Skip to main content

Posts

Showing posts from January, 2019

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற

சுவைத்தேன் -இறுதிப்பாகம்

01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார். நண்பர்கள் பகைவர்களாகிறார். பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும் பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன் பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று. நெல்லை விதைப்பதை விடவும் பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான் என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன. இப்படியே பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று. இது பொய்களின் யுகம் என்றான் ஞானி ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து. பொய்களின் அரசன், பொய்களின் நாடு பொய்களின் ஆட்சி பொய்களின் விசுவாசிகள் என்றாயிற்று எல்லாம். அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது. விலகிய வெள்ளாட்டுக்கு விதிய

உயர்தர பரீட்சை முடிவுகள் சொல்கின்ற சங்கதிகள் -ஒரு கதையாடல்

உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதும் தோற்றவர்கள் மனமொடிந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்தக்கதையாடல் தோற்றவர் பக்கமே சார்ந்து செல்கின்றது.ஏனெனில் தோல்விகளே எந்த இடத்தில் நாம் தவறுகளை செய்தோம்? அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற பல இன்னோரன்ன கேள்விகளை எமக்குள் எழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்கு எம்மைப் பக்குவப்படுத்த வல்லது.பரீட்சையில் தோற்றவர்கள் மனமொடிந்து போகாது தங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்மறை கருத்துக்களை கேட்காது தங்களுக்கு எது முடியகூடியதோ அதனைத் தேர்வு செய்வதே வினைகளை அதிகரிக்கும் செயலாகும்.பரப்பளவிலும் குடிப்பரம்பலிலும் கொண்ட ஒரு சிறிய நாட்டில் எல்லோருமே மருத்துவராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டுமானால் அந்த நாடு அது தொடர்பான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது? இரண்டாவதாக இந்த இரு துறைகளை முடிப்பத

நேர்காணல் – கோமகன்

அண்மையில் நான் தாயகம் சென்றிருந்த வேளையில் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணக்காப்பகம் என்னை ஓர் நேர்காணல் செய்திருந்தது. இதுவரையில் எனது வாசகர்கள் என்னைப்பற்றி அறிந்திராத தகவல்களும் இலக்கிய சங்கதிகளும் இந்த நேர்காணலின் பேசுபொருளாக இருந்தன. நேர்காணலை செய்திருந்த ஜீவநதியின் பிரதம ஆசிரியர் பரணிக்கும் மற்றும் ஆவணக்காப்பகத்துக்கும் மிக்க நன்றிகள். வாசகர்கள் பின்வரும் இணைய சுட்டியில் நேர்காணலின் ஒலிவடிவை கேட்கலாம் என்பதனை அறியத்தருகின்றேன். நன்றி . நேசமுடன் கோமகன் http://aavanaham.org/islandora/object/noolaham%3A13824

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் – பத்தி – பாகம் 14

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் , சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது . சின்னன் பொன்னனுகளை ஞாபகப்படுத்திறது நல்ல விசையம் கண்டியளோ . ஆனால் சுறுக்கருக்கு எப்பவும் வில்லங்கமாய் மண்டையிலை ஓடுறது பரவணி புத்தியாய் போச்சுது. நாங்கள் உண்மையிலை சின்னனுகளை நல்லவிதமாய் பாத்தாமோ எண்டு நெஞ்சிலை கைவைச்சு கேட்டால் மனுசனுக்குப் பிறசர் தான் ஏறும்.ஒருகாலத்திலை சண்டை பிடிக்கிறம் எண்டு குஞ்சு குருமனுகளை கொண்டு போய் முன்னாலை விட்டுப்போட்டு பின்னாலை நாங்கள் கவர் எடுத்தம் . அங்காலை மகிந்தனும் சின்னன் பொன்னனுகளைத்தான் எயிம் பண்ணி அடிச்சான் ஏனெண்டால் அதுகள் ரெறறிஸ்ட்டாம். இதுகளுக்கை தப்பி பிழைச்சதுகளை சந்தணம் மெத்தினதுகள் போய் சின்ன வயசிலையே படுக்க வாங்கோ பிள்ளையள் எண்டு கூப்பிட்டீச்சினம். உந்த பழிபாவங்கள் எல்லாம் எங்கடை சனத்தை பிடிச்சு ஆட்டுது கண்டியளோ . ஆசியாவிலை எங்கடை நாடுதான் மழலைகள் பாலியலிலை கொடிகட்டி பறக்குது .

