இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் .
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் 2
வாழைக்காய் 2
சின்னவெங்காயம் 8 - 10
பச்சைமிளகாய் 7 - 8
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லிக் கீரை 4 - 5
கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக்கறண்டி
பக்குவம் :
வெதுப்பியை 250 யில் சூடாக விடுங்கள் . கத்தரிக்காய் , வாழைக்கய் ஆகியவற்றின் மேல்ப் பக்கத்தையும் , கீழ் பக்கத்தையும் கத்தியால் வெட்டுங்கள் . இரண்டையும் ஈயப்பேப்பறால் சுற்றி , கத்தியால் ஈயப்பேப்பறை சிறு ஓட்டைகள் போடுங்கள் . வெதுப்பி சூடாகியதும் ஈயப்பேப்பறால் சுற்றிய கத்தரிக்காயையும் ,வாழைக்காயையும் 30 - 40 நிமிடங்கள் வரை கிறில் செய்யுங்கள் . பச்சைமிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் துப்பரவாக்கி குறுணியாக வெட்டி எடுங்கள் . கத்தரிக்காய் , வாழைக்காய் சூடாகியதும் சிறிது ஆறவிட்டு , இரண்டினதும் தோலை உரித்து எடுத்து , சிறய துண்டுகளாக வெட்டுங்கள் . வெட்டிய வெங்காயம் , பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வெட்டிய துண்டுகளுடன் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள் . கிறாம் பிறெஷ் ஐயும் சேர்த்து பிசைந்து உப்புச் சேருங்கள் . இறுதியாக சுவை சேர்க்க கொத்தமல்லிக் கீரையை நுள்ளி சம்பலில் சேர்த்து விடுங்கள் .
படிமானம் :
உபவசம் இருந்து போட்டு பொன்னி அரிசி சோறு அல்லது சம்பா அரிசிச் சோறு மரக்கறியோடை , இதையும் சாப்பிட்டுப் பாருங்கோ சொல்லிவேலையில்லை .
January 29, 2013
Comments
Post a Comment