Skip to main content

குரலற்றவரின் குரல் ஒரு பார்வை – தனிமரம் நேசன்



புலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிகபங்களிப்பை வழங்கியிருக்கின்றது! தொடர்ந்தும்வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விடயம். அந்த வகையில் இவ்வாரம் பாரிசில் இன்னொரு இலக்கியமலரினை கைகளில் பெறும் வாய்ப்பு கிடைத்ததுமகிழ்ச்சி எனலாம்.

நேர்காணல்கள் இன்று ஊடகங்கள் எங்கும் இடம்பெறுகின்ற ஒரு விடயமாகிவிட்டது .என்றாலும்இலக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யும்போது பல சொல்லப்படாத மூன்றாவது கோணத்தில்இருந்து சமூகத்திக்கு கருத்தாளம் மிக்க செய்திகள்வந்தடைகிறது.

பாரிசில் வாழும் கோமகன் என்றுஇலக்கியவட்டத்தில் அறியப்படும் மூத்த படைப்பாளிதியாகராஜா ராஜ ராஜன் அவர்கள் பல்வேறுசஞ்சிகைகளுக்காக தான் நேர்கொண்டஈழத்துப்படைப்பாளிகள் /புலம்பெயர்படைப்பாளிகள் என 14 பேரிடம் தொடர்பைஏற்படுத்தி அவர்களிடம் பெற்ற பதில்களைதொகுத்து அச்சில் கொண்டுவந்து இருக்கின்றார்குரலற்றவன் குரலாக!

இந்த நூல் இப்போது தாயகத்தில் பல இடங்களில்வெளியீட்டு விழாவைக்கண்டு கொண்டேவருக்கின்றது சிறப்பாக .

இனி வரும் நாட்களில் பாரிசிலும் வெளியீட்டுவிழாநிகழும் என்ற நம்பிக்கையோடு! தனிமரமும் காத்துஇருக்கின்றேன் நேரம் ,காலம் கூடிவந்தால்வாசகனாக கலந்துகொள்வதுக்கு.

கோமகன். அவர்கள் வலைப்பதிவும் எழுதும் ஒருவர்-http://koomagan.blogspot.fr/

முன்னர் கோமகன் சிறுகதைகள் தொகுப்பைவெளியீடு செய்து இருந்தவர் அதன் தொடர்ஆர்வத்தில் தான் இந்த இரண்டாவது நூல் கைகளில்புரள்கின்றது. ஈழத்து இலக்கியத்தின் தாக்கம் அல்லது அதன் ஆராட்சித்தேடல் என்பது ஒரு வரையறைக்குள் அடக்கமுடியாத ஒருவிடயம் எனலாம்.

மூத்தபடைப்படைப்பாளிகளுடன், இளையபடைப்பாளிகளையும் இணைக்கும் ஒரு தராசுபோலகோமகனின் நேர்காணல் நூலினைப்பார்க்கின்றேன்.

நூலில் தாயக விடுதலைக்கு உயிர்கொடுத்தமாவீர்கள் முதல் சாதாரண அப்பாவி மக்களுக்கும்சமர்ப்பணம் செய்து தன் நேர்காணலுக்கு வாசல்திறக்கும் ஆசிரியர்.

முதலில் கேள்விகளை இன்றைய ஈழத்து இளையபடைப்பாளி யோ. கர்ணன் அவர்களுடனான இலக்கிய ,சமூக ,கலாச்சார ,போரியல் முடிவு,போரியல் இலக்கியம் அதன் மெளனம் அதன்குறுக்குவெட்டுக்கள் அதன் பின் இன்றைய தேக்கஅரசியல் ,பின் நவீனத்துவம் அடிப்படைமக்களின் வாழ்வாதார நிலை ,அரசியல் தீர்வுத்திட்டம்,இலங்கை ஆட்சியார்களின் நாடகம், புலம்பெயர்நிதிப்பாச்சல், முகநூல் , குறுபடம் பற்றிய பார்வைஎன்பன பற்றியும் கேள்விகள் என்னிடம் பதில்கள் உங்களிடம் இருந்து வரட்டும் என்ற தோரணையில் மிகவும் அதிகமான நேர்காணலை காலத்தின் தேவையை உணர்ந்து கேட்டு இருக்கின்றார். யோ .கர்ணன் படைப்புக்கள் ஏதும் இதுவரைவாசிக்கதோன்றவில்லை இனி தேடி தனிமரம்வாசிக்கவேண்டும் ஐயா!

