81 மாப் பூ தேமா- Mangifera indica
ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை.
மருத நிலத்தின் வளமை
விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)
கருத்துரை :
சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.
நற்றிணை 87, நக்கண்ணையார் .
நெய்தல் திணை – தலைவி சொன்னது .
உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.
ஐங்குறுநூறு 349,
ஓதலாந்தையார். பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது.
அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.
குறுந்தொகை 26,
கொல்லன் அழிசி . குறிஞ்சி திணை – தோழி சொன்னது .
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேன்கொக்கு அருந்தும் முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.
குறுந்தொகை 278
பேரிசாத்தனார்.
பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது .
உறுவளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல் என் சீறடிச்
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து
ஏற்பன ஏற்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
000000000000000000000000
82 முல்லைப் பூ ( கல் இவர் முல்லை ) Jasminum sambac
முல்லை நிலத்து மக்களுக்கு ஆனிரை மேய்த்தல் தொழில். அடுத்த நாட்டு ஆடுமாடுகளைக் கவர்ந்து செல்வதும், போரிட்டு மீட்பதும் இந்த நிலத்தில் நிகழும். மேய்க்கும் காலத்திலும், போரிடும் காலங்களிலும் மனைவி கணவனைப் பிரிந்திருக்க வேண்டிவரும். .இந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டிருத்தலை ‘இருத்தல்’ என்றனர். இருத்தலோடு தொடர்புடைய நிகழ்வுகளை ‘இருத்தல் நிமித்தம்’ என்றனர் மருதநிலத்து வேந்தன் போருக்காகப் பிரிவது பாலை. நெய்தல் நிலத்து ஆண்நுளையர் கடலில் மீனுக்காகப் பிரிவது நெய்தல். நானிலத்து மக்கள் பொருளுக்காகவும், போருக்காகவும், தூது சொல்லவும், கல்விக்காகவும் பிரிதல் பாலை. இந்தப் பிரிவுகளை மகளிர் தாங்கிக்கொண்டிருத்தலை முல்லைத்திணை எனக் கொள்ளும் மரபு இல்லை.
முல்லை புறத்திணைத் துறையில் விரிபொருள்.
மூதின்முல்லை என்னும்போது குடும்பத்தில் முதிர்ந்த இல்லத்தரசி விருந்தோம்பி, வீரனாக மகனை வளர்க்கும் திறம் கூறப்படும்.
வல்லாண்முல்லை என்னும்போது குடும்பத்தில் வாழும் வீரன் ஒருவன் தன் உடைமைகளை ஏற்போருக்கு வழங்கி மகிழும் வள்ளண்மைத் திறம் கூறப்படும்.
முல்லைப்பூ வகை :
குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் முல்லை (நன்முல்லை), கல் இவர் முல்லை, குல்லை, தளவம் , நந்தி ,பிடவம் , மௌவல் ஆகிய மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.
முல்லை :
முல்லை என்னும் சொல்லே காட்டில் மலரும் வனமுல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான். இதற்குக் காய்கள் உண்டு. முல்லை - நன்முல்லை :
அள்ளூர் நன்முல்லையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இக்காலத்தில் மகளிர் தலையில் சூடிக்கொள்ளும் முல்லை இந்த நன்முல்லை ஆகும். இதனைச் சூடிக்கொண்ட புலவர் நன்முல்லையார். இவரது பாடல்களில் 11 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
முல்லை நாள்முல்லை என்னும் நித்தியமுல்லை :
இதற்குப் பருவகாலம் இல்லை. நாள்தோறும் பூக்கும்.
முல்லை தளவம் என்னும் செம்முல்லை சாதிமல்லி :
இதன் புறவிதழின் வெளிப்பக்கம் சிவப்பாக இருக்கும்.
முல்லை அடுக்குமல்லி :
இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும்.
குல்லை என்னும் குட்டிப்பிலாத்தி :
கார் காலத்தில் முதல் மழை பெய்த நாளில் அரும்பு விட்டு புதர் புதராகப் பூத்துக் குலுங்கும்.
பிடவம் :
பிடவம் பூத்துக் குலுங்கும் ஊர் பிடவூர். பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மாண்டபோது அவ்வூரில் பூத்திருந்த பூக்களை யாரும் சூடிக்கொள்ளவில்லை. துக்கம் கொண்டு ஆடும் நாளில் முல்லையே! ஏன் பூக்கிறாய் எனப் புலவர் பாடுகிறார்.
மரமல்லி :
நள்ளிருளில் பூத்து நாறும்(மணக்கும்). இதனை மௌவல் என்பர்.
நள்ளிருள்-நாறி ( நந்தி ) :
நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிட்டை.
http://ta.wikipedia....%AE%95%E0%AF%88
00000000000000000000000000000000000
83 மௌவல் பூ - Jasminum officinale
மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. சங்கநூல் குறிப்புகள்,
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.
குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.
இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.
ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.
மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.
மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.
சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.
நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.
http://ta.wikipedia.....org/wiki/மௌவல்
000000000000000000000000000
84 வகுளம் பூ - Mimusaps elangi
பாறையில் மலர் குவித்த பாவையர்
———– ———— ———– வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான்பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமா ரோடம்,
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை
அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(61-98)
கருத்துரை -
வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர், குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத் தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம், தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும் நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ, முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும் கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ, ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும் தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம் பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும் அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால்
கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.
http://treesinsangam...ளம்-bakul-tree/
000000000000000000000000000
85 வஞ்சிப் பூ
000000000000000000000000000
86 வடவனம் பூ ( துளசிப் பூ ) - Ocimum sanctum hirsutum.
வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது.
http://ta.wikipedia....org/wiki/வடவனம்
00000000000000000000000000000
87 வழை மரப் பூ ( கொங்கு முதிர் நறுவழை )- Ochrocarpus longifolius
வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம். வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்,
ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.
யானை விரும்பும் தழைமரம்.
மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
http://ta.wikipedia....g/wiki/வழை_மரம்
குறுந்தொகை 260, கல்லாடனார், பாலை திணை – தோழி தலைவியிடம் சொன்னது .
குருகும் இரு விசும்பு இவரும் புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்
வருவர் கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
http://treesinsangam.../வழை-சுரபுன்னை/
000000000000000000000000000000
88 வள்ளிப் பூ.- Dioscorea Sp
000000000000000000000000000000
89 வாகைப் பூ.- Albizzia lebbeck
குறுந்தொகை 39. இயற்றியவர் ஔவையார், பாலை திணை – தலைவி சொன்னது.
வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
வாகை மரம் உழிஞ்சில் மரம் என்றும் அழைக்கப்படும் .
http://treesinsangam...ை-sirissa-tree/
வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகைச் சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
http://ta.wikipedia....a.org/wiki/வாகை
0000000000000000000000000000
90 வாழைப் பூ - Musa paradisiaca
பட்டினப்பாலை, ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
மருத நிலத்தின் வளமை
விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)
கருத்துரை :
சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.
http://treesinsangam...ழை-banana-tree/
வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும் . சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
http://ta.wikipedia....a.org/wiki/வாழை
January 29, 2013
Comments
Post a Comment