Skip to main content

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் - பாகம் 14




சுறுக்கருக்கு ஆப்படிச்ச புறா

ஹாய் யூத்ஸ்

சுறுக்கர் இந்த வீட்டுக்கு வந்த காலம் தொட்டு அவரோடை ஒரு புறா பமிலி ஒட்டெண்டால் ஒட்டு பிலாக்காய் பால் ஓட்டு. சுறுக்கற்ரை வீட்டு பல்கணி தான் அவையின்ரை சீவியம். புரியன் பெண்டில் ரெண்டு பெட்டையள் தான் அவையின்ரை பமிலி. அவை ஏன் சுறுக்கரோடை ஒட்டினவை எண்டால், சுறுக்கர் அவைக்குப் பாத்துப் பாராமல் டெயிலி சோறு கொடுக்கிறவர்.

பிரச்சனை என்னவெண்டால் அவை சாப்பிட்டதும் பத்தாமல் பல்கணி எல்லாம் நாஸ்த்தி பண்ணிக்கொண்டு பல்கணி குந்திலை குசாலாய் இருப்பினம். இதாலை சுறுக்கருக்கும் ஹோம் மினிஸ்ட்டரிக்கும் அடிக்கடி ராட்டல் வரும்.

போனவரியம் சுறுக்கர் இருக்கிற அப்பாட்மென்ரின்ரை வெளிப்பக்கம் எல்லாம் திருத்தி பெயின்ற் அடிச்சு நல்ல சோக்காய் சிண்டிக்கா சுறுக்கருக்கு தந்தித்து. சுறுக்கருக்கு வினை இங்கை தான் ஸ்ராட் பண்ணீச்சுது. வெளியாலை திருத்தி பெயின்ற் அடிச்சாப் பிறகு புறா பமிலி இருக்கிற குந்து சின்னனாய் போச்சுது. அவையும் வேறை இடங்களுக்கு போற நோக்கம் சிந்தனையில்லாமல் அந்த சின்ன குந்திலை இருந்து கொண்டு பெயின்ற் அடிச்ச குந்தை நாஸ்த்தி பண்ணி கொண்டிருக்கினம்.

ரெண்டு நாளைக்கு முதல் ஹோம் மினிஸ்ட்டரி இதுகளை பாத்து சன்னதம் ஆடி "இண்டையிலை இருந்து நீயும் புறாவோடை தான் பல்கணியிலை இருக்கவேணும். வீட்டுக்கை வரப்படாது" எண்டு சட்டத்தைப் போட சுறுக்கர் கதி கலங்கிப்போனார் கண்டியளோ. இந்தப் பிரச்சனையை முடிக்க வேண்டும் எண்டு சுறுக்கர் தன்ரை கூட்டாளி ஒருத்தனிட்டை அட்வைஸ் கேட்டார். அவன் சொன்னான் " உது சிம்பிள் மாற்றர் சுறுக்கர். சின்ன தண்ணிப்போத்திலுக்கை கொஞ்ச தண்ணி விட்டு மூடிப்போட்டு குந்திலை வைச்சியள் எண்டால் புறா உங்களை திரும்பியும் பாக்காது " எண்டான். சுறுக்கரும் வலு புழுகத்திலை போதிலுக்கை தண்ணியை விட்டு குந்திலை வைச்சார். இப்ப வேலையாலை வந்து பல்கணியை எட்டிப்பாத்தார் சுறுக்கர் . கோதாரி விழுத்து ......... புறா பமிலி மெல்லிசு மெல்லிசாய் தண்ணிப் போத்திலை ரெண்டு பக்கமும் தள்ளிப் போட்டு நடுவிலை குசாலாய் குத்திக்கொண்டு இருக்கினம். இவையளை என்ன செய்ய ?

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000000

மய்யம்-மும் ஐமிச்சம் ஐயம்பிள்ளையும்

ஐமிச்சம் ஐயம்பிள்ளை: அண்ணை உந்த மய்யம் எண்டால் என்னண்ணை? எல்லாரும் என்னைக் கிடாவுறாங்கள். எதுக்கும் உங்களை கேட்டுப் போட்டு சொல்லுறன் எண்டு போட்டு வந்திருக்கிறன்.