ஒவ்வொரு பதிலையும் வாசகர்கள் தேடி வாசிக்கவேண்டும் .அவர்களின் சுய பதில்கள் பற்றிய பன்முகக்கேள்விகள் இன்னும் பல கேள்விகளைபுரட்டி புதிய மெருகூட்டலுக்கு இன்னும் இந்த நூலும்கைகொடுக்கும் ஒரு குறிப்பேடு இனி வரும்காலங்களில் நேர்காணல் செய்வோருக்கு. இந்நூல்ஒரு அச்சில் இருக்கும் ஆதார அட்டை போல ))). 11-26வரை!

அடுத்த பக்கம் -என் பார்வையில் (201-218)புலம்பெயர் தேசத்தில் வாழும் மூத்த படைப்பாளிஇளவாலை விஜயேந்திரன் அவர்களின்கவிதைத்துறை அனுபவம் ,அவர்காலத்தின் இலக்கியபோக்கும் ,அரசியல் புறச்சூழல் என்பவற்றின் இன்ஊடாக அக்கால வாழ்க்கை முறையும் அவர் போலபலர் புலம்பெயரக்காரணம் என்ன என்பன பதிவுசெய்யப்படுகின்றது.

அவரின் புதிய இலக்கிய வருகை பற்றி , தேக்கநிலை,சோம்பல் ,எல்லாம் இந்த நேரடி முகத்தேடலில்நிறைய காத்திரமான கருத்துக்கள் பகிரப்பட்டுஇருக்கின்றது .

இலக்கியத்தில் திறனாய்வு என்பது ஒரு குருடன்யாணை பார்த்த கதை போல எனலாம்.தடவிக்கொடுத்தல், தாக்குதல் ,ஆரத்தழுவுதல்,அறுத்து எறிந்து, அலட்சிப்படுத்தல் என்று ஈழத்துஇலக்கியத்தின் ஆளுமைகளின் முகத்திரைகள் பற்றிஇங்கே சொல்ல ஆயிரம் குற்றட்ச்சாட்டுக்கள்கொட்டிக்கொண்டே போகலாம் !

என்றாலும் இந்தப்பணியைச் செய்வதுக்கும் மொழிஆளுமை ,வித்துவப்படிப்பு என்பனவும் தேவைஎனலாம்.
அந்த வகையில் நேர்காணலுக்குபொருத்தமானவராக அ .ஜேசுராசு (49- 61) அவர்களின்ஆளுமை ,அவரிடம் நூலாசியர் கேட்கும் இன்றையஅரசியல், சமூக /கலாச்சார, இலக்கியபின்நவீனத்துவ போக்கு பற்றி பார்வைக்கு .அழகியல்பதில்கள் அதிகம் அலட்டாத ,சுருக்கமான பதில்கள்என்று நீண்டு செல்கின்றது .

முகநூல் முதல் வலைப்பதிவு , குறுந்திரைப்படம்பற்றிய பார்வைகள் எல்லாம் அலசப்படுகின்றது.சகோதரமொழி(சிங்கள) இலக்கிய வாசகர்கள்,அவர்களின் மனநிலைப்பாடுகள் இலக்கியப்பாலம் ,எல்லாம் கேள்விகள் கேட்டே ஒப்பாரி வைத்துஇருப்பது பற்றிய நூலாசியரின் கேள்வி பதில்!

வாசிப்பு அனுபவத்தை கிரகித்துக்கொண்டே அடுத்தயார் என்று தேடல் கொண்டால் அங்கே !

ஈழத்து இலக்கியத்தில் பிரபல்யம் லெ.முருகபூபதியின் (62- 91) அவுஸ்ரேலியாபுலம்பெயர் வாழ்வியல் , புலம்பெயர் இலக்கியம் ,இலக்கியம் தான் அடுத்த யதார்த்த இலக்கியம் என்றபோர் முரசு கொடிய அதன் எதிர்வினைகள் பெற்றஇலக்கிய கலகக்கார் , ஆளுமைமிக்க படைப்பாளி /ஈழத்து/புலம்பெயர் இலக்கிய பணியில் மூத்தபடைப்பாளியின் இன்னொரு முகம் இது என்று மூத்தவர் எஸ் . பொ முதல், கொழும்பு இலக்கியமுற்போக்கு, பின்போக்கு அணிகள் பற்றியும்.கூழ்முட்டை எறிந்த வரலாற்றுக்கதைகள் எல்லாம் இலக்கிய கலகங்கள் பற்றி எல்லாம் நீண்ட தேடல்கேள்விகள் ஆசிரியருகும் ,எஸ் .பொ அன்புடன்அழைக்கும் முருகுக்கும் இடையில் உள்ள இலக்கியஉள்குத்துக்கள் பவணி வருகின்றது.

