Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-பத்தி

முகநூலின் "ஓசை .........."-பத்தி

இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது. நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் , "கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்க...

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் – பத்தி – பாகம் 14

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் , சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது . சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ . ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டையிலை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் மனுசனுக்குப் பிறசர் தான் ஏறும்.ஒருகாலத்திலை சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம் . அங்காலை மகிந்தனும் சின்னன் பொன்னனுகளைத்தான் எயிம் பண்ணி அடிச்சான் ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க வாங்கோ பிள்ளையள் எண்டு கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவங்கள் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ . ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது ....

சுறுக்கரின் இலக்கிய ரசம்- பாகம் 01

அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி பட்டாவது காயை மடக்கி போடவேணும் எண்டு கனக்க றிக்கியளை இந்தகாலத்து பெடியள் வைச்சிருக்கிறாங்கள் கண்டியளோ. பெடிச்சிக்கு பெடிச்சியின்ர பேரை இல்லாட்டில் படத்தை பச்சை குத்தி காட்டிறது. இடையில ஏதாவது ரெண்டு பேருக்கும் ராட்டல் எண்டால் கையிலை பிளேட்டாலை வெட்டிறது ( இதை ரெண்டு பேரும் செய்வினம்). பேந்து தாய் தேப்பனுக்கு மாற்றர் லீக் ஆச்சுதெண்டால் பெடிச்சியை கிளப்பி கொண்டு ஓடுறது எண்டு இவையள் செய்யிற அலப்பரையள் சொல்லி வேலையில்லை கண்டியளோ. உது ஊரிலையும் அப்பிடித்தான் இங்கையும் அப்பிடித்தான். இங்கை கொஞ்சம் கொஞ்சம் டெவலப் எண்டு தான் சொல்ல வேணும் . இங்கை பெடிச்சிக்கு பிள்ளையையும் குடுத்துப்போட்டு பெடிச்சியை கிளப்பி கொண்டு வேறை நாடுகளுக்கு போய் அங்கை இருந்து கொண்டு தாய் தேப்பனோடை கேம் ஐ கேக்கிறது. இது இந்தக்காலத்தியான் பெடி பெட்டையளின்ரை சேட்டையள்....

தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்துக்கு வருகை – பத்தி

“தமிழ் எழுத்துப்பரப்பில் ஒருவர் மீதுள்ள அபிமானம் என்பது வேறு அடிமைநிலை எனபது வேறு . எனக்கு எனது தோட்டத்து மல்லிகைகளே அதிக வாசம் கூடியவை.” கோமகன் 000000000000000000000000000 இன்று தமிழகத்தில் இருந்து எஸ் ரா வந்திருக்கின்றார். எல்லா ஈழத்து படைப்பாளிகளும் ஏதோ தேவதூதனை கண்டு பரவசப்படுவது போல் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போடுகின்றார்கள் . இது எனக்கு கவலையளிக்கின்றது . அதற்காக நான் எஸ் ராவுக்கு எதிரானவன் இல்லை . ஏன் நாளை ஜெ மோ, சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோரும் ஈழத்துக்கு வரலாம். இதன் பின்னணியில் உள்ள நுண்ணரசியல்களை நாங்கள் விளங்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன். எமது ஈழத்து மூத்த படைப்பாளிகள் அவர்கள் வாழுங் காலத்திலேயே கொண்டாடப்படல் வேண்டும் . இதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அத்துடன் எமது படைப்புக்களமும் தமிழகத்து படைப்புக்களமும் ஒன்றல்ல. இரண்டுமே வேறுபட்ட பாதைகளில் பயணிப்பவை . நாங்கள் நீண்ட நெடிய போரின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். எமது அனைத்து வளங்களும் காயடிக்கப்பட்டன. காலம் இலக்கியத்துறையில் எமக்குரிய சந்தர்ப்பங்களை தருவதில் வஞ்சனை செய்தாலும் அது நல்லதையே செய்...

