Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்- நெடுங்கதை.

அவன் யார்? –நெடுங்கதை.

1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டாவெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இருப்பது வேறுவேறானாலும் எங்கள் கூட்டு உடையாது இறுகித்தான் இருந்தது . சிறுவயதில் காதலித்தவனுக்கு தாய் முறுகியபொழுது அவாவைச் சமாதானம் செயது குகனுக்குக் கலியாணம் செய்வித்ததும் நான் தான் . பின்பு 87களில் மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு இங்கு என்னிடம் வந்துவிட்டான் .ஆரம்பத்தில் எ...