Skip to main content

நெருடிய நெருஞ்சி 17.





எனக்குச் சாப்பாடைப் பாத்ததும் நாக்கில் ஊறியது. நான் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . எல்லோரும் ஏதேதோ மன ஓட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் . தங்கைச்சி பக்கத்தில் இருந்து கொண்டு ,

" நீ இப்பவும் நல்லா உறைப்புத் தின்னுவியே?"

என்று வெகுளியாகக் கேட்டாள் நான் சிரித்தேன் . எல்லோரும் சாப்பிட்டு விட்டு முற்றத்தில் இருந்தோம் . நான் குருமண்ணில் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தேன் . அண்ணைக்கு அண்ணி வெத்திலை பாக்குக் கொண்டு வந்து தந்தா .அண்ணி எனக்கும் பாக்கு வெத்திலையை நீட்டினா , நான் சிரிப்புடன் வேண்டாம் என்று சொன்னேன் . நான் பொகற்ருக்குள் இருந்த சிகரட்டை எடுத்துப் பத்தினேன் . தங்கைச்சி என்னையே பாத்தாள் . நான் என்ன என்று அவளைக் கண்ணால் கேட்டேன் . அவள் அண்ணையைக் கண் காட்டினாள் . எனக்குச் சிரிப்பாக இருந்தது , இவள் இப்பிடி அண்ணைக்குப் பயப்பிடுகின்றாளே என்று . அண்ணை போட்ட வெத்திலையால் அவரின் வாய் சிவந்திருந்தது . அவரின் வாயைப் பார்த்து எனக்கு ஏனோ அருவருப்பாக இருந்தது . அண்ணை என்னைப் பாத்து ,

" எனக்கும் ஒண்டு தாடாப்பா " .

" இந்தா எடு . லைற்ரர் வைச்சிருக்கிறியோ" ?

" என்னட்டை நெருகுப்பெட்டி கிடக்கு ".

" அப்ப எப்ப போறாய் " ?

" நான் நாளைக்கு பரித்தித்துறைக்குப் போறன் . ஆனா பேந்து இங்கை வருவன்".

" ஏன் கேட்டனி " ?

" இல்லையடாப்பா நீங்கள் ரெண்டுபேரும் ஒருக்கா ஏழாலைக்கு எங்கடை வீட்டை வரவேணும் ".

" நான் இங்கை ரெண்டு கிழமை நிப்பன் . அப்ப வாறன் . பேந்து நான் கொழும்புக்குப் போடுவன் ".

எனக்குத் தனிமை தேவைப்பட்டது . எனது மனதில் பாமினியின் நினைவு நிழலாடவே கேணியடிக்கு போக வெளிக்கிட்டேன் . வெளிக்கிடும்பொழுதே கொஞ்சக்காசு எடுத்து கால்ச்சட்டைப் பொக்கற்ருக்குள் வைத்துக் கொண்டேன். இந்தமுறை அண்ணையின் பிள்ளைகளும் , மனைவியின் தங்கை பிள்ளைகழும் , என்னுடன் கூட்டுச் சேர்ந்துக் கொண்டார்கள் . நேரம் 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . வெய்யிலின் கடுமை குறைந்து , இதமான காத்து வீசியது . பிள்ளைகளின் கூச்சலால் ஒழுங்கை இரண்டுபட்டது . நான் பலவிதமான யோசனைகழுடன் அவர்களுடன் கேணியடியை நோக்கி நடந்தேன் . மனைவியின் தங்கையின் பிள்ளைகழுக்கு என்னைப்போல் , மைனா , காகம் , புலுனி , பூரான் , கட்டெறும்பு , சித்தெறும்பு , சரக்கட்டை , நெருப்பெறும்பு , முசுறு , என்று எல்லாமே புதுமையாக இருந்தது . அவர்கள் என்னைக் கேள்வியால் துளைத்தெடுத்தார்கள் . நானும் விளக்கிக்கொண்டே வந்தேன் . எனது மண்டையோ வேறு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது . இப்ப எப்படியும் பாமினியைச் சந்திக்கவேணும் , கேணியடிக்கு கிட்டத்தான் பாமினியின் வீடு இருந்தது . பிள்ளைகள் முசுப்பாத்தியுடன் முன்னேறிக்கொண்டு இருந்தார்கள் . எனது கால்கள் பாமினியின் வீட்டு வேலியடியில் தயங்கி நின்றன . நான் ஆவலுடன் வேலியால் எட்டிப்பார்த்தேன் . பிள்ளைகளின் சத்தத்தால் , அவள் வீட்டு நாயும் வேலிப்பொட்டுக்கால் தனது வீரத்தை காட்டிக் கொண்டிருந்தது . நான் பாமினி என்று அவளைக் கூப்பிட்டேன் . அவள் வீட்டுக்குப் பின்னாலிருந்து இப்பிலிப்பில் குழையுடன் வந்தாள் .