மிருக பந்தம் – நாயர் – பத்தி

பெயர் : ஜூனியர் இனம் : ஜெர்மன் ஷெப்பேர்ட் வாழ்விடம் : லனி தொர்னே – Lagny – thorigny. எனது அண்ணை வடகோவை வரதராஜன் இயற்கை ஆர்வலராகவும் பிராணிகள் ஆர்வலராகவும் இருந்தமையால் எனது சிறிய வயதிலேயே மிருகங்கள் மீது கட்டற்ற பந்தம் ஆரம்பமாகியது. இதன் விழைவாகவே எனது ” றொனியன் ” மற்றும் “வெந்துர்டி திறைஸ்” சிறு கதை உருவானது. கோப்பாயில் இருந்த மரித்துப்போன றொனியன் ஆகட்டும் இப்பொழுது பருத்திதுறையில் இருக்கும் டைசன் டேவிட் ( கருப்பையா , சுப்பையா ) ஆகட்டும் , நேற்று நான் சந்தித்த இந்த ஜூனியர் ஆகட்டும் தங்கள் நடத்தைகள் மூலம் என் மனதை அள்ளியவர்கள். நேற்று அயல் நாட்டில் இருந்து என்னிடம் வந்திருந்த தோழி ஒருவரை அவரது தோழியான அல்விட் வசந்தராணியிடம் அழைத்து செல்ல வேண்டியிருந்தது. பாரீஸ்-இல் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் லனி தொர்னே என்ற இடத்தில் அவர்கள் இருந்தார்கள். தொடரூந்தில் அரை மணியில் அங்கு சென்று விடலாம். வேலைநாட்களில் நான் நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். அதற்கு காரணங்களும் உண்டு . எல்லோரும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, எனது நாளானது அதிகாலை 3 மணிக்கே...

சமகாலத்தில் திருநங்கைகளின் இருப்பு

அண்மையில் ஊடறு அமைப்பினர் கிழக்கிலங்கையில் ஏற்பாடு செய்திருக்கும் பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் பார்க்க கிடைத்தது. அதுதொடர்பான வாதப்பிரதி வாதங்களும் சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இதைப்பார்த்த பொழுது எனக்குச் சில எண்ணங்கள் தோன்றின. அவை சில வேளைகளில் பெண்ணியவாதிகளின் பார்வையிலோ அல்லது நிகழ்வின் ஏற்பாட்டு குழுவினரது பார்வையிலோ தவறாகத் தெரியலாம். இல்லாது போனால் சரியாகவும் படலாம். ஆனால் இந்தப்பகிர்வின் மூலம் ஒரு புதிய பார்வைகள் கிடைக்குமானால் சந்தோசமே! இல்லாதுவிடின் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதேவேளையில் இந்தப்பதிவை "ஆண்மையவாதச் சிந்தனைச்சிதறல்களின் தொடர்ச்சி" என்ற குடுவையினுள் பூட்டி வைக்காது பொதுவாக உரையாடுவது சிறந்தது என எண்ணுகின்றேன். எமது முன்னைய அரசர்கள் மற்றும் சக்கரவர்த்திகள் தங்கள் அந்தப்புரத்துக் காவலுக்கு ஆண் காவலாளிகளை நம்பாது அவர்கள்மீது சந்தேகக்கண் கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் திருநங்கையரை காவலாளிகளாக வைத்திருந்தார்கள். இதிலிருந்து அன்றைய கால கட்டத்தில் திருநங்கையரின் சமூக இருப்பு எத்தகைய இழிநிலையில...

றியாஸ் குரானாவின் இலக்கிய அறம்

இன்று றியாஸ் குரானாவின் "ஆளுமை - விருது" தொடர்பான ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. இந்தக்கட்டுரை என்னைப்போன்றவர்களுக்கும் சரி இலக்கிய அறத்தில் நேர்பார்வை கொண்டவர்களுக்கும் ஒரு சில சங்கதிகளை சூசகமாக எடுத்துச் சொல்கின்றது. இந்தக்கட்டுரையின் பிரதான பேசுபொருள் கவிஞர் சோலைக்கிளி. எனக்குத்தெரிந்து பொதுவெளியில் கவிஞர் சோலைக்கிளிக்கும் றியாஸ் குரானாவுக்கும் இணக்கமான பார்வைகளோ சூழலோ இருந்ததில்லை. இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றவர்கள். இவர்களிடம் இணக்கப்பாடுகள் வருவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத விடயம். ஆனால் இலக்கியச்செயற்பாட்டில் நேர்மைத்தன்மையும் பண்பட்ட உள்ளமும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இந்தக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பொதுவெளியில் ஒருவரைப்பற்றி எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இலக்கியம் தொடர்பாக முக்கியமான விடயங்களின் பொழுது காய்த்தல் உவத்தல் இல்லாத எமது பார்வைகளை ஒருவர் மீது வைக்கின்ற உளப்பாங்கு இப்பொழுது இலக்கியவாதிகளிடம் அருகி வரும் வேளையில் றியாஸ் குரானா போன்ற இளம் வயதுடைய இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் அது மூர்க்கம்...

