Skip to main content

ஓர் படைப்பாளியின் படைப்பு சுதந்திரம் பற்றி அருள்இனியன் ஊடாக……..





எனது எழுத்துக்களிலும் எனது படைப்புகள் சார்ந்த கருத்துக்களிலும் நான் என்றுமே சமரசம் வைத்துக்கொள்வதில்லை. அதை ஒரு படைப்பாளியினுடைய ஆக்கு சுதந்திரத்துக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையாகவே எண்ணி வருகின்றேன் . எனது எழுத்துக்களுக்கு அப்படி ஓர் நிலை வருமானால் எனது பேனையை முறித்து விட்டு எழுத்துப்பரப்பில் இருந்து நான் ஒதுங்கி விடுவதி எனது இறுதித்தேர்வாக இருக்கும். நிற்க உடகாவியலாளர் அருள் இனியனதும் அவரது கேரளா டயறீஸ் தொடர்பாகப் பொதுவெளியில் எழுந்த சர்ச்சைகளுக்கு நான் நேற்று முகநூலில் வைத்திருந்த நிலைத்தகவல்கள் மற்றும் கருத்துக்களில் எதுவித மாற்றங்களும் இல்லை. இந்த எனது நிலைத்தகவலிலும் கருத்துக்களிலும் அருள் இனியன் என்ற படைப்பாளி எனது கருத்துக்களுக்கான ஓர் குறியீடு அவ்வளவே. ஓர் படைப்பாளியினது கருத்துச்சுதந்திரத்தை மறுதலிப்பதும் அவனது படைப்பை தடை செய்தலுக்குமான பாசிஸப் போக்குகளுக்கு எதிரான எனது எதிர்புணர்வையே நான் பதிவிட்டிருந்தேன் . அத்துடன் படைப்பாளிகளது சுதந்திரங்கள், அவை தொடர்பான வரையறைகள், ஓர் படைப்பாளியினது இருப்புகள், மற்றும் தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற போலித்தனங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற எனது நண்பர் தெய்வீகன் முகநூலில் எழுதியுள்ள நிலைத்தகவலின் பொருளடக்கமே எனது நிலைப்பாடுமாகும். நன்றி .

கோமகன்

000000000000000000000000000000000000000

2012 ஆம் ஆண்டு தனது பெயரில் ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையொன்றிற்காக ஊடகவியலாளர் அருளினியன் இன்று யாழ்ப்பாணத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதாவது, ஒரு பத்திரிகையில் வெளியான ஆக்கத்துக்கு பத்திரிகை பொறுப்பேற்பதற்கு அப்பால் அதில் எழுதியவர்களுக்கும் தனிபட்ட பொறுப்பிருக்கிறது என்பதனை தன் பக்க நியாயமாக விளக்க முனைந்திருக்கிறார். ஊடக பொதுநியாயத்தின் பிரகாரம் இது தேவையில்லாத விடயமென்றாலும்கூட கடந்த சில நாட்களாக அருளினியனுக்கு விடப்பட்ட தனிப்பட்ட அச்சுறுத்தல்கள், அவர் வீட்டுக்கு அழைப்பெடுத்து விடுக்கப்பட்ட மிரட்டல்கள் போன்ற அழுத்தங்களின் வெளிப்பாடாக இந்த பொறுப்புத்துறப்பு இடம்பெற்றிருப்பது இதன் பின்னணியை வலு தெளிவாகவே எடுத்துக்காட்டியிருக்கிறது.
பெரிய பெரிய கட்சிகளே இன்று சமூக வலைத்தளங்களில் தங்களை புரோமஷன் செய்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், ‘கேரள டயரீஸ்” புத்தக வெளியீட்டினை தடுத்து நிறுத்துவதற்கு யாழ்ப்பாணத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டுமளவுக்கு இந்த கும்பல்கள் வலுப்பெற்றிருப்பதும் இவற்றின் பின்னணியில் உள்ள அரூப கரங்களை நன்றாக வெளிக்காட்டிவிட்டன.

இது இவ்வாறிருக்கையில் – பெண்போராளிகளை கொச்சையாக விமர்சித்துவிட்டார் என்று அருளினியன் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து கரகமாடுகின்ற முகநூல் கும்பல்கள் இதனை மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடுவதுடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வையும் தடுத்துநிறுத்தப்போவதாக சூளுரைத்திருக்கிறார்கள். அருளினியனை தாக்கப்போகிறோம் என்கிறார்கள். இவற்றை நிகழ்வு ஏற்பாட்டுக்குழு காவல்துறையினரின் ஊடாக அணுகுவது இந்த நேரத்தில் முக்கியமானது.
இந்த வேளையில்தான் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளாதிருக்கிறது. இந்த கேள்விகளுக்கு எந்த தரப்பின் ஊடகவியலாளர் சந்திப்புக்கு போவதென்றும் தெரியாமலுள்ளது.

1) பெண் போராளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான பதிவுக்கு மன்னிப்புக்கோரியுள்ள அருளினியன், அந்த கட்டுரையில் விகடன்தான் தன்னை மாட்டிவிட்டது என்ற தோரணையில் இன்று பதிலளித்து விகடன் மீது வெளிப்படையாகவே பழிசுமத்தியிருக்கிறார். அப்படியானால், தற்போது அருளினியன் விடயத்தில் சங்கு ஊதும் கும்பல்கள் இனிமேல் தமிழர் தாயகத்துக்கு வருகின்ற விகடன் இதழ்களை தடை செய்வதற்கு தயாரா?

