"யார் இவர்" ?
"எனது கணவர்".
"எப்படி நம்பிறது" ? "எனது கணவர் என்பதை உறுதிப்படுத்த என்ன வேண்டும்" ?
"விவாகப்பதிவுப் பத்திரம் உள்ளதா" ?
"பொறுங்கள் பஸ்சில் உள்ளது எடுத்துவருகின்றேன்".
இடையில் ஒரு சிப்பாய் எனது கடவுச்சீட்டை அவதனமாகப் பார்த்தான்.
"உங்கள் விசா எங்கே"? என்று முட்டாள்தனமாய் கேட்டான்.
"பிரெஜ் பிரஜைக்கு இங்கு வர விசா தேவையில்லை."
இருங்கள் வருகின்றேன் என்று கடவுச்சீட்டுடன் உள்ளே சென்று மறைந்தான். எனக்குச் சனி தொடங்கி விட்டதோ? மனைவி பஸ்சிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தா. உள்ளே இருந்து திரும்பிய சிப்பாய்
"நீங்கள் பிறந்த இடம் பிரான்ஸ் தானே" ? எனக்குச் சிரிப்புடன் கோபம் எட்டிப்பரர்த்தது . மனைவி பொறுமையாக விளங்கப்படுத்தினா. அவன் என்னைப் பார்த்து
"எம் ஓ டி பெர்மிற் இருக்கா " ?
"உங்கள் இணையத்தளத்தில் இது தேவையில்லை என்று நாங்கள் வெளிக்கிட்ட அன்று 4ம் திகதி காலை போட்டிருந்தீர்களே அதனால் நான் எடுக்கவில்லை". "இன்று மாலை சட்டம் மாற்றப் பட்டுள்ளது".
"உங்ளை தொடரந்து செல்ல அனுமதிக்க முடியாது நீங்கள் கொழும்பு போய் எம் ஓ டி ஐ எடுத்து வாருங்கள்".
"நீங்கள் யாழ்ப்பாணம் போகலாம்"
என்று மனைவியை பாரத்துச் சொன்னான்.
"இன்று மாலை போட்ட சட்டம் எப்படி எங்களுக்குத் தெரியும் "?
"எங்களால் அனுமதிக்க முடியாது " .
இவனிடம் பேசிப் பயனில்லை.
"உங்கள் மேலதிகாரியுடன் கதைக்க வேண்டும்" .
மனைவியின் அருகில் நின்ற பஸ் ட்றைவரிடம் எங்களுடைய பயணப் பொதிகளை இறக்கி விட்டு பஸ்சை எடுக்கும் படி கட்டளையிட்டான் .
எங்களின் பயணப்பொதிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டு மறைந்தது. எங்களுடன் இறங்கிய மற்றய இருவருக்கும் இதே நிலை ஏற்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது. இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. சிறிது தூரத்தில் இருந்த ஏ9 பாதையில் வந்த வாகனங்களின் இரைச்சல் அமைதியைக் குலைத்தது. சிறிது நேரத்தில் ஓர் இராணுவ அதிகாரி எங்களை நோக்கி வந்தான். "என்ன பிரச்சனை "?
எனது மனைவி பிரச்சனையை எடுத்துச்சொன்னா. பொறுமையாகக் கேட்டவன் எனது கடவுச்சீட்டை மீண்டும் ஆராய்ந்தான். "உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்". எங்கள் பதிலை எதிர்பாராது இரண்டு சிப்பாய்களை அழைத்து எங்களுக்கு வாகன ஒழுங்கு செய்து எங்களை உரிய இடத்திற்கு சேர்க்கும்படி கட்டளையிட்டான். ஓர் ஹயேர்ஸ் வண்டி எங்கள் முன்னே வந்து நின்றது. எங்கள் பயணப்பொதிகளை ஏற்றிக்கொண்டு செயின்ற் ஜோசெப் படைமுகாம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.
தொடரும்
June 07, 2011
June 07, 2011
Comments
Post a Comment