ஈஸி ஜெட்டில் ஈசியில்லா பயணம்

போன மாசம் வியாழன் மாறினது மற்றாக்களுக்கு நல்லதோ கூடாதோ எண்டது எனக்கு சிவசத்தியமாய் தெரியாது. ஆனால் நான் இந்த ஒருநாள் லண்டன் பயணத்தாலை எனக்கு வந்த குளறுபடியளை உங்களுக்கு சொல்லுறன் கண்டியளோ. ஒருநாள் என்ரை மனுசி எனக்கு சொன்னா ‘இஞ்சரப்பா நியூசிலாந்திலை இருந்து என்ரை கூட்டாளி குடும்பம் லண்டனிலை இருக்கிற அவையின்ரை தமக்கை வீட்டை வருகினமாம். எங்களை லண்டனிலை வந்து பாக்க சொல்லி கேக்கினம். ஒருக்கால் போட்டு வருவமே ‘எண்டு கேட்டுது. சரி என்னட்டை பெரிசாய் ஒண்டும் கேட்டு அரியண்டம் பண்ணாத மனிசி கேக்கிறாதாலை சரி போவம் எண்டு சொன்னன். நான் பேந்து வேலை பிராக்கிலை உதுகளையெல்லாம் அயத்து போனன். ஒருநாள் நான் வேலை முடிஞ்சு தும்பாகி போய் வர , என்ரை மனுசி கையிலை லண்டனுக்கு போக ரிக்கற்ரோடை நிண்டா. என்ன ஏது எண்டு வாங்கி பாத்தன். அந்த ரிக்கற் எனக்கும் சேத்து மனுசி ஈசி ஜெட்டிலை போறதாய் இருந்துது. எனக்கு கண்டியளோ நாடி விழுந்து போச்சுது . ஏற்கனவே என்ரை கூட்டாளி ஒருத்தன் இந்த ஈசி ஜெட்டிலை போய் நொந்து நூடில்ஸ் ஆன கதை மண்டையிலை லைட் அடிச்சுது .நான் மனுசியை கேட்டன் ‘கட்டாயம் இதிலை போகவேணுமோ ? யூறோ ஸ்ராறாலை போகேலாதோ...

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 14

சுறுக்கருக்கு ஆப்படிச்ச புறா ஹாய் யூத்ஸ் சுறுக்கர் இந்த வீட்டுக்கு வந்த காலம் தொட்டு அவரோடை ஒரு புறா பமிலி ஒட்டெண்டால் ஒட்டு பிலாக்காய் பால் ஓட்டு. சுறுக்கற்ரை வீட்டு பல்கணி தான் அவையின்ரை சீவியம். புரியன் பெண்டில் ரெண்டு பெட்டையள் தான் அவையின்ரை பமிலி. அவை ஏன் சுறுக்கரோடை ஒட்டினவை எண்டால், சுறுக்கர் அவைக்குப் பாத்துப் பாராமல் டெயிலி சோறு கொடுக்கிறவர். பிரச்சனை என்னவெண்டால் அவை சாப்பிட்டதும் பத்தாமல் பல்கணி எல்லாம் நாஸ்த்தி பண்ணிக்கொண்டு பல்கணி குந்திலை குசாலாய் இருப்பினம். இதாலை சுறுக்கருக்கும் ஹோம் மினிஸ்ட்டரிக்கும் அடிக்கடி ராட்டல் வரும். போனவரியம் சுறுக்கர் இருக்கிற அப்பாட்மென்ரின்ரை வெளிப்பக்கம் எல்லாம் திருத்தி பெயின்ற் அடிச்சு நல்ல சோக்காய் சிண்டிக்கா சுறுக்கருக்கு தந்தித்து. சுறுக்கருக்கு வினை இங்கை தான் ஸ்ராட் பண்ணீச்சுது. வெளியாலை திருத்தி பெயின்ற் அடிச்சாப் பிறகு புறா பமிலி இருக்கிற குந்து சின்னனாய் போச்சுது. அவையும் வேறை இடங்களுக்கு போற நோக்கம் சிந்தனையில்லாமல் அந்த சின்ன குந்திலை இருந்து கொண்டு பெயின்ற் அடிச்ச குந்தை நாஸ்த்தி பண்ணி கொண்டிருக்கினம். ...

மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்

வைரவர் உக்கிர மூர்த்தி. முந்தி வைரவருக்கு ஒரு தகர கொட்டகையும் இடைக்கிடை மடையும் விளக்கும் ஏத்தினால் காணும்.உப்பிடித்தான் கோப்பாயிலை மகிழடி வைரவர் எண்டு இருந்தார் .அவற்றை அட்ரஸ் வந்து குறிப்பாய் சொல்லுறதெண்டால் கோப்பாய் ஏ ஜி ஏ ஒபிசுக்கு பக்கத்தில் ஒழுங்கையிலை இருக்கிறார் .முந்தி ஆள் வலு சிம்பிளான ஆள். நான் ஊருக்கு போகேக்கை ஒருக்கால் மகிழடி வைரவரை ஒரு எட்டு பாத்திட்டு போவம் எண்டு போனன். இப்பத்தையான் மகிழடி வைரவர் றிச்மான். கோபுரம் என்ன. இப்பீக்கர் என்ன. டெய்லி அய்யர் என்ன. எண்டு சொல்லி வேலையில்லை . அந்த நேரம் ஊரிலை அப்பாக்குட்டியர் எண்டு ஒருத்தர் இருந்தவர் அவர் கொஞ்சம் கைவைத்தியமும் பாப்பார். அதோடை என்னமொருத்தர் குளறி சின்னத்தம்பியர் எண்டும் ஒருத்தர் இருந்தவர்; ஆள் கொஞ்சம் கைப்பார்ட் பார்ட்டி .இவரை ஏன் குளறி எண்டு சொல்லுறதெண்டால் செத்தவீடு, நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முன்னுக்கு நிக்கிற அருமையான சீவன் .என்ன எந்தநேரமும் மெல்லமாய் கதைச்சு நான் பாக்கேலை . கதைக்க தொடங்கினால் காதுகன்னம் எல்லாம் வெடிக்கும் அனால் கருட்டு சுருட்டு இல்லாத சீவன் . இவை தண்ணியிலைதான் கூட்டாளிமார். மத்தும்...

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 13

கிலிசை கெட்ட காசை வாங்கப்படாது   ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ் , காலங் காத்தாலை எழும்பி குளிரிலை நடுங்கின உடம்புக்கு சுடுதண்ணியாலை சுளுக்கெடுத்து திருனூத்தை அள்ளி பூசிக்கொண்டு ஒரு தேத்தண்ணியோடை பெட்டியை துறந்தன். ஐ மீன் கொம்பியூட்டரை . அட ஹப்பியாய் லீவு நாளிலை இருப்பமெண்டு பெட்டியை திறந்தால் அங்கை சனி நிண்டு தைய்யா தக்கா போடுது. சுறுக்கருக்கு ஒரு கூட்டாளி பெடி ஒருத்தன் முகனூலிலை இருக்கிறான். பெடி கவிதையள் எழுதிறதிலை ஆள் விச்சுழியன் கண்டியளோ. அவன் ஒரு பதிவை போட்டிருந்தான். நானும் என்ன ஏது எண்டு ஒருக்கால் எட்டிப் பாத்தன். பெடிக்கு என்ன கிரகமாற்றமோ தெரியேலை அப்பிடியொரு பதிவு. அவன்ரை பதிவை பாத்து எனக்கு மண்டை விறைச்சுப்போச்சுது. பிரச்சனை என்னவெண்டால் டில்லியிலை இருந்து பாலியல் தொழிலாளியள் காசு செத்து குடுத்தது பெடிக்கு குடைச்சலாய் போச்சுது. அது துடக்கு காசு. அவை எப்பிடி குடுக்கேலும்? அதோடை அவை விபச்சாரியள் ( நாங்கள் ஊரிலை சொல்லுவம் சைவேயள் , டிமூக்கள் ) எண்டு பெடி கொதிக்குது. அப்ப நான் சொன்னன், மோனை ஒருக்காலும் செய்யற வேலையை கிலிசை கெடுத்தாதை. எல்லாருக்குமே செய்யிற ...