மிருகமொழி – மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்

முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘ காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார். இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன. 01 ஏறுதழுவல்-கோமகன் 02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி. 03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ். கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’

வாசிப்பு அனுபவம் “கேரளா டயரீஸ்” ஐ முன்வைத்து

மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்த

சுறுக்கரின் இலக்கிய ரசம்- பாகம் 01

அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி பட்டாவது காயை மடக்கி போடவேணும் எண்டு கனக்க றிக்கியளை இந்தகாலத்து பெடியள் வைச்சிருக்கிறாங்கள் கண்டியளோ. பெடிச்சிக்கு பெடிச்சியின்ர பேரை இல்லாட்டில் படத்தை பச்சை குத்தி காட்டிறது. இடையில ஏதாவது ரெண்டு பேருக்கும் ராட்டல் எண்டால் கையிலை பிளேட்டாலை வெட்டிறது ( இதை ரெண்டு பேரும் செய்வினம்). பேந்து தாய் தேப்பனுக்கு மாற்றர் லீக் ஆச்சுதெண்டால் பெடிச்சியை கிளப்பி கொண்டு ஓடுறது எண்டு இவையள் செய்யிற அலப்பரையள் சொல்லி வேலையில்லை கண்டியளோ. உது ஊரிலையும் அப்பிடித்தான் இங்கையும் அப்பிடித்தான். இங்கை கொஞ்சம் கொஞ்சம் டெவலப் எண்டு தான் சொல்ல வேணும் . இங்கை பெடிச்சிக்கு பிள்ளையையும் குடுத்துப்போட்டு பெடிச்சியை கிளப்பி கொண்டு வேறை நாடுகளுக்கு போய் அங்கை இருந்து கொண்டு தாய் தேப்பனோடை கேம் ஐ கேக்கிறது. இது இந்தக்காலத்தியான் பெடி பெட்டையளின்ரை சேட்டையள்.

‘தமிழ் அடையாளத்தைப் பேணும் அதேவேளை மொழி, இன, மத எல்லைகளைக் கடந்து இலக்கியத்தை நேசிக்க, மதிக்க, கொண்டாட முன்னிற்பவன் நான்.’ – சோ.பத்மநாதன்

இலங்கையின் வடபகுதி யாழ்நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட சோ.பா என்றழைக்கப்படும் சோ.பத்மநாதன் பன்முக ஆளுமையுடைய ஓர் முதுபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றார். ஓர் மொழிபெயர்பாளராகவும், கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் சோ.பா அவர்கள் ஈழத்து இலக்கிய வெளிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இதில் வேற்று மொழிக்கவிதைகளை தமிழுக்குக் கொண்டு வந்தது முக்கியமானது. பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபராகப் பணியாற்றிய இவரது கவிதைகள் யாவுமே தத்துவச்சிக்கல்களிலோ அல்லது கோட்பாட்டு சித்தந்தங்களிலோ தன்னைக் கட்டுப்படுத்தாது மிகவும் எளிமையாக யாழ்ப்பாணத்து வட்டாரவழக்கில் அனைத்து தரப்பு வாசகர்களையும் சென்றடைந்தது கவனிக்கப்படவேண்டியதாகும். உதாரணமாக அண்மையில் ஜெர்மன், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அப்பிளும் வெள்ளரியும் என்ற கவிதை இவ்வாறு வருகின்றது, அப்பிளும் வெள்ளரியும் திருநெல்வேலிச் சந்தை காலை ஏழு மணி நடைபாதையில் இரண்டு குவியல்கள் கள்ளிப் பெட்டியின் மேல் அழகாக அடுக்கப்பட்டிருந்தன அப்பிள் பக்கத்தே – நிலத்தில் – சாக்கின் மேல

ஓர் படைப்பாளியின் படைப்பு சுதந்திரம் பற்றி அருள்இனியன் ஊடாக……..