2) சாதி மற்றும் மத விவகாரங்களை – குறிப்பாக ஆறுமுகநாவலரை – விமர்சித்து வெளியாகவுள்ள ‘கேரள டயரீஸ்” என்ற புத்தகத்தை யாழ் இந்து கல்லூரியில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ‘நாயன்மார்கள்” சிலர் கோட்டம், வட்டம், வலயம் என்று எல்லா இடங்களுக்கும் மரதன் ஓடி கடைசியில் அந்த மண்டபத்தையும் தடை செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படியானால், வாழ்நாள் முழுவதும் சாதியம் – தலித்தியம் என்பவற்றை தவிர வேறு எதையும் பேசாத பூர்வ ஜென்ம புரட்சிவாதிகள் இன்னமும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். குறைந்நது அருளினியனுக்கு சார்பாக ஒரு அறிக்கைகூட விடமுடியவில்லையா?

3) நடந்து முடிந்த 47 ஆவது இலக்கிய சந்திப்பின்போது – கத்னா விகாரத்தில் – சர்மிளா அக்காவை பேச அனுமதிக்கவில்லை என்பதற்காக கருத்துச்சுதந்திரம் பறிபோய்விட்டதாக இரவெல்லாம் பரா லைட் அடித்து பிரச்சாரம் செய்துவிட்டு பகல் முழுவதும் பரசூட்டில் ஏறிநின்று புரட்சி செய்த சிங்கங்களே! இன்று அருளினியன் என்ற ஈழத்தமிழனின் புத்தகம் என்னவாகவும் இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால், அதனை வெளியிடுவதற்கான கருத்து சுதந்திரம் “அடித்து முறிப்போம்” “புத்தகத்தை எரிப்போம்” என்றளவுக்கு முற்றிப்போயிருக்கிறதே! என்ன பேச்சையே காணோம்?

4) யாழ்ப்பாணம் நூலகத்துக்கு பின்பாக வைத்து இலக்கிய தோழர் ஒருவரை சைக்கிளால் தள்ளிவிட்டதற்கே அதனை தெய்வத்துக்கு ஏற்பட்ட குற்றமாக விழித்து அறிக்கை விடுத்து அதனை பகிர்ந்துகொண்டு திரிந்த ‘விதை குழுமம்” போன்ற அமைப்புக்கள் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் – கருத்து சுதந்திரத்துக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள – அடக்குமுறைக்கு தலைகாட்ட வரமாட்டீர்களா? அல்லது அருளினியனையும் யாராவது சைக்கிளால் தள்ளி விழுத்தினால்தான் வருவீர்களா?

இவற்றுக்கெல்லாம் யாரும் பதில் தரமாட்டார்கள். இது தொடர்பாக முதலில் நான் பதிவு செய்த விடயத்தைத்தான் திரும்பவும் சொல்லவருகிறேன். எங்களுக்கு தேவை வசதியான போராட்டங்கள். பெண்போராளிகளை கொச்சையாக எழுதி தனக்கொரு ஊடக வெளிச்சத்தை சம்பாதித்துக்கொண்டார் என்று அருளினியனை குற்றச்சாட்டும் அதே கும்பல், இந்த அருளினியனை வைத்து தாளிப்பதன் மூலம் தங்களின் மீது ஊடக வெளிச்சத்தை கோரி நிற்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இதன்மூலம்தான் இவர்கள் தங்களை ஏதோ பெரிய புரட்சிகர முன்னணியாக பிரகடனம் செய்துகொள்ள பார்க்கிறார்கள்.

அதுபோல, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய ஒழுக்க நெறிகள் எனப்படும் விடயங்கள்வரை ஊடறத்து ஊடகவியல் செய்யவேண்டும் என்று துடித்துக்கொண்ட நாங்கள், யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக தலைவிரித்தாடும் சாதிய – மத வெறியாட்டத்தை கண்டிப்பதற்குக்கூட நாதியற்றவர்களாக இருக்கிறோம். அல்லது அதனை தீர்த்துக்கொள்வதற்கு அறிவார்ந்த அணுகுமுறைகளை தொலைத்துவிட்ட வறியவர்களாக கிடக்கிறோம். ஒரு சிலரின் முகநூல் பதிவுகள் “இது நடக்கும் என்று தெரியாதா” என்ற பெருமூச்சுக்களுக்குள் மாத்திரம் அடங்கிவிடுகின்றன.
இலக்கியம் என்று வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. நாங்கள் விரல் எண்ணி பார்த்து பார்த்து அறச்சீற்றம் கொள்வதில் விண்ணர்கள். நித்திரையால் எழும்பி வந்தவர்கள்போல யாரையாவது பிடித்து மூத்திர சந்தில்வைத்து கும்மு கும்மென்று கும்முவோம். கண்டன அறிக்கைள் எழுதுவோம். பதிவுகளை போடுவோம். பின்னர் அழிப்போம். அதைப்பற்றி நல்லிணக்க வகுப்பெடுப்போம். கொஞ்ச காலத்தில் பதங்கமாகிவிடுவோம்.
வாழிய வாழிய வாழியவே!!

நன்றி : தெய்வீகன்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம