பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் 15.05.2014 அன்று ஆரம்பமாகியுள்ளது. உலகில் மிக முக்கியமான திரைப்படங்களை அரங்கில் திரையிட்டு, அதில் சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும், சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும் மேலும் குறும்படங்களிற்கான விருதுகள் மட்டுமல்லாது போர்ணோ கிராபி நடிகர்களையும் அழைத்து அவர்களிற்கான ஒரு அங்கீகாரத்தினை கொடுத்து கெளரவிக்கின்ற நிகழ்வும் பல வருடங்களாக நடந்தது ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அதனை நிறுத்தியுள்ளார்கள்..அண்ணளவாக ஒர் ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன. உலக சினிமா வரலாற்றில் முதன்முதலாக வெனிஸ் நகரத்தில் 1932 ஆம் ஆண்டில் சர்வதேச திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது.
இன்றைய உலகில் மிக முக்கியமான திரைப்பட விழாக்களாக கேன்ஸ் திரைப்பட விழா,பெர்லின் திரைப்பட விழா,வெனிஸ் திரைப்பட விழா,டொரன்டோ திரைப்பட விழா,சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழா,மெல்போர்ன் திரைப்பட விழா ,மொன்றியல் திரைப்பட விழா ,எடின்பர்க் திரைப்பட விழா ,இந்திய சர்வதேச திரைப்பட விழா என்பன இடம் பெறுகின்றன . இன்றைய உலகில் ஒஸ்கார் சர்வதேச திரைப்பட விழா எம்மவரின் கவனத்தை ஈர்த்த பொழுதும் , துறை சார் ஊக்குவிப்பிலும் சர்வதேச திரைப்பட அங்கீகாரங்களிலும் கேன்ஸ் திரைப்பட விழாவே முன்னணியில் நிற்கின்றது . இதற்கு முக்கிய காரணங்கள் இந்த திரைப்படவிழா பல தனது விருதுப்பட்டியலில் சர்வதேச திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் தெரிவு செய்யப்பட்ட பல நாட்டு திரைப்படங்களின் பிறீமியர் காட்சி அதவது திரைப்படம் வெளிவாதற்கு முன்னரே இங்கு திரையிடப்படுவதும் ஒரு சிறப்பு அம்சமாகும். . ஒஸ்கார் திரைப்பட விழா அமெரிக்காவில் வெளியாகும் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்துவதோடு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஒரோயொரு விருது மட்டுமே வழங்கப்படும் ஆனால் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவையே ஆ..வென்று பார்த்துப் பழகிவிட்ட எம்மவர்கள் ஒஸ்கார் திரைப்பட விழாவையே கண்கள் விரியப் பார்க்கின்றனர் .
ஆண்டு தோறும் மே மாதத்தில், தெற்கு பிரான்சில் உள்ள கேன்ஸ் (Cannes) நகரில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival), 1930 களில் அப்போதைய பிரான்சின் கல்வி அமைச்சரான ஜோன் சே யால் Jean Zay, ஆல் பரிந்துரை செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டாலும் 1946 ஆம் ஆண்டிலேயே இந்த சர்வதேச திரைப்பட விழா அலுவலகரீதியாக ஆரம்பிக்கப்பட்டதாகும் . உலகின் மிகப் பழைய சர்வதேச திரைப்பட விழாகளான வெனிஸ், பேர்லின், சன்டான்ஸ் ஆகிய சர்வதேச திரைப்பட விழக்களுடன் இதுவும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும்.
கேன்ஸ் திரைப்பட விழா ஒன்பது முக்கிய பிரிவுகளாக ஒழுங்குசெய்யப் படுகிறது. அவை
01 அதிகாரமுறைத் தேர்வு – விழாவின் முக்கிய நிகழ்வு.
02 போட்டி – தங்க ஓலை விருதுக்காகப் போட்டியிடும் 20 படங்கள் தியேத்ர் லுமியெர் அரங்கில் (Théâtre Lumière) திரையிடப்படுகின்றன.
03 பல் நோக்குத் தேர்வு – இதற்காக 20 படங்கள், உலகின் பல பண்பாடுகளிலுமிருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இவை சால் டெபுசி (Salle Debussy) அரங்கில் திரையிடப்படும்.
04 போட்டிக்குப் புறம்பானவை – இவையும் தியேத்ர் லுமியெர் அரங்கிலேயே திரையிடப் படுகின்றன. ஆனால் இவை முக்கியமான பரிசுக்கான போட்டியில் இடம்பெறுவதில்லை .
05 சிறப்புத் திரையிடல் – இது படங்களின் தன்மைக்குத் தக்கவாறு இவற்றுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட சூழல் தேர்வுக்குழுவினால் தெரிவுசெய்யப்படுகிறது.
06 சினிபவுண்டேசன் – 15 குறும் படங்களும், இடைத்தர நீளம் கொண்ட படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப் படுகின்றன.
07 குறும்படங்கள் – இவை குறும்படத் தங்க ஓலை விருதுக்காகப் போட்டியிடுகின்றன.