" ஆர் கண்ணனே"?

" உள்ழுக்கை வாங்கோ "

" இல்லை நான் கேணியடிக்குப்போறன் . உனக்கு நேரமிருந்தா அங்கை வாவென் . சும்மா கதைப்பம் ".

" நான் ஒரு ஐஞ்சு நிமிசத்தில அங்கை வாறன் ".

" சரி நான் போறன் நீவா ".

என்றபடியே கேணியடியை நோக்கி நடந்தேன். கோயிலில் பின்னேரப் பூசைக்கு ஆயத்தங்கள் நடைபெற்ரதைக் காட்ட , மடப்பள்ளியிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது . மாடுகள் , ஆடுகள் , எல்லாம் தரவையில் மேச்சல் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தன . பூமிக்கும் கதிரவனுக்கும் விடை கொடுத்த மோதலில் ஏற்பட்ட இரத்தச்சேதாரமாக மேகங்கள் சிவந்திருந்தன . அதனூடே கூழைக்கடாக்கள் கருமமே கண்ணாக யூ வடிவில் செம்மணி நோக்கி வல்லசை போய்க்கொண்டிருந்த காட்சி மனதை அள்ளியது . பிள்ளைகள் கள்ளன் பொலிஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள் . என்னால் எவ்வளவு யூரோக்கள் கொடுத்தும் பிரான்ஸ்சில்க் கிடைக்காத மன அமைதியையும் , நிறைவையும் , கேணியடியில் சிகரட்புகையினூடே பெற்ருக்கொண்டேன் . கோயில் பூசைக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள் . பலருக்கு என்னைத் தெரியததால் , எனக்கு வசதியாகப் போய்விட்டது எனது மோனத்தவத்தைத் தொடர . பாமினி என்னை நோக்கி வருவது தெரிந்தது . அவளின் வடிவும் , கம்பீரமும் காலதேவனின் கோரப்பிடியால் நன்றாகவே அவளைப் புரட்டிப் போட்டிருந்து. அவளின் தலையில் நரைமுடிகள் எட்டிப்பாத்தன . என்னைக் கண்ட சந்தோசம் அவளின் முகத்தில் நன்றாகவே தவழ்ந்தது .

" வா பாமினி இப்பிடி இங்காலை வந்து இரு". " கனக்க நேரம் போட்டுதோ கண்ணன் " ?

"இல்லை , உன்னோடையும் கதைச்சு கனநாள் தானே".

"இரவு சாப்பாட்டையும் முடிச்சுப்போட்டன் , பிள்ளையள் இங்கை வந்து பசி பொறுக்குதுகள் இல்லை ".

நான் கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன் .

" உங்கடை சிரிப்பு என்னம் மாறேல கண்ணன் , உங்களைப்ற்ரிச் சொல்லுங்கோ ".

