Skip to main content

யார் இலக்கியப் போலிகள் ? அ.யேசுராசா என் மீது வைத்துள்ள அவதூறுக்கு எதிர் வினை



கவிஞர் கருணாகரன் தாயகம் மற்றும் தேனியில் எழுதிய ‘இலக்கிய போலிகளும் அரசியற் போலிகளும்’ என்ற கட்டுரை தொடர்பாகவும் முகநூல் உட்பெட்டி மூலம் கவிஞர் கருணாகரன் மீது அவதூறு பரப்பி வந்த அ.யேசுராசா, அந்த அவதூறு தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பொதுவெளியில் பதிந்திருந்தார். அதற்கு நானும் எனது எண்ணப்பாடுகளைப் பொதுவெளியில் பதிந்திருந்தேன். அது இவ்வாறாக அமைந்தது :

” அ யேசுராசாவின் தன்நிலை விளக்கம் தொடர்பாக…….

கருணாகரனின் கட்டுரை தொடர்பாக அ.யேசுராசாவின் பதில் வாசிக்க கிடைத்தது. அ.யேசுராசாவில் நான் என்றுமே மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன், வைத்திருக்கின்றேன். இப்பொழுது, எனக்கு அவரது இன்றய பதில் மிகவும் அயர்ச்சியை தருகின்றது. கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து அ யேசுராசாவுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ? அய்யா உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய நீங்களே அறம் பிறழ்ந்து நடக்கலாமா? இங்கு யார் கருப்பு வெள்ளை என்பதல்ல பிரச்சனை ஒருவர் பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ? நீங்கள், அலை,திசை,கவிதை,தெரிதல் மூலம் தமிழ் எழுத்துப்பரப்புக்கு ஆற்றிய பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை அதேவேளையில் நீங்கள் செய்வதெல்லாம் சரி என்றும் என்னால் எடுக்கமுடியவில்லை. நீங்கள் என்னை பேசவும் கண்டிக்கவும் பூரண உரிமையுண்டு ஆனால் உங்கள் அறம் பிறழ்ந்த செய்கையை என்னால் ரசிக்க முடியவில்லை”.

பிற்குறிப்பு : இதனை நீங்கள் கருணாகரனுக்கான ஆதரவுப் பதிவு என்று எடுத்தால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை.

கோமகன்

000000000000000000000

எனது இந்தப் பதிவுக்கு அ. யேசுராசா எனது முகநூல் உட்பெட்டியில் இவ்வாறாகப் பதிலளித்திருந்தார் :

“எப்போதும், “கொளுவிவிட்டுக் கூத்துப் பார்க்க விரும்புகிற” உங்களுக்கெல்லாம், அறம்சார்ந்த நிலைப்பாடு என ஒன்றும் இருக்கிறதோ! நல்ல நகைச்சுவை. எனது நட்புப் பட்டியலில் இருக்கத் தகுதியற்றதால், உங்களை அதிலிருந்து நீக்குகிறேன்”!

என்னை அவர் நட்பாக வைத்திருப்பது, விடுவது அவரது சுதந்திரம். ஆனால் எனது கேள்விகள் நிலுவையில் நிற்கின்றது அய்யா. அத்துடன் புதிதாக என் மீதும் ஒரு அவதூறை கிளப்பியிருக்கின்றார் அ. யேசுராசா. அவரது சித்து விளையாட்டுகள் அம்பலமான நிலையில் தவறுக்கு மேல் தவறுகள் விடுகின்றார் என்றே எண்ண வேண்டியுள்ளது. இந்த எதிர்வினையின் மூலம் பொதுவெளியில் அ.யேசுராசாவிடம் 03 கேள்விகளை நான் முன் வைக்கின்றேன்.

01 கவிஞர் கருணாகரனின் கட்டுரையில் மாற்றுக்கருத்து உங்களுக்கு இருக்குமானால் அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தாது செவ்விந்தியன் எழுதிய கட்டுரையை துணைக்கிழுத்து உள் பெட்டியில் பகிரவேண்டிய அத்தியாவசியம்தான் என்ன ?

02 ஒருவர் உங்களை பொது விவாதத்திற்கு அழைக்கும் பொழுது அதனை எதிர்கொள்கின்ற துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லாது போனது ?

03 அய்யா உங்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகியது . நான் எங்கே எப்பொழுது உங்கள் இருவரையும் கொளுவி விட்டு கூத்துப் பார்த்தேன் ?

அய்யா இறுதிக்கு கேள்வி மிகவும் முக்கியமானது. உங்களை நீங்கள் ‘புனிதப்படுத்துவதற்காக’ எதுவரைக்கும் இறங்கத்தயாராக உள்ளீர்கள் என்பதனை நீங்கள் எனது உள் பெட்டியில் எழுதி நிரூபணம் செய்து விட்டீர்கள். இத்தகைய ‘கீழ்மை இலக்கிய அரசியலால்’ இதுவரையில் ஈழத்து தமிழ் எழுத்துப் பரப்பிற்கு நீங்கள் வைத்த வைத்திருக்கின்ற வகிபாகம் கேள்விக்குறியாகின்றது. உங்கள் கீழ்மையான அறம்பாடலுக்கு நீங்கள் எழுதிய ‘நினைவுக்கு குறிப்புகள்’ நூலே தக்கசான்றாகும். அதில் ‘ஐயர்’ தவிர்ந்து நிலாந்தனில் இருந்து வயது பேதம் பாராது அனைத்து எழுத்தாளர்களையுமே நீங்கள் அறம்பாடி தள்ளியிருந்தீர்கள். அதாவது உங்களை புனிதப்படுத்தி சக எழுத்தாளர்களையும் அவர்களது உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி இருந்தீர்கள்.

அய்யா நீங்கள் தமிழையும் எழுத்தையும் உண்மையிலேயே நேசிப்பவராக இருந்தால் எனது 3 கேள்விகளுக்கும் பொதுவெளியில் பகிரங்கமாகப் பதில் தாருங்கள். நன்றி வணக்கம்.





கோமகன்

28 ஆடி 2019

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...