Skip to main content

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்.







கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் . இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் .

அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை கோயில்லை குளறி சின்னத்தம்பியர் எண்டு ஒரு நாட்டாண்மை இருந்தவர் . அவற்றை வேலை எங்களை கொண்றோல் பண்ணுறது . பொம்பிளையளுக்கு முன்னாலை தான் ஒரு பயில்வான் எண்டு காட்டிறது . அவரை ஏன் குளறி சின்னத்தம்பி எண்டு சொல்லிறனாங்கள் எண்டால் அந்தாள் ஒருக்காலும் மெல்லிசாய் கதைக்கிற மனுசன் இல்லை . பக்கத்திலை நிண்டால் காது கன்னம் எல்லாம் வெடிக்கும் . அவருக்கு தண்ணி வென்னியோ சுருட்டு அடிக்கிற பழக்கமோ இல்லை . அனாலும் வஞ்சகம் சூதுவாது இல்லாத மனுசன் . குளறி சின்னத்தம்பியாருக்கு சொந்தமாய் ஒரு பொயிலை தோட்டமும் ஏழெட்டு மாடுகளும் நிண்டது . அவற்றை பிரச்னை எல்லாம் நாங்கள் கோயிலடியிலை அடக்க ஒடுக்கமாய் இருக்கவேணும் அதுக்காக எதுவும் செய்வார் . எங்களுக்கு உந்த அடக்க ஒடுக்கமெல்லாத்துக்கும் எழிலை சனி .

பிள்ளையார் கதை படிக்கிற நாளுகளிலை எங்கடை சோலியள் எக்கச்சக்கம் . வாற பெட்டையளுக்கு பொக்ஸ் அடிக்கிறது . அவையளுக்கு வாற வெளி ஆக்களின்ரை பிரைச்சனையளுக்கு நாங்கள் செண்றி குடுக்கிறது . கதை வாசிச்சு முடியிற நேரத்திலை ஐயர் ஆலாத்தி காட்டினால் பிறகு படைச்ச பிரசாதம் குளறி சின்னத்தம்பியர் தான் மெயின் ஆளாய் நிண்டு குடுப்பர் . நாங்கள் லையினிலை நிண்டால்தான் ஒழுங்காய் கிடைக்கும் . அதுவும் அண்டைக்கு எவன் நல்லவனாய் இருந்தானோ அவனுக்குதான் கூட . எனக்கு ஒரு சின்ன கிள்ளல் தான் கிடைக்கும் . அதோடை குளறியர் பஞ்சமிர்தம் குடுக்கிற ஸ்ரைலைப் பத்தி இந்த இடத்திலை நான் உங்களுக்கு கட்டாயம் சொல்லவேணும் . குளறியர் எந்த நேரமும் கொடுக்கு கட்டிக் கொண்டுதான் நிப்பார் . ஆளுக்கு வேர்வை உடம்பு வேறை , பஞ்சாமிர்தம் குடுக்கிற நேரம் குளறியருக்கு வேர்வை எண்டால் அப்பிடி ஒரு வேர்வை . அதோடை ஆளுக்கு சொறி வேறை . ஆள் ஒரு கையாலை வேர்வையையும் துடைச்சு கொண்டு டிக்கியிலையும் சொறிஞ்சு கொண்டு பஞ்சாமிர்தம் குடுப்பார் பாருங்கோ சொல்லி வேலையில்லை . அந்த நேரம் சிவ சத்தியமாய் அது எங்களுக்கு ஒரு வித்தியாசமான ரேஸ்ராய் இருக்கும் . இப்ப நினைச்சால் வயித்தை பிரட்டும் .

பிள்ளையார் கதை நேரதில்லை குளறியரின்ரை அலப்பரையள் ஒரு கட்டத்துக்கு மேலை எங்களுக்கு கொலைவெறியை கொண்டு வந்துட்டுது . என்ரை கூட்டிலை இருந்த தோப்பிளாண்டி ,

” மச்சான் குளறியருக்கு மறக்கேலாத ஒரு சொட் குடுக்கவேணுமடாப்பா ”

எண்டு தன்ரை வெப்பிராயத்தை சொன்னான் . ஒருநாள் பின்னேரம் கேணியடியிலை நான் , தோப்பிளாண்டி , வைத்தி , உதயன் எல்லாரும் காலை கேணித் தண்ணிக்குள்ளை விட்டுக்கொண்டு யோசிச்சம் . உதயன் தோப்பிளாண்டியிட்டை சொன்னான் குளறியர் என்னென்ன டெயிலி செய்யிறார் எண்டு பாக்கச் சொல்லி , அதுக்குப் பிறகு ஏதாவது செய்வம் எண்டு ஐடியா தந்தான் . நாங்களும் தோப்பிளாண்டியிட்டை பொறுப்பை குடுத்துப் போட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு சந்திப்பதாய் இடத்தை விட்டு கலைஞ்சம் .


