இந்த சட்ணிசெய்முறை எனது திருமதி செய்யும்பொழுது உதவி செய்கின்றேன் பேர்வழி என்று சுட்டது.
தேவையான சாமான்கள் :
கரட் கால் கிலோ .
செத்தல் மிளகாய் 6 .
பழப் புளி (தேவையான அளவு ).
கறிவேப்பமிலை 1 நெட்டு .
வெள்ளை உளுத்தம் பருப்பு 3 கரண்டி .
கொத்த மல்லி 2 கரண்டி .
தண்ணி , உப்பு ( தேவையான அளவு ) .
கடுகு , உளுந்து அரைக் கரண்டி .
எண்ணை கால் ரம்ளர் .
** கரண்டி = தேக்கரண்டி .
பக்குவம்:
ஒரு தாச்சியில் 2 கறண்டி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பைச் சிவக்க வாசம் வரும்வரை வறுத்து , கொத்தமல்லி கறிவேப்பமிலை , செத்தல் மிளகாய் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போடுங்கள் . கரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் தாச்சியில் 3 கரண்டி எண்ணை விட்டு 5 நிமிடங்கள்வரை வதக்குங்கள் . பின்பு தட்டில் வைத்திருந்தவற்ரைக் கரட்டுடன் சேர்த்து உப்பு , புளியும் சேர்த்து சிறிது வேக விடுங்கள் . பின்பு ஓரளவு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டுத் தேவயான அளவு தண்ணியும் விட்டு பசுந்தாக அரையுங்கள் . பிறகு தாச்சியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு , உளுந்து கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைச்ச சட்ணியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடுங்கோ . இப்ப கரட் சட்ணி தயார் .
படிமானம்:
தோசை , இட்டலி , கல்லு றொட்டி , பறோட்டா போன்றவற்ருக்குத் தொட்டுச் சாப்பிட்டுப்பாருங்கோ .
January 25, 2013
Comments
Post a Comment