08 இணைத் தேர்வுகள் – இவை போட்டி சாராத நிகழ்வுகள். திரைப்படத்துறையின் பிற அம்சங்களைக் கண்டறிவதற்காக ஒழுங்கு செய்யப்படுகின்றது.
09 பிற பிரிவுகள் – கான் விழாவின் போது வெளி அமைப்புக்களால் வழங்கப்படும் நிகழ்வுகள்.
நேற்று ஆரம்பமாகியுள்ள கேன்ஸ் திரைப்பட விழா 67 ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழா ஆகும். கடந்த வருடம் 2013 இல் அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க் நடுவர் குழுவின் தலைவராக கடமையாற்றினார் . இந்த முறை திரைப்பட விழாவுக்கு நியூசிலாந்து இயக்குனர் ஜேன் காம்பியன் முதன்மைப் போட்டிகள் பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சினிஃபாண்டேஷன் மற்றும் குறும்படங்கள் பிரிவுக்கு அப்பாஸ் கியரோச்டமி – ஈரானிய திரைப்பட இயக்குநர் (தலைவர்) டேனியலா தாமஸ் – பிரேசிலிய இயக்குனர் Noémie Lvovsky – பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ஜோசிம் ட்ரையர் – நோர்வே திரைப்பட இயக்குனர் Mahamat Saleh ஹாரூனுக்கும் – சாடிய இயக்குனர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . கடந்த வருடம் ஜுரிகள் குழுவில் இந்தியாவை சேர்ந்த வித்தியா பாலன் ,நந்திதா தாஸ் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
சிறந்த திரைப்படங்களை தெரிந்தெடுக்கும் ஜுரிகளாக ,
Richard ANCONINA, actor
Gilles Gaillard, technician
Sophie GRASSIN, journalist and critic
HELENA KLOTZ, director
Lisa NESSELSON journalist
Philippe Van Leeuw, director, director of photography
ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த வருடம் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட படங்கள் ஆக ,
FAREWELL TO LANGUAGE Directed by Jean-Luc Godard
CAPTIVE Directed by Atom Egoyan
TWO DAYS, ONE NIGHT Directed by Jean-Pierre Dardenne, Luc Dardenne
FOXCATCHER Directed by Bennett Miller
FUTATSUME NO MADO (STILL THE WATER) Directed by Naomi KAWASE
JIMMY’S HALL Directed by Ken Loach
THE meraviglie (WONDERS) Directed by Alice Rohrwacher
LEVIATHAN Directed by Andrey ZVYAGINTSEV
MAPS TO THE STARS Directed by David Cronenberg
MOMMY Directed by Xavier Dolan
MR. Directed by Mike LEIGH TURNER
RELATOS SALVAJES Directed by Damián SZIFRÓN
SAINT LAURENT Directed by Bertrand Bonello
SILS MARIA Directed by Olivier Assayas
THE HOMESMAN Directed by Tommy Lee Jones
THE SEARCH Directed by Michel Hazanavicius
TIMBUKTU Directed by Abderrahmane SISSAKO
WINTER SLEEP Directed by Nuri Bilge Ceylan
தெரிவு செயப்பட்டுள்ளன . இந்த தெரிவுகளில் பல கோடிகளை கொட்டி எடுக்கப்படும் ஓர் இந்திய திரைப்படமாவது தெரிவுக்கு வராதது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். சர்வதேச அளவில் விருதுக்கு வருவதற்கு மில்லியன் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை பல படங்கள் மூலம் என்னால் காட்ட முடியும் .உதாரணமாக குறைந்த செலவில் தயாரித்து இயக்கப்படும் ஈரானிய , ஜப்பானிய , மற்றும் கிழக்கு ஐரோப்பிய திரைப்படங்கள் ஒவ்வரு முறையும் போட்டிக்கு தெரிவு செய்யப்படும் நிலையில் இந்திய திரைப்படத்துறை எந்த அளவுக்கு தனது வளர்ச்சிப் பாதையில் நிற்கின்றது என்பது இந்த விடையத்தில் புலனாகின்றது. இந்திய திரைப்படத்துறை பல திறமையான கலைஞர்களையும் இயக்குனர்களை கொண்டிருந்தும் சர்வதேச அளவில் பேசப்படாததிற்கு முக்கியகாரணமாக வர்த்தகநோக்கில் அமைக்கப்பட்ட மசாலா பாணியிலான திரைப்படங்களே ஆகும் . ஆனாலும் ஒரே ஒரு இந்தி படமான Titli Kanu Behl (India)என்ற படம் பார்வைக்காக மட்டும் தெரிவாகியுள்ளது . இந்த தேக்கமான நிலையை இந்திய சினிமாத்துறை உணருமா என்ற இயல்பான கேள்வியும் எழுகின்றது . இதே வேளையில் பல இந்திய நடிகர்கள் வெறும் சுற்றுலாவிற்காக வந்து செல்வதும் ரசிக்கத்தக்கதாக இல்லை .எம்மவர்கள் தயாரிப்பில் வெளி வரும் குறும்படங்களில் திறமைகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் நாங்கள் கடக்க வேண்டிய பாதைகளுக்கான தூரம் அதிகமாகவே காணப்படுகின்றது.