" என்ன பாமனி நீ வன்னில நல்லா கஸ்ரப்பட்டதா சொன்னாய் . அதேயளவு நானும் அகதிவாழ்க்கையை அனுபவிச்சன் . கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் உள்ளுடன் ஒண்டு தான் . ஆனா , நான் அம்மாக்கு கடைசிவரை என்னைப்பற்ரி சொல்லேல . அம்மா இதுகளையெல்லாம் அறியாமல் போட்டா அது எனக்குச் சந்தோசம் தான் ".

ஓம் கண்ணன் அம்மா உங்களைப்பற்ரி கதைக்கேக்க ஆளைப் பாக்கவேணும் , அப்பிடி ஒரு சந்தோசம் அவாக்கு " . நான் சிரித்துக் கொண்டேன் . சரி பாமினி நீ உன்னைப்பற்ரி சொல்லன் . "

நாங்கள் எல்லாம் முதல் இடப்பெயர்வில தென்மராட்சிக்குப் போனம் . அப்ப எனக்கு இருபத்தைஞ்சு வயசு இருக்கும் . அப்பாவை தெரியும் தானே தவறணைக்கு போகாட்டிக்கு அவருக்குச் சரிவராது . பேந்து வன்னிக்கு , போனம் பேந்து , உங்கடை கமத்துக்கு கிட்ட கிளிநொச்சீல இருந்தம் . அப்ப எங்கடை சீவியம் ராச வாழ்கை கண்ணன் . இங்கை இருக்கிறதை விட சந்தோசமாய் இருந்தம் . அப்பதான் குமரனோட வேலை செய்தவரை சந்திச்சன் . அவர் எங்கடை நிலமையப் பாத்து கலியாணம் கட்ட கேட்டார் . நானும் ஓம் சொல்லிப் போட்டன் , அப்ப தலைவற்ர தலைமேல எங்கடை கலியாணம் நடந்துது . அப்பதான் எனக்குத் தெரியும் அவற்ர பவர் . நாங்கள் நல்ல சந்தோசமாய் இருந்தம் . பிள்ளையளும் பிறந்து வளரத் தொடங்கீட்டுதுகள் . பேந்து சண்டை தொடங்க எங்களுக்கும் பிடிச்சுது சனி . அதுகளை சொன்னால் நெஞ்சு வெடிக்கும் கண்ணன் . அதுவும் உச்சக் கட்டமாய் , புதுகுடியிருப்பு இடப்பெயர்வு இருக்கே அதை என்ர வாழ்க்கைல மறக்கேலாது .அவளின் கண்கள் சிவந்து கண்கள் கலங்கி வெளிவரத் துடித்தது . எனக்கு வலியாக இருந்தது .

" ஏன் பாமினி உன்னை கஸ்ரப் படுத்திறேனோ "?

"இல்லை கண்ணன் , என்ர மனப்பாரம் இறங்கவேணும் .

"சரி சொல்லு பாமினி நான் சிகரட் பத்தலாமோ ? உனக்குப் பிரச்சனை இல்லையோ "?

" இல்லை கண்ணன் . ஏன் இந்தபழக்கம் "?

நான் வெறுமையாகச் சிரித்தேன் .

" நான் இந்தியாவில படிக்கேக்கை நண்பர்களோட விளையாட்டா தொடங்கனன் . ஆனா ,பேந்து பிரானசுக்குப் போய் தனிய மனம் வலிக்கேக்கை இது ஆதரவாப்போச்சு . ஆனா , இதை சரி எண்டு சொல்ல மாட்டன் ".

நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன் . பாமினி தொடர்ந்தாள் ,

" கடசீல பிரச்சனை முத்தி கிளிநொச்சீலையும் இருக்கேலாமல் போட்டுது . ரெண்டு பக்கமும் சம்பல் அடி விழுது . என்ர அவரும் பொயின்ருக்கு போட்டார். சனம் எல்லாம் வெளிக்கிட்டுட்டுதுகள் . நானும் என்ர பிள்ளையளும் அம்மாவோட ஒரு இரவு வெளிக்கிட்டம் .

