வணக்கம் பிள்ளையள் . கனகாலத்துக்குப் பிறகு உங்களை சந்திக்கிறன் . நீங்கள் எல்லாம் சுகமாய் இருப்பியள் எண்டு நினைக்கிறன் . மெய்யாலும் அடிக்கடி உங்களை பாக்கவேணும் எண்டு யோசிக்கிறதுதான் பிள்ளையள். சம்மர் தொடங்கினதாலை எனக்கும் ஆயிரம் அறுவத்தெட்டு சோலியள் கண்டியளோ . சரி நான் புசத்தாமல் நேரை விசையத்துக்கு வாறன் . இந்த சம்மரின்ரை கொட் ரொப்பிக் " முரசு அறைவாம் " எண்டு ஒரு நியூஸ் பாத்தன் . என்ன பூராயம் எண்டு பாத்தால் , புலத்திலை சுதந்திர தமிழ் ஈழ சாசனத்தை உருவாக்கி முரசு அறையினமாம் . எனக்கு புண்ணிலை புளிப்பத்தின மாதிரி கிடந்திது . ஏனெண்டால் 1977 ஆண்டிலை வட்டுக்கோட்டை தீர்மானத்திலை , எங்கடை சனம் தங்களுக்கு என்ன வேணும் எண்டு கட் அண்ட் றைற்ராய் சொல்லிப் போட்டுது . பேந்து ஒரு சம்மறுக்கு இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறியளோ எண்டு எங்கடை சனத்தை கேட்டு வாக்கெடுப்பு நடத்தீச்சினம் . அதாலை சனம் திருப்பவும் ஓம் எண்டு சொல்லி ஒரு அமைப்பை உருவாக்கி விட்டுதுகள் . இப்ப என்னடாவெண்டால் திரும்பவும் ஒருக்கால் சாசனத்தை முரசு கொட்டினமாம் . நான் எங்கை போய் முட்ட ?????????
சண்டை முடிஞ்சு நாலுவரியம்போட்டுது . அங்கை போராடின சனம் ஜெயிலுக்கை கடந்து சீரளியுதுகள் . அதுகளை வெளியில எடுக்கிறதுக்கு ஒரு சர்வதேச அழுத்தத்தை குடுக்க காணேலை . சண்டையிலை கையை காலை இழந்த போரளி குடும்பங்கள் நடுறோட்டிலை நிக்கிதுகள் . இதுகளுக்கு வழியில்லை . சரி கனக்க வேண்டாம் சனத்தாலை தெரிவு செய்த பதவியிலை இருக்கிற மகிந்தாவை போர்குற்ற விசாரணைக்கு கொண்டு வரேலாது . ஆனால் இவ்வளவுக்கும் மெயின் ஆள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அக்கா நாட்டிலைதான் இருக்கிறா . அவாவை வலு சிம்பிளாய் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு இவையளாலை கொண்டு வரலாம் . இதுகள் தான் இப்ப சனத்துக்கு இவையள் செய்யவேண்டியது . இதுகளை செய்யாமல் இப்ப என்ன கோதாரிக்கு முரசு அறைவான் ??? சிவசத்தியமாய் சுறுக்கருக்கு இதுகள் விழங்கேலை கண்டியளோ .........
இவையள் பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவியள் செய்யுறதுக்கு கன சரட்டியள் கிடக்கு . அதுகளாலை செய்யலாம் . நெஞ்சிலை ஈரம் இருக்கிறவங்கள எல்லாம் தனியவும் , இந்த சரட்டியளாலையும் காதும் காதும் வைச்சமாதிரி செய்து போட்டு பொத்திக்கொண்டு இருக்கிறாங்கள் . இவையள் முரசு அறையிறதிலையும் , யாகம் வளக்கிறதிலையும் திரிஞ்சால் , புலத்து டமில்ஸ் எல்லாம் கேணைப்பயலுகள் எண்டுதானே ஆர்த்தம் ?????????இப்பிடியான ஆக்கள் இனியாவது திருந்தி அங்கை இருக்கிற சனங்களின்ரை பிரச்சனையளை ஒரு பொதுவேலை திட்டத்துக்கு கொண்டு வரவேணும் . இங்கை இருக்கிறவையினரை சொந்தபந்தங்கள்தான் அங்கை இருக்கிதுகள் எண்ட நினைப்பு இவையளுக்கு வரவேணும் . இல்லாட்டில் புலத்து சனங்கள் இவையளை தூக்கி எறியிறதுக்கு கனகாலம் தேவையில்லை கண்டியளோ ........ அப்ப நான் வரட்டோ பிள்ளையள் .
May 19, 2013
Comments
Post a Comment