இலக்கின்றி பறக்கும் சிந்தனைப் பறவை
வாழ்க்கையில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத செல்வம் எது ? - என்னுடைய வாழ்வியல் பயிற்சி முகாமுக்கு வருபவர்களிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது .
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். நான் சொல்வது - இந்தக் கணம்.. இந்த விநாடி.. இதுதான் நிலையானது. இந்த விநாடியை யாருமே நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. ஆனால், இந்தக் கணத்தை இதோ நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த விநாடியை நம்மில் பலர் முழுமையாக அனுபவிப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மை. ஏனென்றால், நமது சிந்தனை பாதி வேளை, கடந்த காலத்தில் நிலைத்து இருக்கிறது.. அல்லது அது வருங்காலத்தைப் பற்றிய கவலையில் தோய்ந்து போயிருக்கிறது.
வீட்டில் இருக்கும்போது, ஆபீஸைப் பற்றிச் சிந்திக்கிறோம். சாப்பிடும்போது கூட நமது சிந்தனை சாப்பாட்டில் இருப்பதில்லை. குளிக்கும்போது கூட, ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான உடம்பை நாம் பார்த்து ரசிப்பதில்லை. அது இன்றைய தேதிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதில்லை. அப்போதுகூட இலக்கில்லாமல் பறக்கும் பறவையாக மாறி எங்கேயோ சிறகடிக்கிறது . இதனால் ஏற்படும் விளைவு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் . எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ரோட்டில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுகிறதே. அதே மாதிரி விபத்துக்கள் நம் வாழக்கையில் வேறுவேறு விதமாக நடந்து விடும். இப்படி நான் சொல்வதால், இறந்தகாலத்து நினைவுகளைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போட வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. ஆவி பறக்கும் சூடான ஃபில்டர் காபியைச் ருசித்து ருசித்து அதன் ஒவ்வொரு துளியையும் நாக்கின் சுவை மொட்டுக்களால் உணர்ந்து சாப்பிடுவதைப் போலத்தான் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்;க்கையையும் விநாடி, விநாடியாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
வாழ்க்கை என்பது காபியைவிடப் பல ஆயிரம் மடங்கு சுவையானது. காபியின் முதல் சிப்புக்கும் இரண்டாவது சிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால், வாழ்க்கையில் ஒரு விநாடியைப் போல் அடுத்த விநாடி இருப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் வித்தியாசமானது. ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது என்று ஜென் புத்திசத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நதியில் ஒர் இடத்தில் ஓடுகிற நீர். அடுத்த விநாடி வேறு இடத்துக்கு மாறி விடுவது மாதிரி. வாழ்க்கையும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கிறது.
படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்துக்கு ஏற்ப விழிப்பு உணர்வும் வேண்டும். விழிப்பு உணர்வு மட்டும் இல்லையென்றால் ஒருவன் எத்தனை திறமைகள் படைத்திருந்தாலும். அது அவனுக்குப் பலன் தராமல் போய்விடும். அதனால்தான் பொpய கம்பெனிகளில் வேலைக்கு மனுச் செய்திருப்பவர்களுக்கு Presence of Mind இருக்கிறதா என்று பல்வேறு விதங்களில் சோதனை செய்கிறார்கள்.
ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. ஞநன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும்ஞ என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது.
வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார் ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.
புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பெரிய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிரித்தபடியே கூறினார்.
காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும்... ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் .
00000000000000000000000000000000000
இதயமும் மூளையும்.
இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை. அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது. இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை. உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை. சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை, கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன. இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர். இந்த உலகம் தந்திரக்காரர்களால் இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது. எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது. எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது. இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும், அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை. உங்கள் தலையில், மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது. மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது. சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது. அன்பு நடத்திச் சென்றால் நாம், முற்றிலும் மாறுபட்ட, அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட, போர்களற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம். அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது. அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.
0000000000000000000000000000000000
இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?
ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள் . "எனக்கு நிறைய நகை கொடு.. பணம் கொடு.." என்று வகைவகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்ததார்கள் . இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம் சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன் . ஆனால் அவரால் மனிதர்களின் "அதைக் கொடு.. இதைக் கொடு.." என்ற பிக்கல் பிடுங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை . அவர் கோயிலை நோக்கி ஓடினாராம். அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர் கொண்டது பிச்சைக் காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. "மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே . தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதில்லையே . அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.
"கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறhர்..?" என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப் படுகிற கதை இது .
"யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம்" என்ற மனநிலையிலே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை .
தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்தால் லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸுக்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.
இந்து சாஸ்திரப்படி ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது "இனிமேல் இது என்னுடையது இல்லை " என்று சொல்லிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும்.
சமஸ்கிருதத்தில் "நமமா" என்றல், "என்னுடையது இல்லை" என்று அர்த்தம். என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு டியூப்லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு "இது என்னுடையது " என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்..?
யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை.. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை..? எத்தனை..?
"இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான, அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்..? என்று யோசித்துப் பார்த்தாலே போதும்.. நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும் .
அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறர். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறேhமே..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது "நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள் என்பதுதான் "நமஹ" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் "போற்றி" என்றhலும் இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் .
ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது "நன்றி."
ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே.. பயப்படாதீர்கள்.. விமானத்தில் சின்னக் கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.." என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது,
"அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் , விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Any way thank you for flying with our Airlines.. (எங்கள் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி) என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டு விட்டு விமானப் பணிப்பெண் பாராட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம் .
நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் "நன்றி" பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன "நன்றி" மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது.
0000000000000000000000000000000000000
அவநம்பிக்கை
ஒரு பெரிய வியாபாரி. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிப்பவர் அவர் அவ்வப்போது வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வதுண்டு. ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அந்த ஆள் பார்ப்பதற்கே படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். பெரிய மீசை , தலை வழுக்கையுடன் ஒற்றைக் கண்ணனாய் இருந்தார். ஆள் மிக பலசாலியாகவும் உடலில் ஆங்காங்கே காயம் பட்ட வடுக்களுடனும் இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,
''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை.''
பெட்டகக் காப்பாளர் சொன்னார்,
''பரவாயில்லை,கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்கள் அறைக்கு வந்திருப்பவரும் சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.ஏற்றுக் கொள்வதுமில்லை.
000000000000000000000000000000000000
வெற்றுப்படகு
ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம் உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான். ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான். அவன் கூச்சலிடுவது கேட்கப் படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான். இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான். ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான். கோபம் அடைய மாட்டான்.
எப்பொழுதெல்லாம், யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது உங்கள் மீது மோதினால், நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள். இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது. இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,
''மற்றவர் தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''
மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம் என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.
''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான். நான் பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல. நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம். ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது, அவர்கள் கோபமடைய. நீங்கள் நல்லது செய்கிறீர்களா, கெட்டது செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல. நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.
''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''
February 28, 2013
Comments
Post a Comment