கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது : ” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக……. கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர்...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்