Skip to main content

Posts

Showing posts with the label நடுதல்- குறுநாவல்.

வாடாமல்லிகை - 11

ஒழுங்கை முழுவதும் இருள் மண்டி இருந்ததது. நட்சத்திர ஒளியில் தடம் பிடித்து நடக்கத் தொடங்கினேன். முழு நிலவு வானத்தில் அப்பளமாக விரிந்து இருந்தது. எனது நடை வேகத்தில் மீண்டும் உடம்பு வியர்வையில் குளிக்கத் தொடங்கியது.நட்சத்திர ஒளியிலும் நிலவு வெளிச்சத்திலும் நடப்பதும் என்மனதில் ஒருவகையான புத்துணர்ச்சியை உருவாக்கின. வீட்டு வாசலில் மனைவி நின்றிருந்தா. மாலை வெக்கையை அடக்குவதற்கு மீண்டும் மனைவி வீட்டு முற்றதிற்கு தண்ணீர் தெளிதிருந்தா. தெளித்த தண்ணியின் குளிர்மை வியர்த்த உடலுக்கு இதமாகவே இருந்ததது. என்னைக் கண்ட புழுகத்தின் வெளிப்பாடாக எங்கள் வீட்டு நாய் என் மீது ஏறிப்பாய்ந்தது. என் மனம் என்னிடம் ,  "இப்பொழுது குளித்தால் நன்றாக இருக்குமே ?" என்று கேட்டது. "ஓ ........ குளிக்கலாமே " என்று அதை தட்டிக் கொடுத்தேன். பொதுவாகவே நின்று இருந்து படுத்து என்று எல்லோருமே பல விதமாக குளிக்கின்றார்கள். அதுவும் புலத்தில் எனக்கு பெரும்பாலும் காகக் குளிப்பே அமைந்திருந்தது. மேலிருந்து ஷவரால் கீழே விழும் ஒவ்வரு தண்ணீர் துளியும் யூறோவாய் விழுவதால் அங்கு ஆனந்த குளிப்புக்கு இடமில்லை. ஆனால...

வாடாமல்லிகை - 10

தாரே இல்லாத ஒழுங்கையில் புழுதி தோய நடப்பது புதுவிதமான அனுபவமாகவே இருந்தது. இருளும் வெளிச்சமும் கலவையில் மாறுபட்டு மொக்கவிழ்க்கும் வேளையில் ஒழுங்கையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மதில்களால் எட்டிப்பார்த்த செம்பரத்தை, அலரி, மயிற் கொன்றை பூக்கழும் வெளிச்சம் என்ற சூடு பட்டு நெட்டி முறித்துக்கொன்டிருந்தன. அங்கிருந்து வந்த  பூக்களின்  வாசம்  மூக்கை துளைத்தது. ஒரு சில பூக்களில் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின. இவையாவுமே என்மனதில் ஒருவகை கிளர்ச்சியை  ஏற்படுத்தின. எனது கால்கள் ஒருவித தாள கதியில் புழுதி தோயத் தோய நடந்து கொண்டிருந்தன.  காலை வேளையிலேயே பாடசாலை மாணவர்களது லுமாலாக்கள் டியூசன் சென்டர்களை நோக்கி படை எடுத்துக்கொண்டு இருந்தன. எனது இளமைக்கால நினைவுகளும் அப்பொழுது முட்டி மோதி நின்றன. வாழ்க்கையில் எல்லோருமே இளமைக்காலத்தில் அதை வகைவகையாக அனுபவிப்போம். ஆனால் நாங்கள் பக்குவப்படும் பொழுது எங்கள் முன் இளையவர்கள் அதே குசும்புகளை செய்யும்பொழுது எங்கள் மனம் ஏனோ ஏற்க மறுக்கின்றது. நான் இப்பொழுது முதலாம் கட்டை சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தேன் . எனது உடல் வியர்வையில் த...

வாடாமல்லிகை 07

இந்த உலகில் ஒரு இனத்தின் வாழ்வில் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலாக புகையிரதத்தையும் அதன் தண்டவாளங்களையும் புகையிரத நிலையங்களையும் காணமல் விட்டது என்றால் அது நாங்களாகத் தான் இருந்திருப்போம். நான் வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கியபொழுது எதோ ஒரு இனம் புரியாத பரவசம் என் மனதில் ஓடியது. எல்லோருக்கும் புகையிரதமும் அதன் நிலையங்களும் ஒரு தரிப்பிடமாகவே இருக்கும். ஆனால் எங்களுக்கோ அவைகள் எல்லாம் இரத்தமும், நிணமும், அழுகைகளும் சோகங்களும் என்று மனதில் அழியா வடுக்களாகவே இருந்திருக்கின்றன. நாங்கள் எமது பயணப் பொதிகளை சரி பார்த்துக்கொண்டு நுழைவாயிலை நோக்கி நகர்ந்தோம். யாழ்தேவி மீண்டும் பளையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. அந்த இரவு நேரத்தில் வெக்கை தணிந்து புகையிரத நிலைய சுற்றாடல் குளுமையாக இருந்தது. எங்களுக்காக அத்தான் தனது காரில் வந்து காத்திருந்தார். எனது கண்கள் என்னை அறியாமல் அக்காவை தேடின. நேரம் பத்து மணியை தாண்டி கொண்டிருந்து. அத்தானின் கார் எங்களை ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடியது. எங்களுக்காக இரண்டு அக்காக்களும் மருமகனும் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த ...

வாடாமல்லிகை - குறுநாவல் - 04

தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது. வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது. அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.  அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர். அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள். அரேபிய ஷேக்குளின் ஷேக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது. மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை ...

நெருடியநெருஞ்சி -29

" என்ன யோசினை " ? என்னை இடைவெட்டனாள் மனைவி . " பேசாமல் கொம்மா அன்ரி மாமாவோடை போய் இருப்பமே " ? கலகலவென்று மனைவி சிரித்தாள் . " நீங்கள் வரவர நல்லாத்தான் பகிடி விடுறியள் ". நான் நடையைக் குறைத்துக் கொண்டே மனைவியைப் பார்த்தேன் . "கண்ணன்!!! வடிவாய் யோசியுங்கோ .நாங்கள் கற்பனையில வேணுமெண்டால் இங்கை இருக்கலாம். நடைமுறையிலை சரிப்பட்டு வராது .ஏனெண்டால் நீங்கள் இங்கையிருந்து வெளிக்கிட்டுக் கனகாலம் . உங்களுக்கு இங்கத்தையான் நடைமுறை சரியா விழங்கேல. ஒருபக்கம் இருந்தால் , எழும்பினால் வெள்ளைவான் கடத்தல் , கப்பம் எண்டு சனங்களை ஒரு நிரந்தரபயத்திலை வைச்சிருக்கிறான் . மற்றப்பக்கத்தால எங்கடை இருப்பு உடைஞ்சு சுக்குநூறாப் போச்சுது . யாழ்ப்பாணத்தில நேரை எல்லாம் பாத்தனிங்கள் தானே ?? பிள்ளைப்பெத்தால் கூட ஆமியிட்டைச் சொல்லிப்போட்டுத்தான் பெறவேணும் . இங்கையிருந்து நித்தம்நித்தம் மனசாலையும் , உடம்பாலையும் சாகிறதை விட பிறான்சிலை கோப்பை கழுவினாலும் சுதந்திரமாய் நாங்கள் இருக்கலாந்தானே ?? " அப்ப இங்கை இருக்கிறவை மனுசரில்லையோ ??" எனது மனவெக்கை நெருப்புத்துண்டுகளாக ...

நெருடியநெருஞ்சி -28

நாங்கள் இருவரும் வெளியை வந்து , சிறிது தூரம் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம் . அந்த அதிகாலையிலும் சூழலில் சூடு பரவியிருந்தது . இதமான குளிரும் கடல் காற்றின் உபையத்தால் இருந்து கொண்டுதான் இருந்தது . நாங்கள் சிறிது தூரம் நடந்து ஓர் ஓட்டோவை மறித்துப் போகவேண்டிய இடத்தை எனது மனைவி சிங்களத்தால் சொன்னா . நாங்கள் இருவரும் பயணப் பொதிகளை ஓட்டோவில் திணித்து விட்டு உள்ளே ஏறி இருந்து கொண்டோம். நான் வெளியே புதினம் பார்க்கும் சுவாரசியத்தில் இருந்தேன் . வழியெங்கும் இப்பொழுதும் வெற்றிக்களிப்பின் எச்சசொச்சங்கள் விளம்பரத்தட்டிகளாகத் தொங்கின . நடந்து முடிந்த வெசாக் பண்டிகைக்கு அதன் அலங்காரங்களும் அவைபாட்டிற்கு அணிவகுத்தன . சில வீடுகளில் வெளிச்சக்கூடுகள் காணப்பட்டாலும் , தமிழன்வாழ்வில் ஏற்பட்ட இருளை அவைகளால் போக்க முடியவில்லை . சீறிப்பாய்ந்த ஓட்டோ தனது வேகத்தை மட்டுப்படுத்தியது , எதிரே ஓர் ஊர்வலம் பலத்த பொலிஸ் காவலுடன் வந்து கொண்டிருந்தது . அதன் நடுவே பல தேரர்கள் வந்து கொண்டிருந்தனர் . நிலமையின் கனதியை உணர்ந்த சாரதி ஓட்டோவை ஓர் குறுக்கு ஒழுங்கையினால் திருப்பினான் . இலங்கையில் பௌத்தித்திற்கான உரிம...

