42 திலகப் பூ .
0000000000000000000000000000000000000
43 தில்லைப் பூ ( கடி கமழ் கடிமாத் தில்லை )
புறநானூறு 252, பாடியவர்: மாற்பித்தியார்
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.
தில்லை மரம்
பெண் தில்லைப் பூ
ஆண் தில்லைப் பூ
தில்லைப் பழம்
000000000000000000000000000000000000000
44 தும்பைப் பூ .
தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. இலங்கையின் சில ஊர்களிற் தும்பங்காயைக் கறி சமைத்து உண்பர்.
இலையின் மருத்துவ குணங்கள் :
1 .குடற் புழுக்களை வெளியேற்றும் .
2 .வயிற்று வலியைக் குணப்படுத்தும் .
3 .மாதவிலக்கைத் தூண்டும் .
4 .சளியை இளக்கி வெளிப்படுத்தும் .
00000000000000000000000000000000000000
45 துழாஅய் பூ .
0000000000000000000000000000000000000
46 தோன்றிப் பூ ( சுடர் பூந் தோன்றி )
இதைக் கார்திகைப் பூ அல்லது காந்தள் பூ என்றும் அழைப்பர்.
000000000000000000000000000000000000000
47 நந்திப் பூ ( நந்தியாவட்டை )
இந்தப் பூவானது தற்பொழுது நந்தியாவட்டைப் பூ என்று அழைக்கப்படுகின்றது.
000000000000000000000000000000000000000
48 நரந்தம் பூ .
குறுந்தொகை 52, பனம்பாரனார்,
குறிஞ்சி திணை – தோழி சொன்னது
ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறும் குவை இருங் கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.
0000000000000000000000000000000000
49 நறவம் பூ .
000000000000000000000000000000000000000
50 நாகப் பூ ( நறும் புன்னாகம் )
சிறுபாணாற்றுப்படை .
ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் .
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை [116-125]
கருத்துரை :
மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.
இதற்குப் புன்னை என்ற பெயரும் உண்டு .
Comments
Post a Comment