Skip to main content

Posts

Showing posts from July, 2018

குப்பியும் ப தெய்வீகனும்

சற்று முன்னர்தான் ப தெய்வீகன் எழுதிய "சயனைடு" சிறுகதை வாசித்திருந்தேன். முதலில் அங்கு இங்கு என்று அலைய விடாத தெளிவான கதை நடைக்கு வாழ்த்துகள். சாதாரண வாழ்வில் தற்கொலைகளைப் பொலிடோல் குடித்தல், தூங்கி சாதல், என்ற குறியீடுகளிலேயே ஈழத்துச் சமுதாயம் இதுவரைக்கும் பார்த்து வந்துள்ளது. ஆனால் சயனைடு மூலமும் ஒரு சாதாரண வாழ்வில் இருப்பவர் தற்கொலை செய்யலாம் என்பதை சொல்லிநிற்கின்றது இந்த சிறுகதை. தற்கொலைகளுக்கான உத்திகளில் இதுவும் ஒன்று, இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று மேம்போக்காக யோசிக்கலாம். நாங்கள் கடந்துவந்த விடுதலைப் போராட்டத்தில் இந்த "சயனைடு"-வின் பார்வையும் அர்த்தப்படுத்தலும் வேறுவிதமாகவே ஒரு தற்கொலையை நியாயப்படுத்தி இருந்தன. ஏன் அந்த வேளையில் அது சரியாகவும் கூட இருந்தது. இந்த கலாச்சாரம் பொன் சிவகுமாரன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை சனங்களிடம் கொடுத்தது. ஆனால் அதே குறியீடு சாதாரண வாழ்வில் பிரயோகிக்கும் பொழுது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கொண்டு வருகின்றது. சிறுகதையின் இயல்பே தனிய ஒரு தளத்தில் சுழராது பல்வேறு தளத்தில் சென்று

றியாஸ் குரானாவின் இலக்கிய அறம்

இன்று றியாஸ் குரானாவின் "ஆளுமை - விருது" தொடர்பான ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. இந்தக்கட்டுரை என்னைப்போன்றவர்களுக்கும் சரி இலக்கிய அறத்தில் நேர்பார்வை கொண்டவர்களுக்கும் ஒரு சில சங்கதிகளை சூசகமாக எடுத்துச் சொல்கின்றது. இந்தக்கட்டுரையின் பிரதான பேசுபொருள் கவிஞர் சோலைக்கிளி. எனக்குத்தெரிந்து பொதுவெளியில் கவிஞர் சோலைக்கிளிக்கும் றியாஸ் குரானாவுக்கும் இணக்கமான பார்வைகளோ சூழலோ இருந்ததில்லை. இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றவர்கள். இவர்களிடம் இணக்கப்பாடுகள் வருவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத விடயம். ஆனால் இலக்கியச்செயற்பாட்டில் நேர்மைத்தன்மையும் பண்பட்ட உள்ளமும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இந்தக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பொதுவெளியில் ஒருவரைப்பற்றி எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இலக்கியம் தொடர்பாக முக்கியமான விடயங்களின் பொழுது காய்த்தல் உவத்தல் இல்லாத எமது பார்வைகளை ஒருவர் மீது வைக்கின்ற உளப்பாங்கு இப்பொழுது இலக்கியவாதிகளிடம் அருகி வரும் வேளையில் றியாஸ் குரானா போன்ற இளம் வயதுடைய இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் அது மூர்க்கம்