Skip to main content

மிருக பந்தம் – நாயர் – பத்தி



பெயர் : ஜூனியர்
இனம் : ஜெர்மன் ஷெப்பேர்ட்
வாழ்விடம் : லனி தொர்னே – Lagny – thorigny.

எனது அண்ணை வடகோவை வரதராஜன் இயற்கை ஆர்வலராகவும் பிராணிகள் ஆர்வலராகவும் இருந்தமையால் எனது சிறிய வயதிலேயே மிருகங்கள் மீது கட்டற்ற பந்தம் ஆரம்பமாகியது. இதன் விழைவாகவே எனது ” றொனியன் ” மற்றும் “வெந்துர்டி திறைஸ்” சிறு கதை உருவானது. கோப்பாயில் இருந்த மரித்துப்போன றொனியன் ஆகட்டும் இப்பொழுது பருத்திதுறையில் இருக்கும் டைசன் டேவிட் ( கருப்பையா , சுப்பையா ) ஆகட்டும் , நேற்று நான் சந்தித்த இந்த ஜூனியர் ஆகட்டும் தங்கள் நடத்தைகள் மூலம் என் மனதை அள்ளியவர்கள்.

நேற்று அயல் நாட்டில் இருந்து என்னிடம் வந்திருந்த தோழி ஒருவரை அவரது தோழியான அல்விட் வசந்தராணியிடம் அழைத்து செல்ல வேண்டியிருந்தது. பாரீஸ்-இல் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் லனி தொர்னே என்ற இடத்தில் அவர்கள் இருந்தார்கள். தொடரூந்தில் அரை மணியில் அங்கு சென்று விடலாம். வேலைநாட்களில் நான் நண்பர்களை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கின்றேன். அதற்கு காரணங்களும் உண்டு . எல்லோரும் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, எனது நாளானது அதிகாலை 3 மணிக்கே ஆரம்பமாகும் . அந்த நித்திரையின் மிகுதியை மாலையில் வேலை முடிந்து வந்ததும் தொடர்வேன். ஆனால் வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த தோழியின் கோரிக்கையை தட்டிக்களிக்க முடியாது அரைமனதுடனேயே நான் வருவதாக அவருக்கு சம்மதம் சொல்லியிருந்தேன்.

நாங்கள் தோழியின் வீட்டிற்கு சென்ற பொழுது இந்த ஜூனியர் எனக்கு அறிமுகமானார். நெடிய உயரம் , எப்பொழுதும் நிமிர்ந்த செவிகள் , கூர்மையான பார்வை துடியாட்டம் அத்துடன் ஜெர்மன் ஷெப்பேர்ட் – க்கே உரிய டெசிபல் கூடிய குரல் என்று எடுத்த எடுப்பிலேயே என்னைக் கொள்ளை கொண்டார். அல்விட் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியதும் நீண்ட கால உறவை சந்திக்கின்ற பரவசத்துடன் என் மிது புரண்டு விளையாடத்தொடங்கினார். சில மணிநேர விளையாட்டின் பின்னர் களைப்பில் ஹோலில் படுத்திருந்தார் அப்பொழுதும் அரைக்கண்ணால் என்னைப் பார்ப்பதும் பின்னர் விழிகளை மூடுவதுமாக விளையாட்டு தொடர்ந்தது.

இறுதியாக நான் புறப்படுகின்ற நேரம் வந்த பொழுது பருத்திதுறையில் இருந்த கருப்பையா சுப்பையா போல கவலை மிகுதியால் தூரப் போய் தங்களை ஒழித்துக்கொள்ளாது பல்கணி கம்பிகளில் தனது முன்னங்கால்கள் இரண்டையும் போட்டுவாறு செவிகளை உயர்த்திய படி வைத்த கண் வாங்காது என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். மிருகங்களுக்கு என்று ஓர் மொழியுண்டு அந்த மொழியில் நாங்கள் அவர்களிடம் தொடுகையை மேற்கொண்டால் அவைகள் எந்த சூழ்நிலைகளிலும் தங்களையே பொருட்படுத்தாது எங்கள் வசமாகும். சமகாலத்தில் மனிதர்களிடம் இல்லாத பல நல்ல குணங்கள் இந்த பிராணிகளிடமே உண்டு என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அல்விட் -இன் உபசரிப்பில் நான் அகமகிழ்ந்தாலும் இந்த ஜூனியர் என்னை மறக்க முடியாத பந்தத்தைக் கொடுத்தவர். அந்தவகையில் இவரை தன்பிள்ளை போல் வளர்க்கும் அல்விட் பாராட்டுக்குரியவரே.

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...