அந்தநேரம் ஒரு இடத்திலையும் கறன்ற் இல்லை . எல்லாரும் இடம்மாறமல் இருக்க , ஒவ்வொராளையும் கூப்பிட்டு கூப்பிட்டு போனம் . முன்னால பெடியள் றோட்டை கிளியர் பண்ணிக்கொண்டு போவினம் . அதேநேரம் பின்னாலையும் பாதுக்காப்புக்கு வருவினம் . பேந்து நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே கண்ணன் . எத்தினை நாள் பங்கருக்குள்ள சாப்பாடில்லாமல் கிடந்தம் . இதுக்குள்ளை மழையால பங்கருக்குள்ளை பாம்பு , பூரான் எண்டு வந்துட்டுது . கன சனம் இதுகளின்ர கடியாலையே பங்கருக்குள்ளை செத்துப்போச்சு . அதுவும் கடைசீல , பாதுகாப்பு பிரதேசத்துக்குள்ளை நாங்கள் வெள்ளை கொடியோடை போகப்பட்ட பாடு நாய்பாடாபாடு பட்டுப்போனம் . எனக்கு இப்பவும் கடக்கரையைக் கண்டா அங்கத்தையான் ஞாபகம் தான் வரும் ".

என்று பாமினி அழத்தொடங்கி விட்டாள் . எனக்கு மனது கனத்தது . கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் ? தமிழைப் பேசியதிற்கு இவ்வளவு கொடுமையா ? எனது மனதில் ரத்தம் வடிந்தது . நான் பாமினியை சிறிது அழவிட்டேன் .

" பாமினி அழுகையை நிப்பாட்டு . நாங்கள் வாழப் பறந்தனாங்கள் இதெல்லாம் ஒரு தோல்வி இல்லை , கண்ணைதுடை ".

" ஆனா கண்ணன் அவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டே தெரியாமல் கிடக்கு . கடைசீல சொன்னார் , என்னை பிள்ளையளை புதுக்குடியிருப்புக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி , தான் அங்கை வாறன் எண்டு இண்டைவரைக்கும் ஒண்டும் தெரியேல கண்ண்ணன் " .

எனக்கு அவளிற்கு என்ன சொல்வதென்று தடுமாறினேன். பின்பு ஒரு முடிவிற்கு வந்தவனாக ,

" பாமினி சொன்னா கேள் அழாதை " .

இப்பொழுது அவள் சிறிது சமாதானமானள் . அவளது கண்கள் சிவப்பேறியிருந்தன . "

நான் ஒண்டு சொன்னா குறைஇனைக்கமாட்டியே "?

" இல்லை . என்ன ? என்னால இப்போதைக்கு இது தான் என்னால செய்யேலும். நீ இதை வைச்சு உன்ரை பிள்ளையள படிப்பி , என்று சொல்லி போக்கற்றுக்குள் இருந்த பத்து ஆயிரம் ரூபா நோட்டுக்களை பாமினியின் கையில் திணித்தேன் " .

"என்ன இது கண்ணன் ? எனக்கு வேண்டாம் ".

" இல்ல , நீ எங்கடை குடும்பத்தில ஒராள் மாதிரி உன்னை இப்பிடி என்னால விடேலாது . இது என்ர ரெலிபோன் நம்பர் நான் போய் உன்ர பிள்ளையளின்ர படிப்புகளுக்கு ஒரு ஒழுங்குசெய்யிறன் ".

பாமினி பிள்ளையாரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . உண்மையில இந்தக்காசை அண்ணை கோயில் திருப்பணிக்கு என்று குடுக்கச் சொல்லியிருந்தார் . எனக்குப் பாமினிதான் முக்கியாமாகப்பட்டாள் . பிள்ளைகள் விளையடி முடித்து விட்டு என்னிடம் ஓடி வந்தார்கள் , வீட்டற்குப் போவதிற்கு . நான் கோயிலுக்குப் போக மனம் பிடிக்காமல் வீட்டிற்குப் பிள்ளைகளுடன் தளரந்தநடையுடன் திரும்பினேன் .





தொடரும்


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம