இது மிகவும் இலகுவான கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு பக்குவம் . நான் அடிக்கடி வீட்டில் செயவதும் இதைத்தான் . நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன ?
தேவையானவை :
பசுமதி அரிசி 500 கிறாம் .
கட்டித் தயிர் ( NATURE YOGURT ) 2 - 3 பெட்டி ( ஒவ்வொன்றும் 125 கிறாம் கொள்ளளவு கொண்டது).
சின்னவெங்காயம் 10 .
கடுகு அரை தேக்கறண்டி .
வெள்ளை உளுந்து அரை தேக்கறண்டி
பச்சை மிளகாய் 7 - 8 .
இஞ்சி ஒரு துண்டு ( குறுணியாக வெட்டியது ) .
உப்பு தேவையான அளவு .
எண்ணை 3 மேசைக்கறண்டி .
கருவேப்பமிலை 4 -5 இலை .
கொத்தமல்லி இலை தேவையான அளவு .
பக்குவம் :
பசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி சோறு வடியுங்கள் . சோறு முக்கால் பதத்தில் இருக்கவேண்டும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு தாச்சியை சூடேற்றுங்கள் . எண்ணை கொதித்தவுடன் கடுகையும் , வெள்ளை உளுந்தையும் , கறிவேப்பமிலையையும் போட்டு வெடிக்க விடுங்கள் . தயிரையும் , உப்பையும் இஞ்சியையும் , தாச்சியில் போட்டவுடன் தாச்சியை இறக்குங்கள் .அதனுள் வெட்டிய பச்சைமிளகாய் , சின்னவெங்காயம் , சோறு என்பவற்றைப் போட்டு நன்றாகக் கிண்டிக் கிளறி விடுங்கள் . இறுதியாக கொத்தமல்லி இலையைக் குறுணியாக வெட்டி தயிர்சாதத்தின் மேல் தூவி விடுங்கள் . இப்பொழுது தயிர் சாதம் றெடி .
படிமானம் :
இதோடை மாங்காய் உறுகாய் , உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் சாப்பிடுங்கோ . இப்ப உள்ள வெக்கைக்கு குளிர்த்தியான தீனி . கூட திண்டு பிறசர் , சீனி கூடினால் என்னைக் கேக்கப்படாது சொல்லிப்போட்டன் .
January 29, 2013
Comments
Post a Comment