அந்தக்கால இலக்கியம் கொஞ்சம் சுவாரசியம்மிக்கது காரணம் இந்த உரையால்களின் /கேள்விகளின் புறச்சூழல் பின்னனி இலங்கைகல்வியல்த்துறையிலும் உயர்தரத்தில் தமிழ்இலக்கியப்பாடத்தில் இருக்கின்றது எனலாம். கொஞ்சம் பள்ளிக்காலத்துக்கும் போய் வந்த சுவாரசியம் .சுருட்டு குடித்தால் இலக்கிய போதைஎப்படி இருக்கும் என்பதை என் பள்ளி தமிழ்ஆசானையும் சேர்த்தே நினைக்கின்றேன் (வடக்கு,கிழக்கு ராசி அப்படி)

மிகவும் நேர்த்தியான பல சொல்லப்படாத கொழும்பு/ வடமேல் மாகாண இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது . முருகுவின் நேர்காணல்ஆனால் அவரின் இன்னொரு மனநிலை பற்றியஆய்வு/தேடல் பற்றி சிந்தித்தவாறே!

இவை காலத்தின் தரவுகள் அடுத்த தலைமுறைக்குஎதைக்கொடுக்கப் போறோம் என்ற கேள்விக்குபுலோலியூரானின் கேள்வி பதில்கள்சிந்திக்கவைக்கின்றது. ஈழத்தின் மூத்தவர்களில்இடைநிலைப்படைப்பாளிகளில் ஒருவர் புலோலியூரான்(156-183) .அவரின்பன்முகத்திறமையும் ,அறியாத செய்திகளையும்,தொழில்நுட்ப விரிவுகளையும் ,அலசுகின்றார்.கோமகன் அவர்கள் . நூல் ஆசிரியரின் வாசிப்புபிரமிக்கவைக்கின்றது .

இன்றைய பெண்ணியம் பேசுவோரின் குரல்களாகஇன்றைய புலம்பெயர்வாழ்க்கை , காதல், திருமணம்,எழுத்துப்பணி, அரசியல் பணி, நவீன ஆய்வுமுறைகள், முகநூல் இலக்கியப்போக்கு , போரின் பின் தாயகமக்களின் தேடல் வாழ்வியல், பெண்களின் கலாச்சாரசீரழிவு நிலை என்ற ஊடக கோஷங்கள், நிதிமோசடிசெய்த புலம்பெயர் அமைப்புக்களின் தூரோகத்தன,ஈனச்செயல்கள் முதல் இன்றைய முன்னால்போராளிகளின் அச்ச வாழ்வு வரை ! என இப்படியாகவளரும் சமூக தளங்களில் பெண் நிலை ,என்னநிலையில் இருக்கின்றது என்ற நிவேதா உதயராஜன் உடனான நேர்காணல் அதிக விடயத்தைஅலசுகின்றது .241-265)

ஒரு வானொலியில் செய்தி வாசிக்கும் ஆர்வத்தில்அவர் பெற்ற நேரடி அனுபவம் எல்லாம் இன்னும்புலம்பெயர் ஊடகத்தில் நடக்கும் தில்லுமுல்லுக்களைவெளிப்படையாக அறிய முடிகின்றது.

மரபுக்கவிதை, பின் நவீனத்துவக்கவிதை ,ஈழத்துஇலக்கிய விருதுகள் ,இலங்கை சாஹித்தியஅக்கடமியின் தேர்வுகளில் எப்படி உன்னை நான்சொரிகின்றேன் ,என்னை நீ பாராட்டு என்றபிரதேசவாத நிலையை பகிரும் நேர்காணலாகசோலைக்கிளியுடன் (283-294)கேள்விப்பதில்கள்சோலைக்கிளிக்கு வரும் காதல் கடிதங்கள் என நகைச்சுவையுடன் சிந்திக்கவும் ,சீர்தூக்கியும்பார்க்கவேண்டிய கவிதை மேடையைப்பற்றியும்இலங்கை ,இஸ்லாமிய மக்களின்தமிழ்த்தொண்டுக்கள், கிழக்குமாகாணஇஸ்லாமியர்களின் அரசியல் நிலைப்பாடு ,

அவர்களிடத்தில் இருக்கும் சாதி நிலைப்பாடு முதல்இன்றைய நவீன வருகை முகநூலில் எழுதும்கவிதைகள் நிலை பற்றிய கேள்விக்களுக்குசோலைக்கிளியின் கருத்துரை என குரலற்றவன்குரல் வாசிப்பு தேடலுக்கு ஒரு முத்துக்குவியல்!

இந்திய எலக்கிய கோமாதாக்களின் மூத்திரம்குடிக்க ஆசைப்படும் ஈழத்து சிஹாமனிகள் பற்றி தொடர்ந்து பேசலாம்)))

http://www.thanimaram.com/2017/06/1.html

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...