சுருக்கு சுறுக்கர்: இஞ்சை மனுசனை இதுலை இருந்து நிம்மதியாய் குடிக்க விட மாட்டியே? கிளப்பாதை கண்டியோ.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை: என்னண்ணை ரென்சனாகிறியள். உங்களிட்டைத்தானே நான் விட்டு வீதியாய் கேக்கேலும்.

சுருக்கு சுறுக்கர்: போட்டது இறங்க முதல் வடிவாய் சொல்லுறன் கேள். திருப்பித்திருப்பிக் கேக்கப்படாது சொல்லிப்போட்டன்.

ஐமிச்சம் ஐயம்பிள்ளை: நான் திருப்பிக் கேட்டு உங்களை ரென்சன் படுத்த மாட்டன்.

சுருக்கு சுறுக்கர்: மய்யம் எண்ட சொல்லாடாப்பா "நடு" விலை இருந்து வந்தது. இதை பிரான்ஸிலை ரெண்டு வரியத்துக்கு முதலே நாங்கள் கண்டுபிடிச்சுப் போட்டம். இப்ப ஆரோ நடு எண்ட சொல்லிலை இருந்து உருவிப் போட வாக்கணம் கெட்ட சனங்கள் அங்கை நிண்டு கொண்டு "கிய்யோ........" எண்டுதுகள். உதுகளை என்ன செய்யலாம் சொல்லு?

ஐமிச்சம் ஐயம்பிள்ளை: அதுதானே ..........? உங்களுக்கு பட்டாலும் தெளிவாய்த் தான் இருக்கிறியள்.

சுறுக்ஸ் அண்ட் ஐமிச்சம் அண்ட் கோ

00000000000000000000000000000

ஹாய் யூத்ஸ்,

கூட்டாளி ஒருத்தன் இப்பிடி எழுதியிருக்கிறான். என்ன துணிவிலை எழுதினான் எண்டு எனக்கு துண்டாய் விளங்கேலை . பெடி எழுதினது இதுதான் ,

"புலம்பெயர்ந்து போனமா. தேம்ஸ் நதிக்கரையில் கொஞ்சிக் குலாவினமா. அங்கு உலாவரும் வெள்ளைக்காரிகளைப் பார்த்து ரசித்தோமா. நான்கு மசாலாப் படங்களுக்கு விமர்சனம் எழுதினமா. என்று இருக்கணும்".

அப்பிடியெண்டால் ஒருத்தரும் உங்கையிருந்து காசும் கேக்கப்படாது . நாங்களும் ரெண்டு பக்கத்தையும் பொத்திக்கொண்டு இருக்கிறம். நாங்களும் இங்கை எங்களுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருக்கும் .ஆனால் காசுகளையும் உங்கையிருந்து வாங்கிக்கொண்டு "யூ ஷட் அப் ஐஸே" எண்டிறது கொஞ்சம் கூட நால்லாயில்லை சொல்லிப் போட்டன்.

