இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ?
தேவையான பொருட்கள் :
உள்ளி 10 - 12 பல்லு .
செத்தல் மிளகாய் 6 - 7 . ****
தக்காளிப்பழம் 2 .
கறிவேப்பமிலை 4 - 5 இலை.
கல்லு உப்பு ( தேவையான அளவு ) .
எண்ணை 5 தேக்கறண்டி .
கடுகு கால் தேக்கறண்டி .
பக்குவம் :
தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு , சூடாக எண்ணை மெதுவாக மேலே வரும்பொழுது இறக்கி விடவும் .
படிமானம் :
தோசை , இட்டலி , றொட்டி , பாணுக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கோ பேந்து விடமாட்டியள் .
***** நல்ல உறைப்பாக வேண்டுமானால் செத்தல் மிளகாயின் அளவைச் சிறிது கூட்டுங்கள் .
January 27, 2013
Comments
Post a Comment