பஸ்சின் ஜன்னலின் ஊடாக உப்புக்காற்று கமறியது.தூரத்தே வெண்பரப்புகளாக உப்பு விளைந்திருந்தது. உப்பை எடுக்க பாத்தி பாத்தியாக கட்டியிருந்தார்கள். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனக்கு அவை இரத்தமாகத் தெரிந்தது. கண்ணைக்கசக்கி விட்டுப் பார்த்தேன்.அந்த நீர் குட்டையில் நாரைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. எங்களையும் தானே பல நாரைகள் மீன்பிடித்தன. பஸ் ஆனையிறவு படைமுகாமை நெருங்கியது தெரிந்தது. வீதியின் இரண்டுபக்கமும் உயர்த காவல்கோபுரங்கள் இருந்தன, அதில் சிங்கங்கள் குந்தியிருந்தன. படைமுகாம் பரந்து விரிந்திருந்தது. ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். இந்தப் படைமுகாமின் பாதுகாப்பு அரண்களைப் பற்றி உலகின் இராணுவ வல்லுனர்கள் சிலாகித்துப் பேசி, ஓர் மரபுவான்படைமூலமே இந்த படைமுகாமை தகர்க்கமுடியும் என்று பெரிய சான்றிதளே கொடுத்திருந்தார்கள்.ஆனால் நாங்கள் சரித்திரத்தையல்லவா மாற்றியமைத்தோம். இதே வீதியால்தானே துட்டகைமுனுக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். உலகின் இரண்டாவது பெரிய தரையிறக்கத்தையல்லா செய்து வெற்றிக்கொடி நாட்டினோம். குடாரப்புத் தரையிறக்கம் பல இராணுவல்லுனர்களை பொறிகலங்க வைத்தது.ஆம்........ இரண்டாம் உலகப்போரில் நடை பெற்ற நோர்மண்டி தரையிறக்கத்தின் பின்னர் வந்த இரண்டாவது தரையிறக்கமல்லவா?? ஒரே இரவில் அதிகப்படியான போராளிகளை தரையிறக்கி சிங்கங்களையும் அதன் கூட்டாளிகளையும் கலங்கடித்த தரையிறக்கமல்லவா !!!! சிங்களமும் குப்பற வீழ்ந்தது. நாங்கள் அதிகம் பேசவில்லை, செய்து விட்டு அடுத்தவேலையைப் பார்த்தோம். ஆனால், இப்போ காதுபிய்யுமளவுக்கு ஓரே இரைச்சல்.மீண்டும் குடிமனைகள் வரத்தொடங்கின.பஸ் வேகமெடுத்து வீதியின் இரண்டு பக்கமும் தென்னைமரங்கள் நின்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், மேலே பலகருகி மொட்டையாக நின்றன.தென்னைகளை வைத்து பளை வரத்தொடங்கிவிட்டது என்று அனுமானித்தேன். தூரத்தே ஒருசிலர் வீழ்ந்த தென்னை ஓலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் பனை வடலி ஓலைகளால் நேர்த்தியாக வேலி போட்டிருந்தார்கள். பனைகளும் பல கற்பிளந்து நின்றன. புதிய வடலிகளும், தென்னம்பிள்ளைகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால், இவைகள் வளர்ந்து எப்போது பலனைத் தரப்போகின்றன?? மனது வலித்தது. சிங்கம் பாத்துப் பாத்தல்லவா எழும்பமுடியாதவாறு கடித்து குதறியுள்ளது. பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றி இறக்கி போய்கொண்டிருந்தது. பாதையின் அருகே மீண்டும் பழைய புகையிரதப்பாதை இணைந்து வந்து கொண்டிருந்தது. பற்றைகளுடன் மேட்டுப் புட்டியாக வீதியுடன் ஒட்டிவந்தது புகையிரதப் பாதையை திருத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தே வீதியின் இரண்டுபக்கமும் உயர்ந்த காவற்கோபுரங்களும், மண் அணைகளும் தெரிந்தன. அவை என்ன என்று அப்பாவியாக மனவியிடம் கேட்டேன். முகமாலை இராணுவப்படை தளத்தை நெருங்குகின்றோம் என்றா. என் முகத்தில் கலவரரேகை படர்ந்தது. பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச்சென்றது.
July 15, 2011
தொடரும்
தொடரும்
Comments
Post a Comment