சுருக்கு சுறுக்கர்

00000000000000000000000000000000

உந்த வி சி லெச்சன் நேரத்திலை சுறுக்கர் உங்களோடை கொஞ்சம் கதைக்கலாம் எண்டு பாக்கிறன். நான் ஒண்டும் உங்களைப்போலை மெத்தப்படிச்ச அறிவாளியில்லை கண்டியளோ. அதோடை வெளியாலை இருக்கிற நான் உங்களுக்கு அட்வைஸ் செய்யிறதாய் நினைக்கப்படாது.
சிம்பிளாய் ஒரு மாற்றர் சொல்லுறன். வடக்கிலை எல்லா றோட்டும் காப்பெற் எண்டு கலக்குது. ஆனால் இந்த கொடிகாமம் பருத்தித்துறை றோட் மட்டும் 85 ஆம் ஆண்டு மொடலிலை நிக்குது. இந்த றோட் ஒரு முக்கியமான றோட் . அதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. கதையோட கதையாய் உங்காலை ஆளியவளைப் பக்கம் சொல்லிவேலையில்லை. அந்த சனங்கள் செய்த குத்தமெல்லாம் ஏழையாய் பிறந்ததுதான். கனக்க வேண்டாம் ஏ 09 றோட் நல்ல மழை பெஞ்சுது எண்டால் வெள்ள காடாய் கிடக்கும். ஒரு குத்து மதிப்பிலை தான் வாகனம் ஓடவேணும் கண்டியளோ. இப்ப எல்லாத்துக்கும் பொறுப்பான ஆக்கள் இருக்கினம் தான் ஆனால் அலுவலுகள் நடக்குதில்லை. அதோடை முதல்வர் பறந்து பறந்து "நகர் இணைப்பு ஒப்பந்தம்" எண்டு ஒண்டை போட்டார். வடக்கு கலக்க போகுது என்டு என்னைப்போல சனங்கள் நினைச்சம் ஆனால் அங்கை ஒரு அசுமாத்தங்களையும் காணேலை கண்டியளோ. திட்டங்கள் எல்லாம் கலக்கலாய்த்தான் வருகுது. அதுகளுக்கான காசுகளும் வருகுது. என்ன பிரையோசனம்? ஏதாவது நடந்ததா ? சண்டை முடிஞ்சு இவ்வளவுகாலம் ஆச்சுது. யாழ்தேவி வந்ததும் காப்பெட் றோட் போட்டதும் மட்டும் தான் வடக்கின்ரை அபிவிருத்தியா? இதுகளை எல்லாம் நான் ஒவ்வொரு வரியமும் போற நேரம் கண்டதை சொல்லுறன். எந்தப்பெரிய கொம்பனாய் இருந்தாலும் பொறுப்பிலை இருக்கிறவன் தன்ரை வேலையை செய்யாட்டில் அவனை திருப்பியும் வரவைக்கப்படாது. ஒருத்தனுக்கு லெச்சனிலை வோட் போட ரைட் இருக்கோ அதேயளவு அதை போய் கொட் செய்யிறதுக்கும் ரைட் இருக்கு . அதாலை யோசிச்சு செய்யுங்கோ .

சுருக்கு சுறுக்கர்

00000000000000000000000000000


சிவசத்தியமாய் இண்டைக்குத்தான் தெரியும்

ஹாய் யூத்ஸ்

காலங்காத்தாலை எழும்பி குளிச்சு முழுகி திருநூத்தை அள்ளி பூசிக்கொண்டு சிவசிவா எண்டு சுப்பர் மெண்டிஸை சிப்ப வெளிக்கிட, ஊரிலை இருந்து பங்காளி ஒருத்தன் போன் செய்தான்.

பங்காளி : அண்ணை பிஸியாய் இருக்குறியளோ ?

சுறுக்கர் : ஓம் மெண்டிஸ் ஓடை கொஞ்சம் ...... நீ சொல்லாடப்பா .

பங்காளி : உங்களுக்கு உந்த தடத்திலை ஆரையாவது தெரியுமோ ?

சுறுக்கர் : பொறு....... பொறு......... நீ சொல்லுறது உந்த ஆடு மாடு பிடிக்கிற சுருக்கு தடம் தேடா வளையம் தானே ?

பங்காளி : விளையாடாதையுங்கோ அண்ணை.

சுறுக்கர் :சிவசத்தியாமாய் எனக்கு உதுதான் தெரியும்.

பங்காளி : இல்லையண்ணை இந்தியாவிலை இவங்கள் ஆனந்த விகடன் காறர் "தடம் " எண்டு ஒரு சஞ்சிகை விடுறாங்கள்.என்னட்டை ஒரு கதை கிடக்கு. தடத்திலை போடவேணும் அண்ணை. உங்களுக்கு ஆக்களை தெரியும் எண்டு நினைச்சு கேட்டனான்.

சுறுக்கர் : அப்பு நீ ரூட் மாறி வந்திட்டாய்.

