நான் பயணத்தை ஆரம்பிக்க முன்பும் எனக்கு வேலை. நான் ஒரு 4 நட்சத்திர ஹோட்டலில் காலை உணவுப் பிரிவின் முகாமையாளராக வேலை செய்கின்றேன். வளக்கமான காலை பரபரப்புடன் எனது வேலை தொடங்கியது.அன்று பார்த்து எனது உதவியாளர் மருத்துவ விடுமுறை. சரி இன்று நான் துலைந்தேன் என எண்ணியவாறே வேலையை தொடரந்தேன். எனது மனமோ நாளைய பயணத்திலேயே லயித்தது.எவ்வளவு நாள் கனவு,கண்ணீர் இன்னும் 24மணித்தியாலங்கள். மனம் என் சொல் கேடக்கவில்லை. ஹோட்டல் இயக்குனரின் காலை வணக்கம் என்னைக் கலைத்தது. பதில் வணக்கம் சொல்லி விட்டுத் தொடர்ந்தேன். தன்னை வேலை முடிந்தவடன் சந்திக்க முடியுமா என இயக்குனர் கேட்டரர்.மதியம் 1 மணியாகியது இயக்குனரின் ஞபகம் வரவே யோசனையுடன் அவரது அலுவலகம் நோக்கிச் சென்றேன்.அவரது வழக்கமான லொள்ளு தொடங்கியது.
" ராஜன் உங்களுடைய விடுமுறையை எனக்காக தள்ளிப்போடமுடயுமா " எனக்குப் புண்ணில் புளிப்பத்தியது.
" ஏன்"
" உங்களுடைய இடத்திற்கு வர இருப்பவர் கடைசி நேரத்தில் வர முடியது என்று சொல்லி விட்டார்"
கண்கள் சிவக்க ஆளமாக அவரைப் பார்த்தேன்.
" நான் ஒரு மாதத்திற்கு முன்பே முறைப்படி எழுத்து மூலம் கேட்டுப் பெற்றது மாற்றமுடியாது"
" ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்"
" உங்களால் முடிந்ததை செய்யுங்கள்"
நான் விடுமுறையில் செல்வது உங்களுக்குப் பொறாமை, உங்கள் விடுமுறை பிரான்ஸ்சுடன் முடிவது உங்கள் பொறாமையால் தான் உங்கள் அதிகாரத்தைப் பாவக்கின்றீர்கள் என்று வெடித்தேன். கனத்த இதயத்துடன் தொடரூந்தில் வீடு திரும்பினேன். மனமோ கொதிகலனாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? தாங்கள் விடுமுறையில் போகும் பொழுது படம் எடுப்பார்கள். எங்களுக்கு சந்தோசமாக வழியனுப்ப மாட்டார்கள். பொறாமை நிறம் பார்ப்பதில்லையோ?
மனைவியும் வேலையால் வந்தா. இருவருமே உடலால் மிகவும் களைத்து விட்டோம். பயணப் பொதிகளை இறுதிக் கட்டமாக சரி பர்த்து பூட்டிவிட்டு படுக்க இரவு 11 மணியாகி விட்டது. காலை 9 மணிக்குத் தான் விமானம். காலை 6 மணிக்கு விமானநிலையத்தில் நின்றால் போதுமானது. மனம் நிலை கொள்ளாது தவித்தது. மனதிற்கும் நித்திரைக்கும் சண்டை தொடங்கியது. மனைவியிடம் " பிரச்சனை இல்லை தானே எனக்குப் பயமாக இருக்கின்றது", "நீர் அடிக்கடி போறனீர்" , "நான் முதல் தரம்" நித்திரை வரேல. மனைவி என்னைப் பரிதாபமாகப் பரர்த்தாள். ஒண்டும் இல்லை நீங்கள் படுங்கோ. நான் சொன்னான் தானே பிரச்சனையில்லாமல் கூட்டிக்கொண்டு போவன் என்று என்னைப் படுக்க விடுங்கோ. மணியை பரர்த்தேன் அதிகாலை 1 மணியாகியிருந்தது. 100ல் இருந்து பிறவளமாக எண்ணத் தொடங்கினேன், மனம் வெற்றி கொண்டது. காலை 4மணிக்கு எழும்பி குளித்து கோப்பியை இருவருக்கும் போட்டுவிட்டு மனைவியை எழுப்பினேன். விடிந்துவிட்டதா என்றாள். நானோ பரபரத்தேன். விமான நிலயத்திற்கு தொடரூந்தில் போவோம் என்றாள். "ஏன் ரக்சியில் போகலாம்தனே"? இல்லை, இலங்கை பயணத்தில் முதல் அப்பியாசம் உங்களுக்கு முடிவாகவே மனைவி சொன்னாள். எனது வழிகாட்டி மெய்ப்பாதுகாவலரிடம் குழம்பக்கூடாது என்று மனவி சொல்கேட்டு இருவரும் தொடரூந்து நிலயம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். 5 நிமிடத்தல் பரிஸ் சார்ல்ஸ் டு கோல் சர்வதேச விமான நிலயத்தில் நின்றோம். மனம் பரபரத்தது,கோப்பியும் சிகரட்டுமாக நேரத்தை போக்காட்டினேன். மனைவி முறாய்துப் பார்தாள். அவளிற்கு என் நிலமை விளங்கவில்லை, என்னுடைய இடத்தில் அவளை இருத்தனால் விளங்குமோ? மே 4 காலை ஓருவாறு 7.30 மணியாகியது. நான் இம்முறை ஐரோப்பியனாகப் போவதால் குடியகல்வு சுலபமக இருந்தது. நாங்கள் இருவரருமே எமது பயணத்தை யாருக்குமே அறிவிக்கவில்லை. அதிசயாமக எனது சகோதரங்கள் முன் நிற்கவே ஆசைப்பட்டேன். காலை 9.30 ற்கு குவைத் எயார்வேஸ் எம்மைச் சுமந்து ஓடு பாதையில் ஓடி மேலே எழுந்தது.
தொடரும்
May 30, 2011
Comments
Post a Comment