Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்-இலக்கியம்.

அடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்

வணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே! இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ தொடர்பான அறிவித்தல் எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இது தொடர்பாக நான் தமிழக எழுத்தாளர்கள் பலரிடம் தொடர்பு கொள்வதுண்டு. அவர்களும் என்னுடன் தொடர்பாடலில் இருந்ததுண்டு. அவர்களுக்கு நடுகுழுமத்தின் சார்பில் நன்றிகள். யாரினதும் சிபாரிசுகள் இல்லாது அல்லது உள்ளடி வேலைகள் செய்யாது இன்று காலை தமிழக சிறப்பிதழ் தொடர்பாக எழுத்தாளர் சாருவிடம் ஓர் ஆக்கம் கேட்டு மின்னஞ்சல் இட்டிருந்தேன். நான் மின்னஞ்சல் செய்து இரண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளாகவே அவரது இணையத்தளத்தில் நான் அவரிடம் போட்டிருந்த மின்னஞ்சல் நக்கல் நளினங்களுடன் வெளியாகியது மட்டுமல்லாது அவரது முகநூலிலும் பதியப்பட்டிருந்தது. ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் பொதுவெளியில் வெளியாகியதால் எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை மாற்றியமைத்தது. அதாவது தனது பண்பை உலகறியச்செய்து அவர் அடி புண்ட சருவமாகி விட்டார். வாசகர் பரப்பில் நடு இணைய சிற்றிதழுக்கு என்று ஒரு இடமுண்டு...

பூவுக்கும் பெயருண்டு இறுதிப்பாகம்

95 வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) - Plumbago rosea வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர் . மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை. இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர். குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்கியவனைக் காதலித்தவள். அவள் தன் சீவிமுடித்த தன் கூந்தலில் வேரிமலர் சூடியிருந்தாள்.  ஓரி தன்னைக் காட்டில் கண்டு பாடிய புலவர் வன்பரணருக்கு நெய் போன்ற வேரியை(தேனை) உண்ணத் தந்தானாம் . January 31, 2013

பூவுக்கும் பெயருண்டு 10

91 வானிப் பூ - Euonymus dichotomus வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. இளஞ்சேரல் இரும்பொறை ‘சாந்துவரு வானி நீரினும் தண் சாயலன்’ எனப் போற்றப்படுகிறான்.  வானியாறு இக்காலத்தில் சிறுவானியாறு என வழங்கப்படுகிறது. இது கோயமுத்தூருக்கு நீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றுப்படுகையில் வானி மலர் மிகுந்திருந்தது பற்றி இவ்வாற்றுக்கு இப் பெயர் தோன்றியது. http://ta.wikipedia..../wiki/வானி_மலர் 0000000000000000000000000000 92 வெட்சிப் பூ - Ixora coccinea.L வெட்சி (இட்லிப் பூ அல்லது இட்லி பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.  உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு ...

பூவுக்கும் பெயருண்டு 09

81 மாப் பூ தேமா- Mangifera indica ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை.  மருத நிலத்தின் வளமை விளைவு அறா வியன் கழனி கார்க்கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் கவின் வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற் பூச்சாம்பும் புலத்து ஆங்கண், காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக்குழவி கூட்டு நிழல் துயில் வதியும் கோள் தெங்கின் , குலை வாழை, காய்க் கமுகின் , கமழ் மஞ்சள் இனமாவின் இணர்ப் பெண்ணை முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19) கருத்துரை : சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்...

பூவுக்கும் பெயருண்டு 08

41 செங்கோடுவரிப் பூ .- Plumbago rosea 00000000000000000000000000000000 42 செம்மல்ப் பூ - Jasminum grandiflorum செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது. செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று. http://ta.wikipedia....rg/wiki/செம்மல்       0000000000000000000000 43 செருந்திப் பூ - Ochna squarrosa அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, பன்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக் கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி, ‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக், ...

பூவுக்கும் பெயருண்டு 07

71 பிடவம் பூ  இது இந்தப் பூவுடன் சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தச் சங்ககாலப் பாடல் சொல்லும் செய்திக்காக இதில் இணைப்பது அத்தியாவசியமாக எனக்குப் படுகின்றது . உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன் . பூங்கணுத்திரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் 27 நாள்மீன் வரிசையில் 12ஆவது மீன். உத்திரை நாளில்(நட்சத்திரத்தில்) பிறந்த இவருக்கு உத்திரை என்று பெயரிட்டனர். புலவராக விளங்கியதால் இவரை உத்திரையார் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கலாயினர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது. அதனால் இவரைப் பூங்கண் உத்திரையார் என்றனர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு 277 ஆகியவை மூங்கில் இலையில் தூங்கும் பனிநீர் போல தாயின் கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளி தொங்குகிறது. அவள் தலைமுடி மீன் உண்ணும் கொக்கின் தூவி போல் வெளுத்திருக்கிறது. அவள் மகன் போருக்குச் சென்றான். போரில் மாண்டான். எனினும் பகைவனின் களிற்றை ...