என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன். செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் .
தேவையான பொருட்கள் :
கிக்கினி காய் 6 .
உள்ளி 7 - 8 பல்லு .
கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl .
உப்பு தேவையான அளவு .
முட்டை 3 .
போர்மாஸ் துருவல் ( fromage rapé ) ( grated cheese ) 100 கிறாம் .
கறுவாப் பட்டை தூள் தேவையான அளவு .
வெங்காயம் 1 - 2 .ஓலிவ் எண்ணை 3 - 4 மேசைக்கறண்டி.
பக்குவம் :
கிக்கினிக் காயைக் கழுவி வட்ட வடிவில் வெட்டவும் .உங்கள் வெதுப்பியை 200 c யில் விட்டு சூடேற்றவும் . உள்ளியை உடைத்து நசிக்கவும் . முட்டையை உடைத்து கிறாம் லிக்கியுட் உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும் . நசித்த உள்ளி , உப்பு , கறுவாத் தூள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அடியுங்கள் . வெங்காயத்தை துப்பரவு செய்து வெட்டவும் . ஒலிவ் எண்ணையை ஒரு தாச்சியில் விட்டு சூடாக்கவும் . சூடான எண்ணையில் வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும் . வதங்கிய வெங்காயத்துடன் வெட்டிய கிக்கினி காயையும் கொட்டி நீர் இறங்கும் வரை வதக்கவும் . வதங்கிய கலவையை வெதுப்பிக்குப் பாவிக்கும் பாத்திரத்தில் கொட்டி பரவவும் . முட்டையை சேர்த்து அடித்த கிறாம் லிக்கியுட்டை அதனுள் ஊற்றி நன்றாகக் கலக்கவும் . போர்மாஸ் துருவலை அதன் மேல் தூவவும் . வெதுப்பியில் 200 c யில் 30 நிமிடங்கள் கிறில் புறோகிறாமில் விட்டு மூடி விடவும் .
படிமானம் :
பெரிசாய் ஒண்டும் இல்லை . சின்ன ஆக்கள் நல்லா விரும்பி சாப்பிடுவினம் . பெரிய ஆக்களும் சாப்பிடலாம் , கொஞ்சமாய் சாப்பிடவேணும் . ஏனெண்டல் கொஞ்சம் விக்கினமான சாமான் கண்டியளோ .
January 30, 2013
Comments
Post a Comment