Skip to main content

மனமே மலர்க- பாகம் 07.




திருமணத்துக்கு முன் யோசியுங்கள்

அது மனநோயாளிகளின் மருத்துவமணை . தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார்.

மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் .

ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.

செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றான்.

இவனுக்கு என்ன?

ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் .

நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா?

முக்கியமாகத் திருமண வாழ்க்கை .

இதற்கு மிக மிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு . அதாவது திருமணம் செய்து கொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?

விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது, கட்டடங்கள் எல்லாமே வீடாகி விடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது .

குடிவந்தால் அது வீடு... புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு. மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்.

அதுபோல்தான் திருமணம் வாழ்க்கை, பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக் கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்து விடுவதில்லை. கணவனும் மனைவியும்வேறு வேறு பாதைகளில், வேறுவேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது . ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று நினைத்துக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்தில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எதிர்பார்த்த சந்தோஷம் அங்கு இல்லாதபோது ஏமாந்து போகிறார்கள் . திருமணம் என்பதும் விளக்கு மாதிரிதான். கணவனும் மனைவியும் சேர்ந்து அதை ஏற்றினால்தான் சந்தோஷம் என்ற வெளிச்சம் வரும்.

என்னைத்தேடி சில சமயம் காதல் வயப்பட்டவர்களும் வருவார்கள் . சென்ற மாதம் என்னுடைய ஆசிரமத்துக்கு ஓர் இளைஞன் வந்தான் . அவன் சொன்னான். சுவாமி நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் .

ஏன்?- சுருக்கமாகவே கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன்.

படிப்பும் இருக்கிறது . அவளின் அப்பாவும் காரில் போகிற அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம் கிடைக்கும் .

அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.

அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?

என் காதலர் நாகாரீகமானவர்.. பண்புடையவர். நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது. கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்து விடுவார். ஆகமொத்தத்தில் அவரால் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் .

மேலோட்டமாக இந்த ஜோடியை யார் பார்த்தாலும் "Made for each other" பட்டம் கொடுத்து விடுவார்கள் . ஆனால், எனக்கு மட்டும் இவர்கள் இதே மனநிலையில் திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது . அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துக்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு . என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும்.. இல்லை. நீதான் என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?

ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களே.. உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள் அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக் கொள்ளுங்கள் . ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?

00000000000000000000000000000000000000

நிம்மதியும் மகிழ்ச்சியும்

காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார்.அவரது புகழறிந்த மன்னன் காட்டுக்குச் சென்று அங்கு ஒரு குடிசையில் காலணி கூட இல்லாத முனிவரைப் பார்த்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இரு காலணிகளைக் கொடுத்தார். முனிவர் சிரித்தார்.

முனிவர்: அரசே,இக்காலணி அழகாக உள்ளது.இதைப் பார்க்கும் யாருக்கும் திருடத் தோன்றும் எனவே இதைப் பாதுகாக்க ஒரு காவலாளி வேண்டுமே.

அரசன்: நான் ஒரு காவலாளியை நியமிக்கிறேன்.

முனிவர்: இந்த அழகான காலணியை அணிந்து கொண்டு நடந்து சென்றால் எல்லோரும் சிரிப்பார்களே! எனவே நான் செல்ல ஒரு குதிரை வேண்டும்.

அரசன்: ஒரு குதிரையையும்,அதைப் பாதுகாக்க ஒருவனையும் நியமிக்கிறேன்.

முனிவர்: இந்தக் குடிசையில் குதிரையையும் பாதுகாவலனையும் தங்க வைக்க முடியாதே!

அரசன்: ஒரு அழகிய பங்களா கட்டித் தருகிறேன்.

முனிவர்: பங்களாவில் வாழ்ந்தால் எனக்குப் பணிவிடை செய்ய ஒரு பெண் வேண்டுமே!

அரசன்: ஒரு பெண்ணையும் நியமிக்கிறேன்.

முனிவர்: பின்னர் எனக்குக் குழந்தைகள் பிறக்குமே!

அரசன்: உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேலையாட்களை நியமிக்கிறேன்.

முனிவர்: குழந்தைகள் பிறந்தால் அவர்கள் மீது அன்பு வைப்பேன்.அவர்களில் யாராவது இறந்தால் யார் அழுவார்கள்?

அரசன்: வேறு யார் அழுவார்கள்?நீங்கள் தான் அழ வேண்டும்.

முனிவர்: அரசே,பார்த்தீர்களா?உங்களிடம் காலணி வாங்கினால் இறுதியில் அழத்தான் வேண்டும் என்பதை நீங்களே இப்போது ஒத்துக் கொண்டீர்கள்.இப்போது இந்தக் காட்டில் நான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.குழந்தைகளுக்காக அழவோ.பொறுப்புகளைச் சுமக்கவோ நான் தயாராக இல்லை.

அரசனும் புரிந்து கொண்டு அரண்மனை திரும்பினான்.

வாழ்வில் நமக்குப் பல ஆசைகள்.அடுத்தவர் போல வசதியாக இல்லையே என்ற ஏக்கம்.அப்பொருள் நம்மிடம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நினைப்பு.ஆனால் எந்தப் பொருளும் கடைசியில் துன்பத்தையே தரும்.நாம் தேடும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்காது. 

000000000000000000000000000000000

பென்சிலும் ரப்பரும்

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.

ரப்பர்: எதற்காக மன்னிப்பு?

பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?

ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். ஆனால் எனக்காக நீ வருத்தப்படுவது எனக்குக் கவலை தருகிறது.

இங்கு ரப்பர் என்பது பெற்றோர். பென்சில் என்பது அவர்களது பிள்ளைகள். பிள்ளைகள் தவறு செய்யும் போதெல்லாம் அதை அவர்கள் சரி செய்கிறார்கள். நாளடைவில் அவர்கள் தேய்ந்து போகிறார்கள். ஆனால் பிள்ளைகளை சரி செய்வதை மகிழ்வுடனே செய்கிறார்கள். தங்களுக்குப் பதிலாக தன் பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்காகப் பிள்ளைகள் வருத்தப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

00000000000000000000000000000000

நகைச்சுவை உணர்வு

சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும். சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ, பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும். தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல. மரணம் தான் தீவிரமானது.