ஒரு நாள் பின்னேரம் நாங்கள் எல்லாரும் வைத்தியின்ரை ஆள் வாறதுக்காக கேணியடியிலை இருந்தம் . அந்த நேரம் தோப்பிளாண்டி குளறியரின்ரை றொக்கியளை எடுத்து விட்டான் . குளறியர் முக்கியமாய் இரவு 9 மணிக்குப் பிறகு அவரின்ரை பொயிலை தோட்டத்துக்குப் போய் ஒரு அரை மணித்தியாலம் அங்கை மினைக்கெடுறதாய் சொன்னான் . இடையிலை உதயன் குறுக்காலை விழுந்து,

” இதுதான் மச்சான் சரியான நேரம் . குளறியருக்கு பட்டுச் சாத்தலாம் ”

எண்டு சொன்னான் . எனக்கு குளறியர் அந்த நேரத்திலை அங்கை என்ன செய்யிறார் எண்டு பாக்கவேணும் போலை கிடந்திது . அடுத்த நாள் இரவு நாங்கள் கைகாவலாய் ஒரு சாக்கு , ரெண்டு மூண்டு பூவரசங்கொட்டன் எண்டு எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போனம் . அண்டைக்கு எண்டு நல்ல அம்மாவாசை இருட்டு . வானம் வழிச்சு துடைச்சு நட்சத்திரங்கள் மட்டும் இருந்து எங்களுக்கு வழிகாட்டீச்து .

வைத்தி குளறியற்றை தோட்டத்து படலையை மெதுவாய் திறந்து போக , நாங்கள் அவனுக்குப் பின்னாலை போனம் . எங்கடை மூக்கிலை சுறுட்டு வாசம் வந்து அடிச்சுது . சுறுட்டு வாசத்துக்குப் பயந்த வைத்தி சொன்னான் ,

” மச்சான் நான் வரேலை . உது நாச்சிமார் தான் . அம்மாச்சி சொல்லுறவா நீங்கள் போங்கோ எண்டு ” ,

உதயன் வைத்தியின்ரை நாரியிலை ஒரு சொட் குடுத்து சத்தம் போடாமல் வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு வந்தான் . அங்கை நாங்கள் போனால் , போயிலை கண்டுகளுக்கு நடுவிலை குளறியர் எங்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு குந்தி இருந்து கொண்டு கள்ளும் , சுறுட்டும் அடிச்சுக் கொண்டு ஒரு பாட்டு பாடிக்கொண்டு தனக்குள்ளை சிரிச்சுக் கொண்டு இருந்தார் . நாங்கள் மெதுவாய் போய் , வைத்தி ஒரு உதை முதுகுக்கு குடுக்க , உதயன் கொண்டு வந்த சாக்காலை படக்கெண்டு குளறியற்ரை மூஞ்சையை மூட , மின்னி முழிக்க முதல் தோப்பிளாண்டி கொண்டு வந்த பூவரசங்கொட்டனாலை கை கால் எல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கினான் . ஒரு கட்டத்திலை நாங்கள் விட்டு போட்டு ஓடீட்டம் . அடுத்த நாள் பின்னேரம் நாங்கள் கேணியடியிலை பம்பல் அடிசுக் கொண்டு இருந்தம் . குளறியர் மாடுகளை ஓட்டிக்கொண்டு எங்கடை பக்கம் நொண்டி நொண்டி வந்தார் . அவர் கிட்ட வர நான் அப்பாவியாய் முகத்தை வைச்சுக்கொண்டு ,

” என்ன சின்னத்தம்பியண்ணை கை காலெல்லாம் காயமாய் கிடக்கு . என்ன நடந்தது ? “எண்டு கேட்டன் . அதுக்கு குளறியர் சொன்னார் ,

” அதையேன்ராப்பா கேக்கிறாய் என்ரை பட்டியிலை நிண்ட உவள் வெள்ளைச்சியை மாறிக் கட்டேக்கை இழுத்த இழுவையிலை கை காலெல்லாம் சிராய்ச்சுப் போட்டுதடாப்பா ” எண்டு சொல்ல வைத்தி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சான் .

இப்பிடியெல்லாம் பிள்ளையர் கதையோடையும் குளறியரோடையும் மல்லுக்கட்டி கடைசி நாள் திருவிழா அண்டு சனத்துக்கு பக்தி முத்தி சுத்த பத்தமாய் இருக்குங்கள் . நாங்கள் மெதுவாய் கைதடிப்பக்கமாய் போய் பதநீரும் கள்ளும் குடிச்சுப்போட்டு நல்லபிள்ளையளாய் பீடாவும் போட்டுக்கொண்டு பின்னேரம் போலை பிள்ளையார் வெளி வீதி சுத்திற நேரத்துக்கு கோயிலடியிலை நிப்பம் . குளறியரோடை சேர்ந்து நாங்களும் சவுண்ட் விட குளறியர் ஹப்பியாயிடுவர் . பிள்ளையார் இருப்புக்கு வந்தால் பிறகு நாங்கள் குளறியருக்கு எண்டு கொண்டு வந்த கள்ளுபோத்திலை நாங்கள் அப்பாவியாய் குடுக்க , குளறியற்ரை முகத்தைப் பாக்கவேணும் அப்பிடி ஒரு சந்தோசம் . இப்ப அந்த குளறியரும் ஊரிலை இல்லை . அப்பிடி ஒரு பிள்ளையார் கதையையும் பாக்கேலாமல் கிடக்கு .






December 28, 2013

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...