நெருடியநெருஞ்சி -27

மங்கிய வெளிச்சத்தில் எனது கண்கள் நீர் நிறைந்து பளபளத்தது. என்நிலை உணர்ந்த என்னுடன் கலந்தவள் எனது கையை எடுத் ஆதரவாக இறுகப் பற்றிக்கொண்டாள். நான் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டேன். நேரம் இரவு 11 30 ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது இரயிலின் காவலர் எல்லா ஜன்னல்களையும் பூட்டிக் கொண்டு வந்தார் , திருடர்கள் பயமாம். எனக்கு வெளியே புதினம் பார்கின்ற வேலையும் போய்விட்டது யாழ்தேவி கொழும்பை நோக்கி விரைந்தது. எமது பெட்டியில் எல்லோருமே நித்திரைக்குப் போய் விட்டார்கள். எனது மனைவியும் எனது தோளில் சாய்ந்து நித்திரைக்குத் தன்னைக் கடன் கொடுத்திருந்தாள். எனக்கும் நித்திரைக்கும் பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது. என் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. சிறுவயதில் அம்மா என்னை ஒரு இறைபக்கதனாக வளர்த்தாலும் , இன்று அந்தக் கடவுளே எனக்கு முதல் எதிரியாக இருந்த வினோதத்தை என்னவென்று சொல்ல ??? விபரம் அறியாவயதில் என்னை என் மண்ணிலிருந்து பிய்த்து எடுத்த அந்தக்கடவுள் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. புழுதி தோயத்தோய ஓடிவிளையாடிய குச்சொழுங்கையும் , கேணியடியும் , சகோதரங்களுக்கும் , நான் நேசித்த...

நெருடியநெருஞ்சி -26

நாங்கள் புகையிரத நிலையத்தில் நுளைந்தபொழுது அதிக சனக்கூட்டம் இருக்கவில்லை . சின்னத்தான் புகையரதமேடை சீட்டு எடுக்கப்போய் விட்டார். நான் புகையரத நிலையச் சூழலை விடுப்புப் பார்க்கத்தொடங்கினேன். இப்பொழுதும் இராணுவ வாகனங்கள் படையனரை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தன ,அவர்கள் கிராமங்களுக்குப் போவற்கு. சீருடைகளின் பிரசன்னத்தால் ஒருவித இறுக்கமான சூழ்நிலை அங்கு பரவியிருந்தது . இப்பொழுது மக்கள் மெதுமெதுவாக புகையிரத நிலையத்திற்குக் கூட்டம் சேர்த்தார்கள் . நான் சின்னத்தானுடன் , நான் முன்பு தலையிடி போக்கின மூலைத் தேத்தண்ணிக் கடைக்குப் போனேன் . நாங்கள் இருவரும் பச்சைத் தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு சிகரட்டின் முனையைச் சிவப்பாக்கினோம். நான் மீண்டும் என் கண்களால் சுற்றாடலைத் துளாவினேன். அந்தப்புகையிரத நிலையம் ஆகப்பெரிதாகவும் இல்லாது , சிறியதாகவும் இல்லாது அடக்கமாக இருந்தது . அங்கே , இப்பொழுதும் அதே வெள்ளைச் சீருடையில் , தலையில் தொப்பியுடன் புகையிரதநிலைய அதிகாரிகளைக் கண்டேன். எங்களை ஆண்ட வெள்ளைகள் தங்கள் நிலையை மாற்றி இரண்டு மூன்று தலைமுறை ஆனாலும் இவர்கள் மட்டும் மாறமாட்டோம் என்று அட...