எனது எழுத்துக்களிலும் எனது படைப்புகள் சார்ந்த கருத்துக்களிலும் நான் என்றுமே சமரசம் வைத்துக்கொள்வதில்லை. அதை ஒரு படைப்பாளியினுடைய ஆக்கு சுதந்திரத்துக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையாகவே எண்ணி வருகின்றேன் . எனது எழுத்துக்களுக்கு அப்படி ஓர் நிலை வருமானால் எனது பேனையை முறித்து விட்டு எழுத்துப்பரப்பில் இருந்து நான் ஒதுங்கி விடுவதி எனது இறுதித்தேர்வாக இருக்கும். நிற்க உடகாவியலாளர் அருள் இனியனதும் அவரது கேரளா டயறீஸ் தொடர்பாகப் பொதுவெளியில் எழுந்த சர்ச்சைகளுக்கு நான் நேற்று முகநூலில் வைத்திருந்த நிலைத்தகவல்கள் மற்றும் கருத்துக்களில் எதுவித மாற்றங்களும் இல்லை. இந்த எனது நிலைத்தகவலிலும் கருத்துக்களிலும் அருள் இனியன் என்ற படைப்பாளி எனது கருத்துக்களுக்கான ஓர் குறியீடு அவ்வளவே. ஓர் படைப்பாளியினது கருத்துச்சுதந்திரத்தை மறுதலிப்பதும் அவனது படைப்பை தடை செய்தலுக்குமான பாசிஸப் போக்குகளுக்கு எதிரான எனது எதிர்புணர்வையே நான் பதிவிட்டிருந்தேன் . அத்துடன் படைப்பாளிகளது சுதந்திரங்கள், அவை தொடர்பான வரையறைகள், ஓர் படைப்பாளியினது இருப்புகள், மற்றும் தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற போலித்தனங்கள் தொட

“நான் எதையும் பெரிதாக போதிக்க வந்தவனல்ல, இந்தச் சமுதாயத்துக்கு மருந்து கொடுக்கும் வைத்தியனுமல்ல”. சோலைக்கிளி

ஈழத்து கவிகளில் முக்கியமானவர் சோலைக்கிளி. தாயகத்தின் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் சோலைக்கிளி, தமிழகத்துப் பிரபலங்களை எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர். உதுமா லெவ்வை முகம்மது அதீக் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சோலைக்கிளியாகவே தமிழ் இலக்கியப்பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இவரது கவிதைகள் எல்லாமே சித்தாந்தங்கள் கோட்பாடுகளில் சிக்கி விடாது எளிய சொல்லாடல்களைக் கொண்டிருப்பது இவரது தனித்துவம் ஆகும். இதுவரையில் பத்து கவிதைத்தொகுதிகழும் ஓர் பத்தியும் இவரால் தமிழ் இலக்கியப்பரப்புக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் “பாம்பு நரம்பு மனிதன்”(இலங்கை அரசின் சாகித்திய விருது 1996) , “காகம் கலைத்த கனவு” (சுதந்திர இலக்கிய விழா விருது 1991, “பனியால் மொழி எழுதி” (இலங்கை அரசின் சாகித்திய விருது சிறந்த கவிதைத் தொகுதி, 1997), “எட்டாவது நகரம்” (இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருது 1988) “என்ன செப்பங்கா நீ..” (ஜப்பான் அரசின் கலாசார விருது 2005) ஆகியவை விருதுகளைத் தட்டிச்சென்றவையாகும். ஏனைய கவிதை தொகுதிகளாக ,’நானும் ஒரு பூனை’,’ஆணிவ