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்களின் நட்பை எந்நாளும் கைவிடுதல் கூடாது.

எனது கருத்து:


நடுறோட்டில கையறுந்த நிலமையில நிக்கேக்கை கை குடுத்தவன்ரை நட்பை ஒருக்காலும் மறக்கக்கூடாது . அதேநேரம் ,அறிவு ஒழக்கம் போன்ற விசையங்களில திறமான ஆக்களின்ர நட்பையும் விடக்கூடாது .

Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!

que l’on n’abandonne pas l’amitié de ceux qui ont secouru dans le temps du malheur ! Que l’on n’oublie pas la qualité secourable des hommes sans péché ! 


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. 107

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

எனது கருத்து:


இக்கட்டான நேரத்தில உதவி செய்தவைன்ர நட்பை தங்கள் வாழ்நாள் முமுழுக்க மறக்காமல் இருக்கவேணும் . அவைதான் உண்மையில பெரிய ஆக்கள்.

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.

On doit se souvenir dans sept naissances, l’amitié de ceux qui ont guéri ses douleurs.


நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று. 108

பிறர்செய்த நன்மையை மறப்பது அறமாகாது . அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும் .

எனது கருத்து:


ஒருத்தர் எங்களுக்கு செய்யிற உதவியளை மறந்து , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்கிறது நல்ல பழக்கம் இல்லை . அவர் எங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கஸ்ரத்தை தந்தாரெண்டால் அதை உடன மறக்கிறது நல்ல பழக்கம் .

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day.

Il n’est pas bon d’oublier un bienfait reçu; mais il est bon d’oublier aussitôt le contraire d’un bienfait.


கொன்று அன்னா இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

முன்பு உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும் , அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும் .

எனது கருத்து:


இந்தக்குறளில் எனக்கு உடன்பாடில்லை . ஏனென்றால் ஒருத்தர் எல்லாத்தையும் செய்துபோட்டு நான் உனக்கு உதவி செய்திருக்கிறன் , அதால இப்ப நான் செய்யிற தீமை சரி எண்டிறது எந்தவகையில ஞாயம்?அப்ப இந்திய அமைதிகாக்கும் படைகள் செய்ததெல்லாம் சரியா ?

Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by.

Le souvenir d’un ancien bienfait efface une injure même mortelle.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்;உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு . ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது .

எனது கருத்து:


இந்தக்குறளில எனக்கு கனக்க விசையங்கள் வருகிது . ஒரு சின்ன விசையம் சொல்லுறன் . மகிந்து எங்கடை பரம்பரையையே இந்தியாவின்ரை உதவியோடை அழிச்சு தன்ர பாவங்களை கழுவிப்போட்டு , இப்ப சப்பட்டையோட தேனிலவு கொண்டாடிறார் . இந்தப் பாவத்தை எங்கை கொண்டு போய் கழுவப்போறார் ஜெனிவாவிலையோ ?

Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!

Il y a rémission pour les immolateurs de toutes les vertus, mais il n’y en a pas pour celui qui immole le bienfait























Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...