11 . இலவம் பூ
இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் செய்பா பெடண்ட்ரா என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது.
இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும்பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும்இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.
நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.
அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!
00000000000000000000000000000000
12 . ஈங்கைப் பூ
ஈங்கை என்னும் புதர்முட்செடியை இக்காலத்தில் “இண்டு” என்பர். இது பற்றி சங்க கால இலக்கியத்தில்ப் பல செய்திகளை நாம் காணமுடியும் . இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்.
நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம் . சங்க காலச் சிறுவர் விளையாடிய வட்டு நெல்லிக்காய் அளவு இருந்த்து. பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும். ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர். புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவை பதுங்கியிருக்கும். ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும்.ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்.
ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும். ஈங்கை முள் வளைவாக இருக்கும். ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும்.
000000000000000000000000000000000000
13 உந்தூழ் பூ
உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம். உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
000000000000000000000000000000
14 எருவைப் பூ
எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.
நாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும்.
கோரை என்பது வேறு தாவரம். அது கணு இல்லாமல் நெல்லம்பயிர் போல வளரும். கோரை பாய் நெய்யப் பயன்படும்.
000000000000000000000000000000000000
15 எறுழ் பூ
ஐங்குறுநூறு 308, ஓதலாந்தையார், பாலை திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் இருங் கூந்தல் மெல்லியலோள் வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
000000000000000000000000000000000000
16 . குறு நறுங் கண்ணிப் பூ
0000000000000000000000000000000000000000000000
17 கரந்தைப் பூ
0000000000000000000000000000000
18 கருவிளைப் பூ
0000000000000000000000000000000000
19 காஞ்சிப் பூ.
காஞ்சி-மரம் மிகுதியாக இருந்த ஊர் காஞ்சி. இதனைக் காஞ்சிபுரம், கச்சி என்றெல்லாம் வழங்குகின்றனர். சங்ககால மன்னன் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான். காஞ்சி மரத்துக்குச் செம்மருது என்னும் பெயரும் உண்டு.
காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்
பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்
காஞ்சிப்பூவின் மணத்தை வதுவை நாற்றம் என்றனர்
மணல் மலிந்த ற்றுத் துறைகளில் மருதும் காஞ்சியும் நெருங்கி வளரும்
காஞ்சிமரம் காமன் போல் அழகு மிக்கது.
மயில் மணிச்சிரல் என்னும் மீன்கொத்தி குயில் முதலான பறவைகள் காஞ்சி காஞ்சி மரத்தில் இருப்பிடம் கொள்வதை விரும்பும்
காஞ்சி இலைகளை ஆயர் தம் ஆடுமாடுகளுக்குத் தீனியாக அறுத்துப் போடுவர் காஞ்சி தழைக்காக வெட்டப்படும்.மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் காஞ்சியும் ஒன்று. அமரும் இருக்கைகள் காஞ்சித் தழையில் செய்யப்படுவது உண்டு. காஞ்சித் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்துகொள்வர்
குறுந்தொகை 10, ஓரம்போகியார், பாலை திணை – தோழி சொன்னது,
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே.
குறுந்தொகை 127. மருதம் திணை – -ஓரம் போகியார் – தோழி தலைவனிடம் சொன்னது
குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.
000000000000000000000000000
20 காந்தள் பூ
Comments
Post a Comment