இறுதியாக இந்த தங்க ஓலை விருதுகள் பெற்ற திரைப்படங்களை 1974 இல் இருந்து ஆண்டு வாரியாக இணைக்கின்றேன்
Palme d’Or (1975–present)
Year Film Original title Director(s) Nationality of director
(at time of film’s release)
1975 Chronicle of the Years of Fire Chronique des années de braise Mohammed Lakhdar-Hamina Algeria*
1976 Taxi Driver Martin Scorsese United States
1977 Padre Padrone Paolo and Vittorio Taviani Italy
1978 The Tree of Wooden Clogs § L’albero degli zoccoli Ermanno Olmi Italy
1979 Apocalypse Now Francis Ford Coppola United States
The Tin Drum Die Blechtrommel Volker Schlöndorff West Germany*
1980 All That Jazz Bob Fosse United States
Kagemusha: The Shadow Warrior Kagemusha / 影武者 Akira Kurosawa Japan
1981 Man of Iron Człowiek z żelaza Andrzej Wajda Poland*
1982 Missing § Costa-Gavras Greece*
The Way § Yol Yılmaz Güney and Şerif Gören Turkey*
1983 The Ballad of Narayama Narayama bushikō / 楢山節考 Shohei Imamura Japan
1984 Paris, Texas § Wim Wenders West Germany
1985 When Father Was Away on Business § Otac na službenom putu / Отац на службеном путу Emir Kusturica Yugoslavia*
1986 The Mission Roland Joffé United Kingdom
1987 Under the Sun of Satan § Sous le soleil de Satan Maurice Pialat France
1988 Pelle the Conqueror Pelle erobreren Bille August Denmark
1989 Sex, Lies, and Videotape Steven Soderbergh United States
1990 Wild at Heart David Lynch United States
1991 Barton Fink § Coen Brothers United States
1992 The Best Intentions Den goda viljan Bille August Denmark
1993 Farewell My Concubine Bàwáng bié jī / 霸王別姬 Chen Kaige China*
The Piano Jane Campion New Zealand*
1994 Pulp Fiction Quentin Tarantino United States
1995 Underground Podzemlje / Подземље Emir Kusturica Yugoslavia
1996 Secrets & Lie Mike Leigh United Kingdom
1997 Taste of Cherry Ta’m-e gīlās / طعم گيلاس Abbas Kiarostami Iran*
The Eel Unagi / うなぎ Shohei Imamura Japan
1998 Eternity and a Day § Mia aio̱nióti̱ta kai mia méra / Μιa aιωνιότητa κaι μιa μέρa Theo Angelopoulos Greece
1999 Rosetta § Jean-Pierre Dardenne and Luc Dardenne Belgium*
2000 Dancer in the Dark Lars von Trier Denmark
2001 The Son’s Room La stanza del figlio Nanni Moretti Italy
2002 The Pianist Pianista Roman Polanski France Poland
2003 Elephant Gus Van Sant United States
2004 Fahrenheit 9/11 Michael Moore United States
2005 The Child L’enfant Jean-Pierre Dardenne and Luc Dardenne Belgium
2006 The Wind That Shakes the Barley § Ken Loach United Kingdom
2007 4 Months, 3 Weeks and 2 Days 4 luni, 3 săptămâni şi 2 zile Cristian Mungiu Romania*
2008 The Class § Entre les murs Laurent Cantet France
2009 The White Ribbon Das weiße Band, Eine deutsche Kindergeschichte Michael Haneke Austria*
2010 Uncle Boonmee Who Can Recall His Past Lives Lung Bunmi Raluek Chat / ลุงบุญมีระลึกชาติ Apichatpon Weerasethakul Thailand*
2011 The Tree of Life Terrence Malick United States
2012 Amour Michael Haneke Austria
2013 Blue Is the Warmest Colour § La Vie d’Adèle: Chapitres 1 et 2 Abdellatif Kechiche
(with actresses Adèle Exarchopoulos and Léa Seydoux)[9] France
Tunisia*
திரைப்படங்களின் தந்தைகள் எனப்படும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லுமியர் சகோதரர்கள் 1895 ம் ஆண்டு முதலாவது படத்தினை தயாரித்து Salon indien du Grand Café இந்திய தேனீர் விடுதி என்கிற விடுதியில் முதன் முதலாக மக்களிற்கு திரையிட்டு காட்டியிருந்தார்கள். அது மட்டுமல்லாது சுமார் பத்துப் படங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டு அதே விடுதியில் காண்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே லுமியர் சகோதரர்களால் கண்டு பிடிக்கபட்ட சினிமாவில் ஒரு இந்திய திரைப்படம் விருது பெறுவது எப்போது?
May 18, 2014
மலைகள்
18 வைகாசி 2014
Comments
Post a Comment