வணக்கம் பிள்ளையள் ,
எப்பிடி சுகநயங்கள் ? நான் சுருக்கு சுறுக்கர் தான் பாருங்கோ . சுறுக்கருக்கு ஆயிரத்தெட்டு சோலியள் கண்டியளோ . அதாலை கொஞ்சம் சுணங்கிப் போட்டுது சுறக்கர் உங்களை எல்லாம் சுகநயம் விசாரிக்க . அதோடை சுறுக்கருக்கும் சுருக்கெண்டு நாலு விசையங்கள் இருந்தால்தானே உங்களோடை கூச்சநாச்சமில்லாமல் பம்பல் அடிக்கலாம் . நீங்களும் ஏதாவது சுறுக்கருக்கு ஏதாவது சொல்ல வசதியாய் இருக்கும் .
இப்ப ரெண்டு மூண்டு நாளாய் தமிழகத்திலை எங்களுக்காக மாணவர்கள் எல்லாம் போராட்டத்திலை குதிச்சிருக்கினம் . நல்ல விசையம்தான் . இந்த மாணவர் போராட்டங்கள் ஐஞ்சுசதத்துக்கு உதவாது எண்டு சொல்லிற அளவுக்கு சுறுக்கர் ஒண்டும் தரங்கெட்டவன் இல்லை . சுறக்கர் எப்பவுமே மாணவரின்ரை உணர்வுகளுக்கு மரியாதை செய்யிறவன் . ஆனால் சுறுக்கரிட்டை சுருக்கெண்டு கொஞ்சம் சமசியங்களும் கிடக்கு . அது என்னண்டால் , இந்தியாவின்ரை வெளிநாட்டு கொள்கையளை முடிவு செய்யிறது " றோ " எண்டு சின்னப்பிள்ளைக்கும் தெரிஞ்சவிசையம் . முள்ளிவாய்க்காலிலை உலகத்திலேயே ரெண்டாவது பெரிய இனப்படுகொலை நடக்கேக்கை தமிழகத்திலை பெரிய பூகம்பம் வெடிச்சுது . அப்ப மாறாத " றோ " இப்ப மட்டும் இந்த மாணவர் போராட்டங்களாலை மாறுமோ ??? எண்டது சுறுக்கிரின்ரை சமசியம் பாருங்கோ . ஏனெண்டால் ஒரு கள்ளனோடை சேந்த மத்தக் கள்ளனிட்டை போய் தமிழனுக்கு உதவி செய்யுங்கோ மத்திய அரசே எண்டு கேக்கிற அரசியல் சூத்திரம் சிவசத்தியமாய் சுறுக்கருக்கு விளங்கேலை !!!!!!!
இப்ப........ இந்த தமிழகத்தின்ரை தனித்தமிழ் நாடுக்கோரிக்கையை கடைஞ்செடுத்த போக்கிலி அரசியலுக்காக விட்டவை இந்த திராவிட கட்சியள் . இப்பவும் இவையள்தான் ஆட்சியிலை இருக்கினம் . ஒரு தனியான சுயாட்சி உள்ள தமிழ் நாட்டுக் குடியரசிலை இருந்து அதின்ரை மாணவர்கள் நீங்கள் எங்களுக்கு ஆதரவாய் றோட்டிலை இறங்கினால் அதிலை ஒரு அர்த்தம் இருக்கு கண்டியளோ . நீங்கள் இருக்கிறது இந்தியாவின்ரை ஆழுகைக்கு உள்பட்ட ஒரு மாநிலம் . இதுகள் விளங்காமல் எங்கடை இணைய போராளியள் உங்களை பாத்து , பட்டையை கிளப்புங்கோடா கிளப்புங்கோடா எண்டு விசில் அடிக்கிறாங்கள் . கதை கவிதையெண்டு கீ போர்ட் அனல் பறத்திது . எனக்கு இதுகளை பாக்க 2009 லை அடிச்ச விசில்கள் மாதிரி கிடக்கு . இந்த இணைய முதலாளியள் எல்லாம் உங்களுக்கு ஆதரவாய்த் தான் செய்தியள் போடவேணும் எண்டு சொல்லுகினம் . அவைக்கு தங்கடை இணையங்களை றாங் கூட்டவேணும் எண்ட பிரச்சனை பாருங்கோ. ஆனால் ஒரு விசையம் பாருங்கோ சுறுக்கர் சொல்லிறன் எண்டு கோபிக்கப்படாது , "வடக்கத்தையான்" புலம்பெயர்ந்த டமில்ஸ்சுக்கு வேண்டாமாம் . ஆனால் அவனின்ரை நாட்டிலை இருக்கிற ஒரு மானிலத்திலை இருக்கிற நீங்கள் றோட்டிலை நிக்கிறது வேணுமாம் . இது மொள்ளமாரிவேலையல்லோ??? அப்ப நான் வரட்டோ பிள்ளையள்.....
சுருக்கு சுறுக்கர்
March 16, 2013
Comments
Post a Comment