வாழ்க்கை என்பது அன்பு , சிரிப்பு, ஆடல், பாடல் தான். கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது. அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது. நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது. துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள். அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.

தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி. சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும். பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள். மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும். அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.

00000000000000000000000000000000000000

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன் என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம். ஆனால் இந்த பாஸிட்டிவ் திங்கிங் அதிக நாளைக்கு உதவாது.

தீய எண்ணஙகள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள் என்று ஒரு சிலா யோசனை சொல்வாகள். பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான் ! மனதில் சபலம் வரும்போது. அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும். ஆனால். அதே தீ எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா...

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எஙகே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை ! ஆனால் துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும். ஆனால் வத்தி எந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுஙகத் துவஙகிவிடும்!

பாஸிட்டிவ் திங்காகும் இது மாதி தான் ! சார்... பாஸிட்டிவ் திங்குக்கு மாற்று இருக்கிறதா... இருக்கிறது அதற்குப் பெயாதான் ரவாநவேஉ வாமேபே

நீஙகள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீகள் என்று வைத்துக் கொள்ளுஙகள். ஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே... என்று வெறுப்படைந்து இல்லை! நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன் என்று பாஸிட்டிவ் திங்கிங் என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீஙகள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும். அதற்குப் பதிலாக. உஙகளின் சிந்தனையை நீஙகளே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுஙகள் !

இது கெட்ட சிந்தனை . இது நல்ல சிந்தனை என்பது மாதி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல். உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுஙகள் !

துக்கமான சிந்தனையோ சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீஙகளே விலகி நின்று பாக்கும் போது/ உஙகளுக்குள்ளே புந்து கொள்ளுதல் நடக்கும் !

இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம் மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான் ! மகிழ்ச்சி எப்படி ஓ அனுபவமோ அதே போல் துயரமும் ஓ அனுபவமே ! ஆனால் மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதாகளுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும் !

அவா நடுத்தரப் பிரிவைச் சோந்தவா. அவருக்கு ஆறு பெண்கள் ! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவாகள். ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது என்று கவலைப்பட்டுக் கவலைப்ட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது. அவரை மருத்துவமனையில் சோக்கிறாகள். அந்த நேரம் பாத்து. அவா வாஙகி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது ! இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால். அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ...... என்று பயந்த மனைவி. டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள் !

டாக்டர் மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறா.

உஙகளுக்கு லாட்டாயில் ஒரு லட்சம் பாசு விழுந்தால் என்ன செய்வீகள்.....

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....

சார் இரண்டு லட்சம் விழுந்தால்..

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்

சார்... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுஙகள் !

எனக்கெல்லாம் எஙகே டாக்டா பத்து லட்சம் விழும் அப்படி ஒரு வேளை விழுந்தால் சத்தியமாக உஙகளுககு இரண்டு லட்சம் தந்து விடுவேன்.

எதிர்பாராத இந்த இன்ப அதிச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டா!

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ அதே மாதி துயரமும் ஒரு சுவை இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் ! நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார். அப்போது கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறா என்று எனக்கு ஒரே குழப்பம்.... ஆனால் மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணாந்து கொண்டேன் !சிறுபிள்ளையாக இருக்கும் போது இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ அதே மாதிதான் இந்த விஷயமும். மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணாச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணாச்சிகள் என்று எண்ணி வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பபதில்லை!

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனது தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும். உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக மென்மையாக வியும்!

0000000000000000000000000000000000000000

அடக்கத்தின் மேன்மை

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர். அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும். அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன. மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான். அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.

அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான். மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும். சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது. பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும். வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும். அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.

ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும். அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது. அது மட்டுமன்று. அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும். பொறாமை முதலில் மனதில் குடியேறும். அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும். அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும். கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான். அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.

மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும். நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும். நண்பர்கள் நெருங்க மாட்டார்கள். காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர். மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.

மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும். அவன் எப்போதும் அமைதியாக இருப்பான். எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான். அவனிடம் சினம் இராது. நேர்மை இருக்கும். அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான். சிறிதளவே பேசுவான். அதுவும் சத்திய வாக்காக இருக்கும். அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான். பொய் உரைக்க மாட்டான். பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.

அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான். இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று. கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர். தேவரும் வந்து பணிவர்.

பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும்,பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும்.

அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும். ஞானவானிடம் பொறுமை, சத்தியம், கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும். மிகு காமம், சினம், தற்புகழ்ச்சி, பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும். அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான். அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான். அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும். 

00000000000000000000000000000000000000

அன்பு எது?

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம், சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது. உலகமே வெறுப்பிலும், அழிவிலும், வன்முறையிலும் போட்டியிலும், பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. செயலாலோ, மனதாலோ ஒருவர் மற்றவரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது. அன்பு செய்யுங்கள். இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.

நேற்றுயாராவது உங்களிடம் இனிமையாக நடந்து கொண்டிருப்பார்கள். அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம். இது அன்பே அன்று. இது வெறுப்பின் மறுபக்கம். இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம். ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள். அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும். அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது. உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. நேற்றோ, நாளையோ கிடையாது. அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை. காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன. ஒரு குயில் அழைக்கிறது. காரணம் இல்லாமல் தான். இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது. அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம். வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். அன்பு அன்பையே உருவாக்கும்.

March 07, 2013

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம