95 வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) - Plumbago rosea
வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர் .
மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை.
இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர்.
குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்கியவனைக் காதலித்தவள். அவள் தன் சீவிமுடித்த தன் கூந்தலில் வேரிமலர் சூடியிருந்தாள்.
ஓரி தன்னைக் காட்டில் கண்டு பாடிய புலவர் வன்பரணருக்கு நெய் போன்ற வேரியை(தேனை) உண்ணத் தந்தானாம் .
January 31, 2013
Comments
Post a Comment