Skip to main content

Posts

Showing posts from November, 2017

சுவைத்(தேன்) – கவிதைகள் – பாகம் 01.

01 புத்தி தனக்கு புத்தி நுறு என்றது மீன் – பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை – மல்லாத்தி ஏற்றினேன் கல்லை . எனக்குப் புத்தி ஒன்றே என்றது தவளை எட்டிப் பிடித்தேன்- பிடிக்குத் தப்பி தத்தித் தப்பிப் போகுது தவளைக் கவிதை – “நூறு புத்தரே ! கோர்த்தாரே ! ஆயிரம் புத்தரே ! மல்லாத்தாரே! கல்லேத்தாரே ! ஒரு புத்தரே ! தத்தாரே! பித்தாரே ! நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ?? 000000000000000000000000000000000 02. E=mc2 ஒற்றைக் குருட்டு வெண்விழிப் பரிதி திசையெங்கும் கதிர்க்கோல்கள்

கறுப்பி .

அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டார் . அமைதியாக இருந்த அவர் வாழ்வில் இப்பொழுதுதான் புயல் ஒன்று வீசி ஓய்ந்திருந்தது. அந்தக் கிராமத்தின் இறுதியில் இருந்த கந்தப்புவின் கொட்டிலில் இருந்து தூரத்தே தெரிந்த கைதடியில் அங்காங்கே ஒளிப் பொட்டுகள் மின்னி முழித்தது அந்த அமாவாசை இருட்டில் நன்றாகவே கந்தப்புவுக்கு தெரிந்தது . கடந்த மூன்று வருடங்ளுக்கு முன்பு நடந்த செல்லடியில

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்.

கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் . இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் . அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை கோயில்லை குளறி சின்னத்தம்பியர் எண்டு ஒரு நாட்டாண்மை இருந்தவர் . அவற்றை வேலை எங்களை கொண்றோல் பண்ணுறது . பொம்பிளையளுக்கு முன்னாலை தான் ஒரு பயில்வான் எண்டு காட்டிறது . அவரை ஏன் குளறி சின்னத்தம்பி எண்டு சொல்லிறனாங்கள் எண்டால் அந்தாள் ஒருக்காலும் மெல்லிசாய் கதைக்கிற மனுசன் இல்லை . பக்கத்திலை நிண்டால் காது கன்னம் எல்லாம் வெடிக்கும் . அவருக்கு தண்ணி வென்னியோ சு