54 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் )
000000000000000000000000000000000000000000000
55 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் )
00000000000000000000000000000000000000000000
00000000000000000000000000000000000000000000000
57 பசும்பிடிப்பூ .
ப தி ற் று ப் ப த் து
மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை .
பாடியவர் – அரிசில் கிழார் .
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பு ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (22 – 25)
0000000000000000000000000000000000000000000000
58 பயனிப் பூ .
000000000000000000000000000000000000000000
59 பலாசம் பூ .
000000000000000000000000000000000000000000
60 பாங்கர்ப் பூ.
நற்றிணை 98 குறிஞ்சி திணை – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தலைவி சொன்னது.
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.
0000000000000000000000000000000000000000
61 பாதிரிப் பூ ( தேங்கமழ் பாதிரி )
குறுந்தொகை 147. பாலை திணை, -கோப்பெருஞ் சோழன் – தலைவன் சொன்னது.
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
பாதிரி (Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
இதன் வேர் – சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும். இதன் காய் – அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும். இதன் பூ – நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது (சங்ககால மலர்கள்) கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறத
நற்றிணை 52, பாலத்தனார், பாலை திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது .
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.
000000000000000000000000000000000000
அகநானூறு 99, பாலைப் பாடியப் பெருங்கடுங்கோ
பாலை திணை தலைவன் , தலைவியிடம் சொன்னது
வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம,
கண்டிசின வாழியோ – குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ
0000000000000000000000000000000000000000
62 பாரம்பூ .
இந்தப் பூவானது பருத்திப் பூ என்றும் அழைக்கப்படும் .
00000000000000000000000000000000000000
63 பாலைப் பூ
ஐங்குறுநூறு 317
ஓதலாந்தையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சூழ்கம் வம்மோ தோழி பாழ் பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே.
தொடரும்
கோமகன்
Comments
Post a Comment