பங்காளி : உங்களாலை முடியேலை தெரியாது எண்டால் விடுங்கோ அண்ணை. நான் வேறை ஆரையும் பாக்கிறன். டொடொக்.

நான் ஏங்கி இடி விழுந்து விறைச்சு போனான் யூத்ஸ். சிவ சத்தியமாய் எனக்கு இண்டைக்குத்தான் தெரியும் தடத்துக்கு புறோக்கர் மார் இருக்கினம் எண்டு.போட்ட மெண்டிஸ் இறங்கி போச்சுது இவனாலை.

சுருக்கு சுறுக்கர்

00000000000000000000000000000000

சுறுக்கருக்கு வந்த சோ(வே)தனை

ஹாய் யூத்ஸ்

இப்ப கொஞ்சநாளாய் சுறுக்கர் மிக்ஸர் வேணுமெண்டு உள்துறை அமைச்சிட்டை கேட்டு வீடு ரணகளப்பட்டு கொண்டிருந்துது. இவ்வளவு செய்யிற சுறுக்கருக்கு பிஸ்க்கோத்து "மிக்ஸ்சர்" வாங்கேலாது எண்டு சுறுக்கற்றை ரிக்குவெஸ்ட்டை கணக்கிலையே எடுக்காமல் உள்துறை அமைச்சு ரிஜெக்ட் பண்ணி போட்டுது. இதாலை காண்ட் ஆன சுறுக்கர் இண்டைக்கு ரெண்டு பேரும் ஒரே நேர் கோட்டிலை சந்திச்சதாலை திருப்பவும் காலங்காத்தால ஒரு "குறை நிரப்பு பிரேரணையை" வைச்சார். கொஞ்ச நேரம் யோசிச்சு போட்டு "சரி வா மோலுக்கு போவம் " எண்டு சொல்லி சுறுக்கை உள்துறை அமைச்சு கேட்டுது. சரி நானும் மனுசி பாவம் தானே எண்டு சேந்து ஒண்டாய் போனன். அங்கை சாமானுக்களை எல்லாம் எடுத்துப்போட்டு இதை தான் உனக்கு வாங்கி தரேலும் எண்டு சொல்லி இந்த வாளியை வாங்கி தந்திருக்கு மனுசி. எனக்கெண்டால் அண்டம் கிண்டம் எல்லாம்
பத்திச்சுது. மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற மாதிரி இதை வாங்கினால் சுறுக்கு என்ன செய்யிறது சொல்லுங்கோ பிள்ளையள்.

சுருக்கு சுறுக்கர்

000000000000000000000000

சுறுக்கர் + கறுவல் = சிகரட்+ கிலிசை கேடு.

எடே பெடியள் ..........

இண்டைக்கு வேலை முடிஞ்சு நொந்து நூலாகி பசியோட வீட்டை வந்துகொண்டிருக்கிறன். சுறுக்கருக்கு வீட் டிலை வந்து சாப்பிட்டால் தான் சரிப்பட்டு வரும் கண்டியளோ.இதுக்குள்ளை குளிர் வேறை பின்னி பெடெல் எடுக்குது. அதோடை பனி மூட்டம் வேறை கண்ணை மறைக்குது. இந்த நேரத்திலை ஒரு சிகரட் அடிச்சால் கொஞ்சம் உசாராய் இருக்குமெண்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்த வைச்சு கொண்டு மெட்ரோவுக்கு நடந்து வந்து கொண்டிருந்தன். பின்னாலை பிறேயர் ( சகோதரம் ) எண்டு கூப்பிட்டு கேட்டுது. திரும்பி பாத்தன். அங்கை ஒரு கறுவல் நல்ல சங்கையாய் நிண்டு கொண்டு "சிகரட் இருந்தால் ஒண்டு தா " எண்டு கேட்டான். நான் சொன்னன் "குறை இனைக்காதை பிறேயர். நாளைக்கு எல்லா கடையும் பூட்டு. என்னட்டை ஒண்டு தான் கிடக்கு" .அவனும் சரி எண்டு போட்டு நான் கொஞ்ச தூரம் போக " பேப் .........பீப் மோனே ........" எண்டு தமிழிலை கத்தினான். நான் திரும்பியும் பாக்கேலை. அவ்வளவு கிலிசை கேடாய் போச்சுது. ஆனால் ஒண்டு மட்டும் கிளியராய் விளங்கீச்சுது. ஆரோ எங்கடை ஒரு நாதாரியோடை இவன் வேலை செய்யிறான் எண்டு.