வெள்ளி 13 இன் அடுத்த நாள்

நேற்றில் இருந்து மனதுக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றது. இரவு நித்திரை வரவில்லை. காலை 4 மணிக்கு தொடங்கிய எனது இன்றைய நாள் சற்றுமுன் மாலை 4 மணிக்கே நிறைவுக்கு வந்தது. நான் அதிகாலை தொடரூந்து நிலையத்தடியில் நின்றபொழுது எனது தொடரூந்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டது. இது ஸ்ரட் து பிரான்ஸ் புகையிரதநிலயத்தை ஊடறுத்து பாரிஸ் செல்லும் தொடரூந்து. என் மனதில் இனம் புரியாத பயஉணர்வு பரவியது. ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் வந்த இரண்டாவது அவசரகால நிலைபிரகடனம் அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமாகியது. மக்களை வெளியில் எங்குமே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசே கேட்டுக்கொண்டது. வெள்ளி இரவே ஆரம்பமாகும் ஹப்பி அவேர்ஸ் ஒவ்வரு பார்களிலும் அதிகாலை 4 மணிவரை களைகட்டும். நடக்கப்போகும் விபரீதம் தெரியாது பியரிலும் சாப்பாட்டிலும் இருந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? எல்லாமே மனக்கண் முன்னே சுழன்றடித்தன. வேறு வழியில் போய் பாதாள ரெயிலில் ஏறி இருந்தால் ஒரு பெட்டிக்கு நான்கு ஐந்து பேரே இருந்தார்கள். காலை வேளை 6 மணியளவில் போர் வீர்களின் நினைவு ஸ்தூபி இருக்கும் பகுதியான ஆர்க் து ட...

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 12

புலனாய்வு  ஹாய் யூத்ஸ் அண்ட் கேர்ல்ஸ், என்ரை ஐ போனை பாத்துப்போட்டு அதென்ன நீ மட்டும் புது புது போனுகள் வைச்சிருக்கலாம் நான் என்ன குறைச்சலோ? எண்டு கொஞ்ச காலத்துக்கு முன்னாலை என்ரை தறும பத்தினி, எனக்கொரு ஐ பாட் வாங்கி தாங்கோப்பா எண்டு என்னட்டை ஆசையாய் கேட்டாள். சரி பெரிசாய் அவள் ஒண்டும் கேக்கிறேலைத்தானே எண்டு நானும் ஒரு " ஐ பாட் எயார் "வாங்கி குடுத்தன். ஆளுக்கு அப்பத்தான் தானும் என்னை மாதிரி ஈக்குவலாய் இருக்கிறதெண்டு புள் ஹப்பியாய் இருந்திச்சுது. றோட்டாலை போற சனியை தூக்கி நடுவீட்டுக்கை செற்றியிலை இருத்தி வைச்சிருக்கிறன் எண்டு எனக்கு சிவசத்தியமாய் தெரியேலை பிள்ளையள். இண்டைக்கு ஒரு அலுவலாய் வெளியாலை போனன். அலுவலை முடிச்சு போட்டு வீட்டை வர பிந்திப்போச்சுது. நான் பசி அவதியிலை சாப்பிடேக்கை மனுசி கேட்டுது, "இன்ன இன்ன இடத்திலை எல்லாம் நிண்டனி. அங்கை உனக்கு என்ன வேலை எண்டு?" நான் போன இடமெல்லாம் எந்த கிரகம் நான் இங்கை வாறதுக்குள்ளை போட்டுக்குடுத்தவன் எண்டு எனக்குள்ளை யோசிச்சு கொண்டு,  "என்னப்பா இவ்வளவு நேரமும் அலுவல் பாத்துப்போட்டு வாறன். விசர் ஞாயம் பறை...

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் -பாகம் 11

01 நாடு ஒரு நபருக்கோ அல்லது ஒரு அணிக்கோ வரையறுக்கப்பட்டதல்ல!– பிரதமர் ரணில் 02 இன்னொரு அரசியல் புரட்சிக்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: சுமந்திரன் அறைகூவல் 03 முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்! சுறுக்கரின் அவதானம்: 01 அதுசரி எல்லாம் பங்கு பிரச்சனைதான் கண்டியளோ மிஸ்டர் பிறைம் மினிஸ்டர். 02 எங்கை எந்த இடம் எண்டு சொன்னியள் எண்டால் வசதியாய் இருக்கும். அதுசரி நீங்கள் றெடியோ? 03 கோல் பேசிலையும் வட்டுக்கோட்டையிலையும் எப்பவோ தமிழ் தேசியம் முற்றுகை உடைச்சு விட்டாச்சு இப்ப ஆர் உங்கை முற்றுகை போட்டிருக்கினம், உடைக்கிறதுக்கு? 000000000000000000000000 01 மலேசியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நாடு கடத்தப்பட்டார்! 02 ஜனாதிபதியின் கடிதத்திற்கு மஹிந்தவினால் பதில் கடிதம் அனுப்பி வைப்பு . சுறுக்கரின் அவதானம் : 01 புலி இல்லை எண்டு அரசாங்கம் கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுறாங்கள் இங்கை என்னடாவெண்டால் புழுக்கை வாசம் என்னம் எடுபடேலை. 02 லெக்சன் கிட்டுது ......சனம் வெளிநாட்டிலை இருந்தெல்லாம் அல்லோலகல்லோலப் படுகுதுகள். இங்கை எ...