Skip to main content

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும்.





முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தாறன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .

இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை , இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் , எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்றறுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய்து அன்பாய் தந்த சாப்பாடுகள் எல்லாம் மெசின் செய்யிது . இதைப் பாக்கேக்கை எனக்கு கொஞ்சம் குறுக்காலை போன கேள்வியள் வந்து துலைக்கிது பாருங்கோ . இந்த மெசினுகள் இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த மனுசிமார் எண்ட கேள்வி வராதோ ?? எனக்கு அம்மாச்சியாலையும் அம்மாவாலையும் தந்த அன்பு பாசத்தை இந்த மெசினுகள் தருமோ ?? இப்பவே இந்த அலப்பரை விடுகிற மனுசிமார் இந்த மெசினுகளை வாங்கி போட்டு எங்களை என்ன பாடுபடுத்துவாளவை ?? இந்த மெசினாலை எத்தினை பேருக்கு வேலை இல்லாமல் போகிது ?? இப்பிடி கன கேள்வியள் எனக்கு மண்டையுக்கை அடிக்கிது . தாய்குலங்கள் என்னை கடிச்சு குதறாமல் உங்கைடை அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோவன் . அதுகாக சிங்கனுகள் பம்மிறதை விட்டிட்டு சிலுப்பிக்கொண்டு நீங்களும் உங்கடை பக்கத்து நியாயங்களை சொல்லுங்கோ .








December 23, 2012

Comments

Popular posts from this blog

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...

‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன . முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்ல...

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 00

என்னுரை ஒரு புதிய வரலாற்றுத்தொடரின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் தொடருக்கான நேரத்தையும் காலத்தையும் அடைவுகாலமே எனக்கு வழங்கியது. அடிப்படையில் நான் ஒரு சைவசமயத்தை தீவிரமாக பின்பற்றும் தாவர உண்ணிகளான பெற்றோரின் பின்புலத்தில் இருந்து வந்தாலும் எனது வாழ்நாள்காலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்தேசத்தில் வாழ்ந்ததினால் மனமும் சிந்தனையும் விசாலமாயிற்று. அதன் விளைவாக வெளிவருவதே இந்தத்தொடர். புலம்பெயர் தேசத்தில் எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் பௌத்தத்தை உள்வாங்கியவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பலவேறு காரணிகள் இருந்த போதிலும் எனது நோக்கில் ஆசியக்கண்டத்தில் சாதீய அடுக்குகள் பல மட்டங்களில் இருந்து மானிடவாழ்வை கேள்விக்குறியாக்கியது அதற்கு அவரவர் சார்ந்த மதங்களும் துணைபோயின என்பதை நாங்கள் காயத்தால் உவத்தல்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். புலம்பெயர் தேசத்தில் தமிழர் மத்தியில் பௌத்த கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு இவையும் ஒருகாரணியாக இருந்தன. மேலும் பௌத்தத்தில் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அவரவர்...