சுருக்கு சுறுக்கர்

0000000000000000000000000000000

ஹாய் கேர்ள்ஸ் அண்ட் போய்ஸ்,

ஊரிலை சனங்கள் காசுக்குத்தான் எல்லாம் செய்யுதுகள். உபசரிப்புகள் இல்லை. இப்ப பழைய சனங்கள் இல்லை எண்டு ஊருக்கு போட்டு வந்து வித்தாரம்/விண்ணாணம் எடுக்கிறவை, அங்கை போனால் முதலிலை உங்கடை சொந்த காசிலை ஸ்டார் ஹொட்டலிலை நில்லுங்கோவன்.அந்தமாதிரி வசதியும் உபசாரமும் குடுக்கிற காசுக்கு வஞ்சகம் செய்ய மாட்டாங்கள்.அங்கை போய் சனங்களிட்டை வடகம் போட்டு தாங்கோ ,மோர் மிளகாய் போட்டு தாங்கோ , கருவாடு போட்டு தாங்கோ ,பலகாரம் சுட்டு தாங்கோ, மிளகாய் தூள் இடிச்சு வறுத்து தாங்கோ, எண்டு அதுகளின்ரை உடம்பு உழைப்பை எடுத்து போட்டு இங்கை வந்து அதுகளுக்கு காசு ரேட் போடுறது எந்த டிசைன் எண்டு எனக்கு துண்டாய் விளங்கேலை கண்டியளோ. உப்பிடியான ஆக்கள் மாற வேணும் காசை வைச்சு சனங்களை மட்டு கட்டுறது அழுகல் பழக்கம் கண்டியளோ.

சுருக்கு சுறுக்கர்

0000000000000000000000000000000


சுறுக்கரின் பேயோட்டல்

ஹாய் யூத்ஸ் எல்லாரும் பேயோட்டுறாங்கள் இது கொஞ்சம் வில்லங்கமான பேயோட்டம் கண்டியளோ.

சுறுக்கர் : ஓம் கிறீம் ............... பச்ச பச்ச...... கிறீம் காளி நீலி சூலீ ........... ஓடிப்போயிடு இங்கை என்ன கோதாரிக்கு வந்தனீ ..........

பேய் : டே சுறுக்கா .......... நான் கொத்தி வந்திருக்கிறன்டா அவ்வளவு கெதியில போகமாட்டன் .

சுறுக்கர் : உனக்கு என்ன வேணும் சொல்லு தாறன் ஆனால் போக வேணும் கண்டியோ.

பேய் : நான் கேக்கிறது உன்னாலை தரேலுமே விசரா .....

சுறுக்கர் : இஞ்சை உன்னை போலை ஆயிரம் பேரை கண்டு போட்டன். கெதியிலை மாற்றருக்கு வா. இல்லாட்டில் என்ரை அடியாலை நாற போறாய்.

பேய் : ஒரு நல்ல கொழுத்த முழு ஆடும், நுரைக்க நுரைக்க ரெண்டு போத்தில் உடன் கள்ளும், செய்யது பீடியும் வேணும் .

சுறுக்கர் : எடி அலுகோசு நடக்கிற கதையை கதை. உதெல்லாம் இப்ப எடுக்கேலாது கண்டியோ. அதோடை செய்யது பிடிக்கு நான் மோடியிட்டைதான் கேக்க வேணும்.

பேய் : போடா பீப் .......... நான் கேட்டது கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு அரக்க மாட்டன் என்று சுறுக்கருக்கு முஞ்சையைப் பொத்தி ஒரு அறை விட்டது.

சுருக்கு சுறுக்கர்

Comments

Popular posts from this blog

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி

இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன . “சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன? ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...