வணக்கம் பிள்ளையள் ,
நான் சுருக்கு சுறுகர் வந்திருக்கிறன் . உங்களிலை கனபேருக்கு என்னைப் பிடிக்காது . ஏனெண்டால் பரியாரியாரை ஆருக்குத்தான் பிடிக்கும் பாருங்கோ ?? நான் தரவாறது படு கைச்சலான குடிநீரும் சூரணமும் தான் . வருத்தம் தீரவேணுமெண்டால் குடிநீரை மிண்டித்தான் குடிக்க வேணும் . அப்ப பிள்ளையள் நாங்கள் விசையத்துக்கு வருவம் .......
தம்பி செத்து கிடக்கேக்கை ஆமி படம் எடுத்து வெளியாலை போட்டிது . சனம் எல்லாம் உது கடைஞ்செடுத்த பொய் எண்டு குளறீச்சுதுகள். இப்ப என்னடா எண்டால் , தம்பியின்ரை பெடியனின்ரை படத்தையும் ஆமிதான் எடுத்து வெளியிலை போட்டிது . எங்கடை சனம் என்னடாவெண்டால் இதையும் உண்மை எண்டெல்லோ சொல்லுகினம். ஆனால் இந்தமுறை மாறி மகிந்து குறூப் இதை வடிகட்டின பொய் எண்டு குளறுறாங்கள் . இது உண்மை எண்டால் அதுவும் உண்மை. இது பொய் எண்டால் அதுவும் பொய் எல்லோ
எனக்கு இன்னும் ஒரு விசையம் விளங்கேலை. தம்பியின்ரை மகன் கொலைசெய்யப்பட்டு கிட்டத்தட்ட நாலுவரியம் ஆகுது . இவ்வளவுகாலமும் இந்தவிசயம் சனத்தின்ரை கண்ணுக்குள்ளை எத்துப்படேலை . சனத்துக்கு வேறை சோலியள் கூட . இப்ப இருந்தாப்போலை இண்டிப்பெண்டன்ற் விசயத்தை ஏதோ இல்லாததை கண்டுபிடிச்சமாதிரி வெளியில விட , சனம் எல்லாம் சன்னதம் ஆடுதுகள் .
என்ரை கேள்வி என்னண்டால் இவ்வளவு காலமும் சனங்களே எங்கை போனியள் ?? வெள்ளை வெளியிட்டால் தான் செய்தியோ ?? உங்கடை சன்னதங்கள் ஆரின்ரை நிகள்ச்சி நிரலை நடக்குது ?? இந்த சன்னதங்களை கொலை நடந்த உடனையே நீங்கள் செய்திருக்கவேணும் . ஏன் இப்ப செய்யிறியள் ?? இதுவும் உங்கடை சந்தர்ப்பவாதம் தானே ?? நீங்கள் அப்பப்ப உரு ஆடிறதும் பேந்து உங்கடை சோலியளை பாக்கிறதையும் பாத்து சர்வதேசம் காறித்துப்பாதோ ?? உங்களுக்கு ஆரும்தான் எல்லாம் செய்யவேணுமோ ?? உங்களுக்கெண்டு சொந்தமாய் யோசிக்கத் தெரியாதோ ?? ஒருக்காலும் என்னை துரோகி எண்டு சொல்லிபோடாதையுங்கோ . இனியாவது ஒரு கூரையிலை ஒண்டாய் வந்து பிரச்சனையளை சர்வதேசத்திட்டை சொன்னால் வழி பிறக்கும் .
அதோடை இன்னுமொரு விசயம் சொல்லுறன் பிள்ளையள் . எங்கடை இணையப் போராளிகளுக்கு அந்த பிள்ளையின்ரை படம் கிடைச்சு போட்டுது . இனி நிண்டவன் போனவன் கண்டவன் எல்லாம் இனி ஈழம் பிடிப்பான் பாருங்கோ சொல்லிவேலையில்லை . அதோடை கலைஏறினமாதிரி கீபோட்டை அடிஅடியெண்டு அடிச்சு எழுதி கிழிப்பாங்கள் எங்கடை இணைய போராளியள் . நீங்கள் இருந்து பாருங்கோ நாளைக்கே சிங்கள தேசத்துக்கு மேலை , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருத்தபடி மல்றிபரல் அற்றாக் நடத்திற வாய்ச்சொல் வீரவானுகள் லைன்கட்டி நிப்பினம் . எவையோ எடுத்த ஆதாரத்துக்கு தாங்கள் கொப்பிறைற் கேப்பினம் . படை திரட்டி பாய்வோம் எண்டு வீடியோ கிளிப்பிலை முக்குவினம் . ரெண்டு நாள் போட்டுது எண்டால் பழையமாதிரி பெட்டிசமும் மொக்கையும் கவிதையும் போட்டு இணையத்தாலை நடக்கிற எங்கடை சனத்தின்ரை சீவியம் காய்ச்சல் தடிமனோடை தொடரும் . பேந்து திருப்பியும் எங்கையாவது லெக்சனுகள் வரேக்கை , எங்கடை பிரைச்சனைக்கு ஆதரவாய் ஆராவது தலைவர்கள் வருவினம் .
அதாலை பிள்ளையளே முதலிலை இந்த புலத்திலை இருக்கிற அமைப்புகளை ஒரு குடையுக்குள்ளை வரவேணும் எண்டு நெருக்குவாரத்தை குடுங்கோ . அபப்ப இந்த சுருக்கு சுறுக்கன் வந்து கொண்டுதான் இருப்பான் .
February 20, 2013
Comments
Post a Comment